பிரெயின் டூமருக்கு புதிய மருந்து…இனி கவலையே பட வேண்டாம்..!!
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கும் மூளை புற்றுநோய் கட்டி பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய புதிய மருந்து ஒன்றினை குறித்து போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் மூளை கட்டி ஆராய்ச்சி மையம் ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளன.
போர்ச்சுகல்லை சேர்ந்த ஆல்கர்ப் பல்கலைக்கழகம், ஐக்கிய ராஜ்யத்தை சேர்ந்த லிவர்பூல் பல்கலைக்கழகம் மற்றும் இன்னோவேட்டிவ் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து டாக்டர் ரிச்சர்ட் ஹில் என்பவர் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
மூளை புற்றுநோய்..
மூளையில் உள்ள புற்றுநோய் கட்டிகளை சுருங்கச் செய்வதற்கு ஐபி1867பி (IP1867B) என்ற மருந்துக்கு உதவுவதாக இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சில சிகிச்சைகளை ஏற்று மறுவினை புரியக்கூடிய வண்ணம் உடலை ஐபி1867பி தூண்டுவது அறியப்பட்டுள்ளது.
மரணங்கள்..
புற்றுநோய்க்கான சிகிச்சையில் வெற்றியின் அளவு மிகக்குறைவாக இருக்கும் நிலையில் ஐபி1867பி மருந்தின் கண்டுபிடிப்பு ஒரு புரட்சிகரமான சாதனையாக பார்க்கப்படுகிறது. புற்றுநோய் கட்டிகள் சிகிச்சை தம்மை தாக்காமல் மறைந்து கொள்ளுமளவுக்கு தடுப்புத்தன்மையை வளர்த்து கொள்ளுதல், சிகிச்சை மருத்துவ ரீதியாக பலனளிக்காமலிருத்தல், தீவிர பக்க விளைவு மற்றும் இரத்தம் மூளை இவற்றின் தடுப்பினை ஊடுருவி செயல்படும் ஆற்றல் மருந்துக்கு இல்லாமை உள்ளிட்ட பல காரணங்கள் புற்றுநோய்க்கான சிகிச்சையின் வெற்றியை மட்டுப்படுத்துகின்றன. இவற்றையெல்லாம் ஐபி1867பி தாண்டி செயல்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது.
ஆஸ்பிரின்..
ஆஸ்பிரின், டிரைஅசிட்டின் மற்றும் சாச்சரின் ஆகிய மருந்துகளின் கூட்டுப்பொருளான ஐபி1867பி, மைய நரம்பு மண்டலத்தில் உருவாகும் கிலியோமா புற்றுநோய் கட்டிகளின் அளவை குறைக்க பயன்படுவதாக புற்றுநோய்க்கான கேன்சல் லட்டர்ஸ் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ள, ஆய்வு கட்டுரையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஆஸ்பிரின் மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வதால் செரிமான மண்டல உணவு குழலில் பிரச்னைகளை குறைக்கவும் ஐபி1867பி உதவுகிறது.
ஜிபிஎம்..
மனித மூளையில் ஏற்படும் தீவிர புற்றுநோயான ஜிபிஎம் எனப்படும் கிலியோபிளாஸ்டோமாவுக்கு எதிராகவும் ஐபி1867பி செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். முற்றிலும் புதிய மருந்து தயாரிக்க வேண்டுமென்றால் பல ஆண்டு காலம் எடுப்பதோடு அதிக செலவும் ஆகும். நவீன உத்திகளை உருவாக்கி சோதனைக்குட்படுத்தி பார்க்கும் முயற்சியில் மிக வேகமாக சிகிச்சை முறை நெருங்கிவிட்டோம். மற்றபடி இது சாத்தியமற்ற ஒன்று என்று ஆராய்ச்சி குழுவின் தலைவர் டாக்டர் ஹில் கருத்து தெரிவித்துள்ளார்.
பரிசோதனை..
பயன்படுத்த வேண்டிய கால அளவை குறைக்கும் வண்ணம் ஐபி1867பி மருந்தின் செயல்பாட்டை பாதுகாப்பான முறையில் அதிகரிப்பதற்காக அதனுடன் இணைந்து பாதுகாப்பாக வினைபுரியத்தக்க ஏனைய மருந்துகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், இன்னும் ஏராளமான பணிகள் செய்யப்பட வேண்டியதிருப்பதாகவும், எதிர்கால ஆய்வுகள் பரவசமூட்டுபவையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பல்வேறு கூட்டு கலவையில் மருந்தின் செயல்பாட்டை புரிந்து கொள்வதற்காக ஐபி1867பி மருந்தில் அடங்கியுள்ள மூன்று முக்கிய மருந்துகளையும் தனித்தனியாகவும் வெவ்வேறு இணைவிலும் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்து பார்த்துள்ளனர். வேதிய சிகிச்சை மருந்துகளில் சிலவற்றை காட்டிலும் ஐபி1867பி தீவிர பலன் அளிப்பது தெரிய வந்துள்ளது.
ஐபி1867பி மருந்து..
ஐபி1867பி மருந்து, எபிடெர்மல் என்னும் தோலின் புற அடுக்கில் ஏற்படும் வளர்ச்சி காரணி வாங்கியின் செயல்பாட்டை தடுப்பதோடு, இன்சுலின் போன்ற கட்டமைப்பு கொண்ட காரணி 1ன் வளர்ச்சி பாதையையும் தடுக்கிறது. தோலின் புற அடுக்கில் ஏற்படும் வளர்ச்சி காரணி வாங்கியின் செயல்பாட்டை மட்டுப்படுத்தும் புறக்காரணிகளின் வினையை தடுக்கக்கூடிய புற்றுநோய் கட்டியின் திறனை இம்மருந்து குறைக்கிறது. இம்மருந்து பல்வேறு இலக்குகளின்மேல் தாக்கத்தை நிகழ்த்தி, கட்டி வளர்த்துக்கொண்ட தடுக்கும் திறனை நீக்கி, பழைய நிலைக்கு திரும்ப செய்கிறது.