தம்பதிகள் இணைபிரியாமல் இருக்க ‘அசூன்ய சயன விரதம்’

 தம்பதிகள் இணைபிரியாமல் இருக்க ‘அசூன்ய சயன விரதம்’

சிராவண (ஆடி) மாத கிருஷ்ணபட்ச துவிதியை திதியானது, ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள். அன்று அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. நாளைய தினம் (13.8.2022) அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

நாளை அனைத்து வைணவத் தலங்களிலும் முக்கியமாக சயன  கோலத்தில் இருக்கும் தலங்களில் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.  அசூன்யம் என்றால் சூனியம் இல்லாதது என்று பொருள். சயனம் என்றால் படுக்கையில் படுத்தல். நல்ல தூக்கம் மட்டுமல்ல நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக் களும் பொருட்களும் நம்மை விட்டுப் போகாமல் இருக்க அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில் ஒரு குறிப்பு வருகிறது.

ஆலயத்தில் ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டுவிட்டு வீட்டில் ஸ்ரீகிருஷ்ணர் சிலை அல்லது படத்தை வைத்து தம்பதிகளாக பூஜை செய்து வழிபட வேண்டும்.

கிருஷ்ணருக்கு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண் டும். புதிதாக வாங்கப்பட்ட பஞ்சு மெத்தை தலையணை போர்வையுடன் கூடிய படுக்கையில் ஸ்ரீகிருஷ்ணரையும், மகாலட்சுமியையும் படுக்க வைக்க வேண்டும்.

பிறகு ‘‘கிருஷ்ணா, எவ்வாறு மகாலட்சுமியுடன் எப்போதும் தாங்கள் சேர்ந்தே இருக்கிறீர்களோ அப்படியே நானும் எனது மனைவியுடன்-கணவனுடன் என்றும் இணைபிரியாமல் ஒன்று சேர்ந்தே இருக்க அருள்புரிய வேண்டும்” என்னும் சுலோகம் சொல்லி பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய அசூன்ய சயன விரத நாளில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து முதலில் விக்நேஸ்வர பூஜை, குரு பூஜை பிறகு விஷ்ணு பூஜை, ஸ்ரீரங்கநாதாஷ்டகம் மற்றும் ஸ்ரீரங்கநாதர் துதிகளை ஓதி, வேண்டும். ஸ்ம்ருதி கெளஸ்துபம்-147ல் சொல்லியபடி (லக்ஷ்மியா வியுஜ்யதே தேவ ந கதாசித் யதோ பவான் ததா களத்ர ஸம்பந்தோ தேவ மா மே வியுஜ்யதாம்) “நானும் எனது மனைவியும் / நானும் எனது கணவரும் க்ருஷ்ணா, மஹா லக்ஷ்மியுடன் தாங்கள் சேர்ந்து இணை பிரியாமல் இருப்பது போல நாங்களும் சேர்ந்து இருக்க அருள்புரிய வேண்டும்” என இந்த ஸ்லோகம் சொல்லி வேன்டிக் கொள்ளவும். 

சயனக் கோல மூர்த்தி ஆலயங்களில் தரிசித்தல் வேண்டும். அன்று மாலை பூஜையறையில் ஸ்ரீகிருஷ்ணர் – மகாலட்சுமி விக்ரகம் அல்லது படத்தை வைத்து தம்பதிகளாக பூஜை செய்து, காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்து, புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை, தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் ஸ்ரீகிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் படுக்க வைக்க வேண்டும்.

ரங்கநாத அஷ்டகம் கிருஷ்ணாஷ்டகம் மற்றும் பெருமாளுக்குரிய தோத்திரப் பாடல்களைப் பாடி அர்ச்சனை செய்ய வேண்டும்.  ஏலக்காய், குங்குமப்பூ போட்டு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும்.

மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை மறுபடியும் ஸ்ரீகிருஷ்ணர், லட்சுமி விக்ர கங்களுக்கு பூஜை செய்ய வேண்டும். கிருஷ்ணரை படுக்க வைத்த அந்தப் புதிய படுக்கையை தானம் தந்துவிட வேண்டும். இவ்வாறு செய்பவர் வீட்டில் ஸ்ரீகிருஷ்ணர் அருளால் படுக்கை எப்போதும் கணவன்-மனைவியுடன் சேர்ந்த தாகவே இருக்கும். ஒரு போதும் தம்பதிகள் பிரிய மாட்டார்கள் என்பது ஐதீக மாகும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...