டாக்டர் பணி இன்னொரு இறைப்பணி

 டாக்டர் பணி இன்னொரு இறைப்பணி

டாக்டர்களின் பணி உலகம் முழுவதும் ஓர் உன்னதமான தொழிலாகப் போற்றப் படுகிறது. உலகில் இறைவனுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண் டெனில், அவர் மருத்துவராகத்தான் இருக்க முடியும்.

புகழ்பெற்ற மருத்துவராகவும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்ச ராகவும் இருந்த பி.சி.ராய் என்றழைக்கப்படும் பிதான் சந்திரா ராய். பீகார் மாநிலம் பாட்னா அருகேயுள்ள பாங்கிபோர் என்ற ஊரில் 1882-ஆம் ஆண்டு, ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தவர், பி.சி.ராய். ஏழைகள் மீது மிகுந்த அன்பு கொண்ட அவர், மருத்துவப் பணிக்காக தன்னையே அர்ப்பணித்தவர். தேசப்பிதா மகாத்மாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த பி.சி.ராய், அவருடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகவும் போராடியுள்ளார்.

தனது வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனை கட்ட வழங்கிய மருத்துவர் பி.சி.ராய், முதலமைச்சராக இருந்த காலத்திலும் ஏழைகளுக்கு நாள்தோறும் இலவச மருத்துவம் பார்த்தவர். ராயின் நினைவைப் போற்றும் விதமாக அவரது பிறந்த மற்றும் இறந்த தினமான ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

பி.சி.ராய்க்கு புகழாரம் சூட்டும் வகையில், 1991ஆம் ஆண்டு முதல் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மார்ச் 30ஆம் தேதி மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனாலும், மருத் துவர் பி.சி.ராயின் நினைவாக, இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

டாக்டர்களோடு சேர்த்து சிறந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் செவிலியர், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற பலரது கூட்டுமுயற்சி அடங்கியுள்ள போதி லும், அந்தக் குழுவை வழிநடத்திச் செல்பவர் மருத்துவர்தான். அந்த வகையில் இந்தியா, பல பிரபலமான மருத்துவர்களை உருவாக்கி உள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் டாக்டர்களுடைய பங்கு மிகவும் முக்கியமானது. மருத்துவர்களை நாம் கெளரவிப்பதற்கான ஒரு நாளாக இந்த நாள் உள்ளது.

அமெரிக்காவில் மார்ச் 30 அன்று தேசிய மருத்துவர் தினமானது கொண்டாடப் படுகிறது. இந்த கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவத் துவங்கியது முதலே மக்களின் உயிரை காப்பதற்காக காலம் நேரம் பார்க்காமல் வீட்டிற்கு கூட செல்லாமல் மருத்துவர்கள் பணி செய்து வருகின்றனர். இந்தக் கால கட்டத் தில் பல மருத்துவர்கள் இந்தக் கொடிய கொரோனா வைரஸால் பாதிக் கப்பட்டனர்.

தொற்று பரவ துவங்கிய ஆரம்பக்கட்டத்தில் வைரஸ் சிகிச்சை பற்றி எந்த தெளிவும் இல்லாதப்போது பல மருத்துவர்கள் தங்களின் அனுபவத்தை பயன் படுத்தி நோயாளிகளை குணப்படுத்த முயன்றனர். பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளைக் கொண்டு அவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அந்தச் சமயத்தில் மருத்துவமனையில் மருத்துவர்களுக்குப் போதுமான தனிப் பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்கூட இல்லாத காலமாக இருந்தது. ஆனாலும் மருத்துவர்கள் யாரும் தங்களது கடமையில் இருந்து பின்வாங்க வில்லை. சமூகத்தின் நன்மைக்காக அவர்கள் தொடர்ந்து கொரோனாவிற்கு எதிராக போராடி வந்தனர்.

இந்த கடினமான காலங்களில் பல மருத்துவர்கள் சிகிச்சை பெறமுடியாதவர் களுக்கு ஆன்லைன் மூலம் இலவச ஆலோசனையை வழங்கி வந்தனர். எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடைக்காத கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சில மருத்துவ வல்லுநர்கள் குழு கிராமப்புறங்களுக்கும் சென்றது.

இப்படியாக கொரோனாவுக்கு எதிராக போராடி மக்களைக் காப்பாற்ற மருத்துவர் கள் எடுத்துக்கொண்ட பணி கொரோனா தாக்கத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இன்றைய நாளில் அவர்களை கெளரவிப்பதே நாம் அவர் களுக்குச் செய்யும் கடமையாக இருக்கும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.