வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் ஏது?

காலையில் வயிறு காலியாக இருப்பதால் நாம் என்ன சாப்பிட்டாலும் அது நேரடி யாக வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது. இதனால் வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனை களை ஏற் படுகிறது. எனவே வெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாது என்று சில உணவுப் பொருட்கள் உள்ளன.

ஏற்கனவே வயிற்றில் அமிலம் அதிகமாக சுரந்திருக்கும். அப்போது, காபி, டீ பருகி னால், இரைப்பையில் அலர்ஜி உண்டாகும். செரிமானம் பாதிக்கப்படும். வயிறு பொருமல் ஏற்படும். காபி நல்லதுதான். ஆனால் ஏதாவது நன்றாக உணவு சாப் பிட்டுவிட்டுப் பின்னர், காபி குடிக்கலாம்.

காலை நேர உணவாக காரமான உணவை எடுத்துக்கொள்வதால், இரைப்பையில் எரிச்சல் ஏற்படுத்தும். உணவு செரிமானம் ஆகாமல் போய்விடும்.

காலையில் பச்சை காய்கறிகளால் சாலட் தயாரித்து சாப்பிடுவது உகந்த தல்ல. இதில் அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. இந்த அமிலங்கள் நெஞ் செரிச்சலை உண்டாக்கும் மற்றும் சில நேரங்களில் அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும்.

புளிப்பான பழங்களில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும். அவை இரைப்பையில், அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல், அல்சர் வர காரணமாகும். சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் பப்பளிமாஸ் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆனால் இது காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்றதல்ல. ஏனெனில் இது அசிடிட்டியை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர் போன்றவற்றை உண்டாக்கிவிடும்.

தக்காளியில் டேனிக் அமிலம் இருப்பதால், வயிற்றில் அமிலத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால், காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவற்றை தவிர்க்கலாம். வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்

வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்டால், வாழைப்பழத்தில் உள்ள மெக்னீ சியம் ரத்தத்தில் அதிகமாக கலக்க நேரிடும். அது இதயத்திற்கு பாதிப்பை உண் டாக்கும்.

பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருந்தாலும், வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்று வலி மற்றும் சளிச்சவ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

காலையில் இனிப்பை சாப்பிடுவதால், உங்கள் இன்சுலின் அளவுகளை அதிக ரித்து, நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கும்.

வெறும் வயிற்றில் குளிர்பானங்களைக் குடிப்பது ஒரு ஆபத்தான விஷயமாகும். இதனால் வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரித்து வயிறு வீக்கம் ஏற்படும்.

சரி வெறும் வயிற்றில் என்னவெல்லாம் சாப்பிடலாம்?

சாப்பிடக்கூடிய உணவு :

முட்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட உகந்த உணவுகளில் முட்டை சிறந்த உணவு. இதில் புரோட்டீன்கள் மற்றும் மெட்டபாலிசம் மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். இதர ஊட்டச்சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளது.

தர்ப்பூசணி தர்ப்பூசணியில் நீர்ச்சத்து வளமான அளவில் உள்ளது. மேலும் இதில் இதயம் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் லைகோபைன் உள்ளது.

ஓட்ஸ் காலை உணவாக சாப்பிட ஏற்ற ஒன்று. இது ஹைட்ரோப்ளூரிக் அமிலத் தால் வயிற்றில் எரிச்சல் அல்லது பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருப்பதால், கொலஸ்ட்ரால் குறையும் மற்றும் மெட்டபாலிசம் ஊக்குவிக்கப்படும்.

ப்ளூபெர்ரிஸ் ப்ளூபெர்ரி பழங்களில் ஊட்டச்சத்துக்கள் வளமாக உள்ளது. இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், இரத்த அழுத்தம் சீராக்கப்படும், மெட்டபாலிசம் மேம்படும் மற்றும் நினைவுத் திறன் மேம்படும்.

தேன் காலையில் தேனை சாப்பிடுவதால், உடலில் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் மனநிலை மேம்படும். இதனால் அன்றைய நாளில் ஒரு செயலில் நன்கு கவனம் செலுத்த முடியும்.

நட்ஸ் காலை உணவில் நட்ஸை சேர்த்துக் கொள்வதன் மூலம், வயிற்றில் உள்ள pH அளவு சமநிலையாக்கப்படும் மற்றும் சீரான செரிமானத்திற்கு உதவும்.

அதனோடு கேழ்வரகு கூழ், இட்லி சாம்பார், சப்பாத்தி, பாசிப்பருப்பு தால், கோதுமை பிரெட், பழைய சோறு ஆகியவற்றையும், பழங்களில் ப்ளூபெர்ரி, பப்பாளி போன்றவற்றையும், கிரீன் டீ, தேன் கலந்த பானங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால்தான் பலன் கிடைக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அதேநேரம், வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங் களுடன் கலந்து வயிற்றுப்புண் ஏற்படும்” என்றும் சிலர் கூறுகிறார்கள். எது உண்மை?

தயார் நிலையில் இருக்கக்கூடிய, உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலைத் தரக்கூடிய பானம் இளநீர். மூன்று வயது குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக, சாப்பாட்டுக்கு முன் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!