எம்சாண்ட் மணலில் கட்டப்படும் கட்டடங்கள் உறுதியாக இருக்குமா?

 எம்சாண்ட் மணலில் கட்டப்படும் கட்டடங்கள் உறுதியாக இருக்குமா?

Msand அதாவது கற்களை உடைத்து அதில் இருந்து எடுக்கும் பொருளை நாம் Manufacture Sand (Msand) என்கிறோம்.

மேலை நாடுகளில் இவை தற்போது அதிகப் பயன்பாட்டில் உள்ளன. நமது நாட்டில் இன்று கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் இவை கொண்டுதான் கட்டப்படுகின்றன. ஆகவே நீங்கள் தாராளமாக Msand பயன்படுத்தலாம்.

கான்கிரீட் என்பது மண், ஜல்லி, சிமெண்ட், நீர், ஆகியவை சேர்ந்த ஒரு கலவை ஆகும்.இதில் சிமெண்ட் ஒரு பசை போல செயல்பட்டு மண் மற்றும் ஜல்லி கற் களைப் பிடித்துக் கொள்கிறது.

நீர் புகாத முறையில் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு வேதி வினையை நிகழ்த்து கிறது. இந்த வேதி வினை நிகழும் பொழுது அதிகப்படியான வெப்பத்தை வெளி யிடுகின்றன. இவற்றின் வெப்பத்தைத் தனிக்கவே கான்கிரீட் இட்டு சில மணி நேரம் கழித்து நீராற்றபடுகின்றன.

கான்கிரீட் தன்னுடைய முழு வலுவை அடைய 28 நாட்கள் ஆகும். இதில் மணல் என்பது ஜல்லி கற்களுடன் ஒட்டிப் பிடிக்கப் பயன்படுத்தும் பொருள்தான். ஆகவே நீங்கள் தாராளமாக Msand பயன்படுத்தலாம். ஆனால் இவற்றை வாங்கும் முன் அதன் தரத்தை உறுதி செய்து கொள்ளவும். சந்தையில் தரமற்ற Msand வலம் வருகின்றன.

மேலும் நீங்கள் பயன்படுத்தும் சிமெண்ட், மண், ஜல்லி, நீர், இவை மட்டுமே உங்களுடைய கான்கிரீட்டை வலுப்பெறச் செய்யாது. மாறாக எந்தத் தரத்தில் concere தயாரிக்கிறார்கள் என்பதுதான் கான்கிரீட்டை வலுப்படுத்தும். M20, M25, M30 என பல வகை உள்ளன. வீடுகளுக்கு M20 போதுமானது.

நீங்கள் Msand பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் அதனுடன் Dr.Fixit LW+ என்ற வேதியல் பொருளை ஒரு சிமெண்ட் மூட்டைக்கு 200 ml என்ற விகித்தில் கான்கிரீட் கலைவயில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தயாரிப்பு முறை என்ன?

செயற்கை மணல் எனப்படும் எம்-சாண்ட் (MSAND) பற்றிப் பலருக்கு மனதில் பல்வேறு கேள்விகள் இருப்பது உண்மை. எம்சாண்ட் தயாரிப்பு முறை மற்றும் பயன்பாடு போன்ற நிலைகளில் கட்டுமான வல்லுநர்கள் அளித்துள்ள தகவல்கள் என்ன சொல்கிறது என்றால், பொதுவாக எம்-சாண்ட் என்பது கருங்கற்களி லிருந்து சரியான அளவுகளில் (2.36 மி.மீ. முதல் 4.75 மி.மீ.) இயந்திரங்களால் (Vertical Shaft Impact CrusherVSI) உடைக்கப்பட்டு சலிக்கப்படுகிறது.

அதிலிருந்து பொடியான நுண்ணியத் துகள்கள் தண்ணீர் ஊற்றி முற்றிலும் கழுவப்பட்டு அதன் மீதுள்ள தூசு துப்புகள் முற்றிலும் அகற்றப்படுகிறது. ஆற்று மணலில் இருக்கக்கூடிய வண்டல் மண், களிமண் துகள்கள், பிற பொருள்கள் போன்ற சிக்கல்கள் செயற்கை மணலில் கிடையாது.

