இயற்கை மருத்துவம் உடல் சூடு குறைய-நிரந்தர தீர்வு
இன்றைய காலக்கட்டத்தில் பருவநிலை ஒரே சீராக இருப்பதில்லை. மழைக்காலத்தில் வெயில் அதிகம் காணப்படுகின்றது.வெயில் காலத்தில் மழை அதிகம் காணப்படுகின்றது. இதனால் நம் உடலில் ஏற்படும் நோய்களில் மிக முக்கியமானது உடல் சூடு ஆகும். அந்த உடல் சூடு குறைய நம் வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து செய்யகூடிய மருந்தை பற்றி இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
மேலும் உடல் சூடு ஏற்படுவதற்கான மற்ற காரணங்கள்:
உடல் சூடு எதனால் ஏற்படுகிறது என்றால் அதிக நேரம் கம்ப்யூட்டர் மற்றும் டிவி முன்னால் அமர்வதனால், ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு மொபைல் பார்ப்பது, அடிக்கடி அதிக தொலைவில் பயணம் செய்வதனால்,ஷோபா மற்றும் சேர்களில் அதிக நேரம் அமர்வதனால், மற்றும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.
உடல் சூட்டினால் ஏற்ப்படக்கூடியப் பாதிப்புக்கள் :
ஆண்மை குறைவு,நரம்பு தளர்ச்சி,
உடலில் சூட்டுக்கட்டிகள் தோன்றுதல்
அதிக தலைவலி
அதிக வயிற்று வலி
கண் எரிச்சல்
தலைமுடி உதிர்தல்
தோல் நோய் எற்ப்படுதல்
உடல் எடை குறைதல்
முகப்பரு ஏற்படுதல்
உடல் சூடு குறைய நமது முன்னோர்கள் சொல்லிகொடுத்த ஈடு இணையற்ற ஒரு வழி எண்ணெய் குளியல். ஆனால் இப்பொழுதுள்ள இயந்திர வாழ்க்கையில் உடலில் எண்ணெய் தேய்த்து அதை ஊற வைப்பதற்கெல்லாம் நமக்கு ஏது நேரம்?
இப்படி நேரம் இல்லாதவர்கள் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே தலையில் மட்டும் நல்லெண்ணெய் தேய்த்து பின் குளித்து வந்தால் முழு எண்ணெய் குளியலில் கிடைக்கும் பயன்களில் ஒரு கால்வாசி அளவாவது கிடைக்கும்.
அதுவும் முடியாதவர்கள் கீழே உள்ள சித்தர்கள் சொன்ன முறையை செய்து பாருங்கள்
தேவையான பொருட்கள் :
1.ஆமணக்கு-50g
2.கருங்கீரகம்-50g
3.கருப்பு எள்-50g
4.அஸ்வகந்தா-50g
5.துளசி-10g
6.வேம்பு கொட்டை-50g
7.பட்டை-10g
8.வெந்தயம்-50g
9.கடுகு-50g
10.மிளகு-20g
11.பச்சை நன்னாரி வேர்-50g
12.வெள்ளரி விதை-10g
13.அருநெல்லி-50g
👆👆👆👆👆
இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
செய்முறை:
மேலே குறிப்பிட்ட மூல பொருட்களை வெயிலில் இரண்டு நாட்கள் நன்கு வெயிலில் காயவைத்து செக்கு முறையில் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்,பிறகு அதை வடிகடாமல் 4 நாட்கள் வரை நன்கு ஊற வைக்கவும் பிறகு வடிகட்டி கொள்ளவும்
பயன்படுத்தும் முறை:
இரவு தூங்க போகும் போது தொப்புக்குழி க்குள் 4 சொட்டு எண்ணை விடவும்,பின் காலில் உள்ள இரண்டுk கட்டைவிரல்களில் நன்கு தடவவும். 5 நிமிடம் கழித்து கால்களை கழுவி விடலாம்.
இதனால் உடலில் உள்ள சூடு முழுவதும் தணிந்து உடல் குளிர்ச்சியாக இருப்பதை உணர முடியும்.
அந்த காலத்தில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க சித்தர்கள் கூறிய மருத்துவ முறையும் இதுதான்.
இந்த வழிமுறைகளை பின்பற்றக்கூடாதவர்கள்
காய்ச்சல், சளி, வீசிங், ஆஸ்துமா உள்ளவர்கள் இம்முறையை பின்பற்றக்கூடாது.