இலங்கை புதிய பிரதமர் அறிவிப்பும் அதிபர் கோத்தபய ராஜதந்திரமும்

 இலங்கை புதிய பிரதமர் அறிவிப்பும் அதிபர் கோத்தபய ராஜதந்திரமும்

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் மகிந்த ராஜபக்ச வின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கூட்டணிக்கு 143 எம்.பி.க்கள் உள்ளனர். இதற்கு அடுத்து ஐக்கிய மக்கள் சக்திக்கு 54 எம்.பி.க்கள் உள்ளனர்.

அரசுக்கு எதிரான போராட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்னின்று நடத்தி வருகிறார். பிரதமர் பதவியை ஏற்க அதிபர் கோத்தபய ராஜபக்சவிடம் அவர் சில நிபந்தனைகளை விதித்தார். குறிப்பிட்ட கால வரம்புக்குள் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும். அதிபர் அதிகார நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை சஜித் பிரேமதாசா விதித்திருந்தார்.

இவற்றை ஏற்காத கோத்தபய ராஜபக்ச, மிதவாதியான ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க காய் நகர்த்தினார். ரணில் பிரதமராக இருந்தால் தனது குடும் பத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாது. குறிப்பாக அண்ணன் மகிந்த ராஜபக்ச உள்ளிட் டோர் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியும். தனது பதவிக்கும் ஆபத்து ஏற்படாது என்பது அதிபரின் கணக்கு.

இலங்கையில் என்ன நடக்கிறது?

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின் றனர். கடந்த 9-ம் தேதி போராட்டக்காரர்கள் மீது மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர் கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இலங்கை முழுவதும் கலவரம் வெடித் தது.

மகிந்த ராஜபக்சவின் வீடு உட்பட ஆளும் கட்சி தலைவர்களின் வீடு, அலுவலகங் கள் என 35 இடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஆளும் கட்சி எம்.பி. உட்பட இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள னர். கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவோரை சுட்டுத்தள்ள முப்படைகளுக்கும் போலீஸாருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.ஆனால் அப்படி கூறவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மக்களின் எதிர்ப்பு வலுத்ததால் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் கலவரம் நீடித்தது. இதனிடையே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட 17 பேர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இலங்கையில் நிலவிவரும் நெருக்கடியான சூழலில் அந்நாட்டின் புதிய பிரதம ராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றார். இதைத் தொடர்ந்து 15 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில், ரணில் கட்சிக்கு ஒரு எம்.பி. மட்டுமே உள்ளார். அவர் மட்டுமே எம்.பி.யாக பதவி வகிக் கிறார். மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திரக் கூட்டணியின் 143 எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு அளிக்க உள்ளனர். மேலும் பல்வேறு கட்சிகள் அவருக்கு ஆதரவு . எனவே, நாடாளுமன்றத்தில் ரணில் எளிதாகப் பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க ஏற்கெனவே 5 முறை இலங்கை பிரதமராகப் பதவி வகித் துள்ளார். நெருக்கடியான நேரத்தில் தற்போது 6-வது முறையாக பிரதமராகியுள்ள அவர் நாட்டை திறம்பட வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததன் மூலம் போராட்டத்தை திசை திருப்ப அதிபர் கோத்தபய திரைமறைவில் பல்வேறு முயற்சிகளைச் செய்து வரு கிறார். எனினும், மக்களின் ஒட்டுமொத்த கோபமும் ராஜபக்ச குடும்பத்தின் மீது திரும்பியிருப்பதால் அந்தக் குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி யாகவே உள்ளது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...