உடல் பருமனுக்கு காரணம்.. தைராய்டாக கூட இருக்கலாம்..!!
பெண்களின்தலையாய பிரச்னையாக மாறிவருகிறது தைராய்டு என்கிறது மருத்துவத்துறை.அச்சப்படக்கூடிய அளவுக்கு அதிபயங்கரமான நோய் கிடையாது என்றாலும் பலபிரச்னைகளை உண்டாக்குவதால் இதற்கு சிகிச்சை மேற்கொள்வதும் அவசியமே.எண்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்னைகளே தைராய்டு என்றழைக்கப்படுகிறது.
ஆண்களைக் குறைவாக தாக்கும் தைராய்டுபிரச்னை பெண்களை அதிகம் தாக்கி வருகிறது. நோய்க்கிருமிகளால் தைராய்டு வருவதில்லை, அயோடின் சத்து குறைபாட்டினால் தைராய்டு பிரச்னைவருகிறது.
தைராய்டு சுரப்பி:
நமது கழுத்துப்பகுதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பியில் சுரக்கும் ஹார்மோனின் அளவு அதிகரித்தாலும் குறைந்தாலும் பல பிரச்னைகளை உண்டாக்கும்.இந்த ஹார்மோனைக் கட்டுக்குள் வைத்தால் பாதிப்புகளையும் கட்டுக்குள் வைக்கலாம்.
தைராய்டு வகைகள்:
ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு என இரண்டு வகையான பாதிப்புகள் உண்டாகிறது. தைராய்டு ஹார்மோன் குறைவான அளவு சுரந் தால் அது ஹைப்போ தைராய்டு என்றும் அதிக அளவு சுரந்தால் அது ஹைப்பர் தைராய்டு என்றும் அழைக்கப்படுகிறது.
ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு அறிகுறிகள்:
எப்போதும் உறக்கம் வருவது போன்று இருப்பது, உடல் மந்தமாக சோர்வாக இருப்பதும் கூட தைராய்டு பிரச்னைக்கு ஒரு அறிகுறியாக சொல் லலாம்.எப்போதும் ஒருவித மன அழுத்தத்தோடு இருப்பதும், டென்ஷனாகவே உங்களை வைத்துக்கொள்வதற்கும் காரணம் தைராய்டு பிரச்னை தான்.
சிலர் பட்டியலிட்டு உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சத்தான டயட்டை பின்பற்றுவார்கள். குறைந்த அளவே உணவை எடுத்துக்கொள்கிறேன். ஆனாலும் உடல் எடை கூடிவிட்டது என்று புலம்புவார்கள். இந்த மனநிலையில் நீங்கள் இருந்தாலும் ஒரு தைராய்டு பரிசோதனை தேவையே.
கைகள் மற்றும் கழுத்துப்பகுதியில் சிலருக்கு வீக்கம் தோன்றும். மூட்டுவலி, நினைவுத்திறன் மங்குதல், உடல் சூடு, கை கால் நடுக்கம்,படபடப்பு, அதிக வியர்வை,எச்சில் முழுங்கும் போது வலி, பொலிவிழந்த வறண்ட சருமம் இவையும் தைராய்டு பிரச்னைக்கான அறிகுறிகளில் ஒன்று.
இந்த நோய் சுற்றியுள்ள திசுக்களை நோக்கி வளர்ந்தால் குரல்வளையில் வலியை உண்டாக்கி இயல்பாக பேசுவதைக் காட்டிலும் அதிக சிரமத் தோடு குரலில் கரகரப்பை உண்டாக்கி விடும். பேசுவதை காட்டிலும் தொண்டையில் விழும்போது மேலும் சிரமத்தை கொடுக்கும்.
தைராய்டை கவனிக்காவிட்டால்:
பதின்ம வயது பெண்பிள்ளைகள் நீண்ட நாள்கள் வரை பூப்படையாமல் இருப்பார்கள் அல்லது குறைந்த வயதிலேயே பூப்படைந்துவிடுவார்கள். தைராய்டு அதிகமாக இருந்தால் உடலில் தைராக்ஸின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கை ஏற் படுத்தி குழந்தைப்பேறில் சிக்கலை உண்டாக்கும்.
அளவுக்கதிகமான தைராய்டு உடலில் கொழுப்புகளின் அளவை அதிகரித்துவிடும். குடல் இயக்கத்தை சீராக செயல்படவிடாமல் மலச்சிக்கலை உண்டாக்கும். மன அழுத்தம், மன சோர்வு போன்றவற்றுக்கு முக்கிய காரணமாகவும் தைராய்டு குறைபாடு விளங்குகிறது.
ஹைப்போ, ஹைப்பர் தைராய்டு டயட்:
தைராய்டு குறைவாக இருக்கும் ஹைப்போதைராய்டு பிரச்னை இருப்பவர்கள் உணவில் கடல் உப்பு,அயோடின் போன்றவற்றை அதிகம் பயன்ப டுத்த வேண்டும்.
தைராய்டு அதிகம் இருக்கும் ஹைப்பர் பிரச்னை இருப்பவர்கள் குளிர்பானங்கள்,குளிர்சத்து மிகுந்த முள்ளங்கி, முட்டைகோஸ்,காய்கறிகளை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளும், பாக்கெட்டில் அடைத்த உனவுகளும் கண்டிப்பாக கூடாது.
பெண்கள்ஆண்டுக்கு ஒருமுறையாவது மருத்துவரது ஆலோசனையின் படிதைராக்ஸின் அளவை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஹைப்போ, ஹைப்பர் தைராய்டு பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மாத்திரைகள் மூலமும் உணவின் மூலமும் சரிசெய்யலாம்.