எம்-சான்ட் கலந்த சிமெண்டு கலவை மூலம் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் அமைப் பின் தாங்குதிறன் ஆற்று மணலின் தாங்குதிறனைவிட அதிகமாக இருப்பதைப் பல சோதனை முடிவுகள் குறிப்பிட்டுள்ளன. நமது பக்கத்து மாநிலங்களான கேரளா, கோவா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் அந்தமான் ஆகியவற்றில் மேற் கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளில் எம்-சான்ட் பெரிதும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், மத்திய கிழக்கு நாடுகளும் அவற்றின் கட்டுமானங்களில் பல ஆண்டு களாக எம்-சான்ட் பயன்படுத்துவதும் அறியப்பட்டுள்ளது. செயற்கை மணல் பயன்படுத்தப்படும் சிமெண்டு கலவை மற்றும் கான்கிரீட் அமைப்புகளுக்குப் பொறியாளர்கள் வழிகாட்டுதல்படி பிணைப்பு மற்றும் சிறப்பான கலவைத் தன்மைக்காக ‘Super plasticiser’ ரசாயனம் பயன்படுத்தலாம்.

கிரஷர் டஸ்ட் மற்றும் எம்-சாண்ட் ஆகிய இரண்டும் ஒன்றுதான் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், அவை இரண்டும் முற்றிலும் வேறானவை. கிரஷர் டஸ்ட் என்பது ஜல்லிகளை உடைக்கும்போது உருவாகும் கழிவுப் பொருள். அவற்றைக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்துவது கூடாது. ஆனால் எம்-சாண்ட் என்பது மிகச் சிறிய ஜல்லி போல் உடைக்கப்பட்டு, தண்ணீர் தொட்டி யில் சுற்றும் சல்லடை மூலம் அலசப்பட்டு, கிரஷர் தூசிகள் நீக்கி சுத்தமாகத் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது.

எம்-சாண்ட் கான்கிரீட் கலவை உறுதியானது என்பது ஆய்வக சோதனை களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றுமணலில் இயற்கையாக உள்ள Chemical Impurities மாற்றுமணலில் இருக்காது என்பதால் எம்-சாண்ட் கலவையே உறுதி யானது. பூச்சுக் கலவையின் ஒட்டும்தன்மை சற்று குறைவாகவே இருக்கும். அந்தக் குறையைச் சரி செய்யும் வகையில் Fineness அதிகமுள்ள P-SAND (Plastering Sand) சந்தையில் கிடைக்கிறது.

பாறையின் மேலடுக்குகளில் கிடைக்கக்கூடிய வெளிர் நிறக்கற்களை அரைத்து வரக்கூடிய எம்-சாண்ட் சற்றே ஆற்று மணல் நிறத்தில் இருக்கலாம். பாறையின் கீழ் அடுக்குகளில் உள்ள கரும்பாறைகளை அரைத்து கிடைக்கக்கூடிய கறுப்பு நிற எம்-சாண்ட் ஒப்பீட்டு அளவில் உறுதியானதாக அறியப்பட்டுள்ளது. கான்கிரீட் அமைப்புகளுக்கு கறுப்பு மணல் ஏற்றது. இயற்கை வளம் காக்கப்பட்டு சுற்றுச் சூழல் நிலைத்திருக்க வேண்டுமானால் மாற்று கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பல்வேறு சோதனையின் முடிவில் ஆற்று மணலைவிட எம்சாண்ட் அதிக வலிமை உடையதாக மற்றும் சிறந்ததாக நிரூபணம் ஆகி இருக்கின்றது. அது மட்டும் அல்லாது பல நிறுவனங்களில் கடந்த சில வருடங்களாகவே இந்த செயற்கை மணலைத்தான் அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்துகிறோம். அதில் எந்த ஒரு பிரச்சினையும் இருப்பதாக நான் கருதவில்லை.

எம். சாண்ட் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை

  1. கலவையில் சரியான விகிதத்தில் சிமெண்ட் மற்றும் எம்.சாண்ட் கலக்கப்படு கின்றதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். ஏனெனில் இயற்கையாகவே எம். சாண்ட் கறுப்பு நிறத்தில் இருப்பதால் குறைவான அளவு சிமெண்ட் இருந்தாலும் வித்தியாசம் தெரியாது.
  2. சரியான விநியோகஸ்தரிடம் இருந்து நல்ல எம். சாண்ட்தான் பெறப்படுகிறதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அல்லது நீங்கள் வாங்கும் எம்சாண்ட்டை அருகில் ஏதேனும் ஆய்வகம் இருப்பின் அங்கே கொடுத்து வரையறுக்கப்பட்ட தரத்துடன் உள்ளதா எனத் தெரிந்து கொள்ளுங்கள்.
  3. மேலும் எம் சாண்ட் பயன்படுத்தும்போது கலவையுடன் இளக்கி (Dr.fixit 101 Lw+) கலந்து பயன்படுத்துவது சிறந்தது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...