உலக தம்பதியர் தினம் 2022

 உலக தம்பதியர் தினம் 2022

தம்பதிகளின் ஒற்றுமைக்குப் புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகள் முக்கியமானவை. அவற்றை அடித்தள மாகக்கொண்டே திருமண பந்தம் எனும் கோட்டை எழுப்பப்படுகிறது.

தாம்பத்ய வாழ்க்கை என்பதற்கான நோக்கமே கணவன், மனைவி, குழந் தைகள் என்ற சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடு. இந்த வரிசைப்பாடு இல்லை என்றால் அது ஒரு மலட்டு வாழ்வு.

அதற்கு திருமண பந்தம் என்பதை உருவாக்காமல் இரு தனிப்பட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக மட்டும் இருக்கலாம். ஆனால் அதைச் சமூகம் ஏற்காது.

நல்ல உடல் நலம் , மன நலம் கொண்ட கணவன் , மனைவியால் , என்ன வயதானாலும், குடும்ப சூழ்நிலை சரியாக இருக்கும் பட்சத்தில், தாம்பத்ய வாழ்க்கை இல்லாமல் நாட்களை நகர்த்த முடியாது

கணவன் மனைவி இருவரும் அவர்களின் கஷ்டங்களைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

கணவன் — மனைவி வீட்டை சமாளித்து, குழந்தைகள் பராமரித்து, கணவரின் பெற்றோரை அனுசரித்து, மனைவியின் சுமையை அவளின் கஷ்டங்களையும் வேதனைகளையும் அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.

மனைவி — கணவனின் கஷ்டங்களையும் வேதனைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். கணவன் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பெற் றோர்களுக்கும் இரவு பகல் பாராமல் உழைக்கிறார் என்று மனைவி உணர வேண்டும்.

மனைவியின் கஷ்டத்தை கணவனும், கணவனின் கஷ்டத்தை மனைவியும், இருவரும் புரிந்து நடந்து கொண்டால் அவர்கள்தான் சிறந்த தம்பதிகள்.

பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாக இருந்தாலும், இரு மனங்கள் ஒன்றிணைந்து செய்த காதல் திருமணமாக இருந்தாலும், கைப்பிடித்த நாள் முதல் ஆயுளின் இறுதி வரை கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டும். இதை வலியுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 29-ந் தேதி உலகம் முழுவதும் ‘சர்வதேச தம்பதியர் தினம்’ கொண்டாடப்படுகிறது.

மாறிவரும் வாழ்க்கை முறையால் பல தம்பதிகளுக்குள் நெருக்கம் குறைந்து வருகிறது. அதன் வெளிப்பாடாக உறவில் விரிசல் ஏற்படுகிறது. அதில் மூன்றாம் நபர்களின் தலையீடு, வாக்குவாதங்கள் போன்றவை அதிகரிக்கும்போது, ஒற்றுமையாலும், அன்பாலும் கட்டப்பட்ட கோட்டை தகர்ந்துவிடும். எனவே எந்த நிலையிலும் கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல், மனம்விட்டுப் பேசி, புரிந்துணர்வோடு வாழ்வதே திருமண பந்தம் நிலைப்பதற்கான நல்வழியாகும்.

கணவன் மனைவி என்னும் மண உறவு என்பது ஒரு தனி கு ணத்தைக் கொண்டது. இந்த உறவை வேறு எதற்கும் ஒப்பிட முடியாது. மனிதகுலம் பிழை த்திருப்பதின் அடிப்படையே இனப்பெருக்கம் தான். இனப்பெருக்கத் தின் அதிகாரப்பூர்வமான அமைப்பு தான் குடும்பம். குடும்பத்தின் அடிப் படை இல்லற வாழ்வே.ஆக கணவன் மனைவி இடையே ஒரு தெளிவான புரிதல் இருக்கவேண்டும். என்னவிதமான புரிதல் இருக்க வேண்டும்?

முதலில் கணவன் மனைவி என்பவர்கள் ஒரு ஜோடி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.ஜோடி என்றால் இரண்டும் இணைந்து வேலை செய் வது என்று பொருள்.Pair of scissors என்று சொல்வார்கள். கத்தரிக்கோலின் இரண்டு பகுதியும் சேர்ந்துதான் ஒன்றை வெட்ட முடியும். அதுபோல, கால்களை சொல்லலாம்.இரண்டு கால்களும் ஒத்துபோனால்தான் ஒழுங் காக நடக்க முடியும். வலது கால் முதல் அடி எடுத்து வைக்கும். இடது கால் அதைப் பின் தொடர்ந்து அடுத்த அடி எடுத்து வைக்கும்! வலது காலை இடது கால் முந்த நினைக்கக் கூடாது! ஒரு குழப்பம் வந்துவிடும்!இரண்டும் இணைந்து ஒத்து நடந்தால் தான் முன்னால் போக முடியும் . இடது கால் எனக்கு தனியாக வாழ உரிமை உண்டு என்று பேசக்கூடாது!மண வாழ்வும் அப்படித்தான்.

கணவன் நடத்திச் செல்ல வேண்டும். மனைவி அதற்கு ஒத்தாசையாக நடக்க வேண்டும். ஒரு கப்பலுக்கு ஒரு மாலுமி தான் உண்டு. அதுபோலத் தான் குடும்ப கப்பலும் என்ற அடிப்படை புரிதல் வேண்டும்.மண வாழ்வை இயக்கும் சக்தியாக அன்பு தான் அமைய வேண்டும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...