தமிழே முதன்மொழி – அறிஞர்கள் கூறிய உண்மை

 தமிழே முதன்மொழி – அறிஞர்கள் கூறிய உண்மை

உலகத்தில் முதலில் தோன்றிய மொழி தமிழ் என்பதற்கு ஆய்வாளர்கள் காட்டும் விளக்கம் பற்றி கூறுமாறு கேட்டோம். அதற்கு சென்னை கிறித் தவக் கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் கு. அரசேந்திரன் அவர்கள் அளித்த பதில் வருமாறு

உலகத்தில் முதன்முதலில் தோன்றிய மொழி எந்த மொழி என்கிறஆய்வு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. இந்த விடயத்தில் உலகத்தில் எல்லா அறிஞர்களும் ஏற்றுக்கொண்டபடி ஒரு கருத்து இன்னும் உறுதி யாக முடிவாகவில்லை. ஆனால் அந்த ஆய்விலே சில வெளிச்சங்கள் தெரிகின்றன. 1778ஆம் ஆண்டுகளில் கேப்டன் குக் (Captain cook) என்கின்ற இங்கிலாந்து நாட்டு இராணுவத் தளபதி ஆஸ்திரேலியாவில் பயணம் செய்ய ஒரு பகுதியில் செல்லும்போது இப்போதும் இருக்கக்கூடிய ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் அங்கு வாழ்ந்தார்கள். அவர்கள் எந்த உலகத் தொடர்பும் இல்லாமல் தன்னந்தனி குழுவாக அங்கேயே வாழ்ந்து வருவதாக அவருக்குத் தெரியவந்தது.

கேப்டன் குக் போவதற்குமுன் யாரும் அங்கு போனதில்லை. அந்தப் பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வு செய்தபோது அவர்கள் நாற்பது ஆயிரம் ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்துவருவதாக அவருக்குத் தெரியவரு கிறது. அதை எப்படிக் கண்டறிந்தார் என்றால் அங்கிருந்த ஒரு குகையில் குளவிகள் கூடு கட்டியிருந்தன. அந்தக் குளவிக்கூடுகளுக்கு உள்ளே ஒரு ஓவியம் இருந்திருக்கிறது. அந்தக் குளவி எவ்வளவு ஆண்டுகளுக்கு முன்னால் கூடு கட்டியிருக்கும் என்று கணக்கிட்டு பார்த்தபோது சுமார் நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் குளவி கூடு கட்டி யிருக்கிறது. அதற்கு முன்னதாக அந்தக் குளவிக்கூட்டுக்குள் அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது என்று கண்டறிந்தார்கள். அந்த மக்கள் ஒரு வகையான மொழி பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த மொழிதான் உலகத்திலேயே பழமையான மொழி என்று கண்டறிந்து வியப்படை கிறார் கேப்டன் குக். அந்த மொழி எந்த மொழியின் உறவுடைய மொழி யாக இருக்கும் என்று கண்டறிய, ஒப்பீட்டு மொழியில் ஆய்வு (Comparative linguistics) செய்தார்கள். அது தமிழ் மொழியுடன் நெருங்கிய உறவுடைய தாக இருக்கிறது என்று கண்டறிந்தார்கள்.

நூற்றுக்கணக்கான சொற்கள் தமிழாகவே அவர்கள் மொழியில் இருப்ப தாகக் கண்டார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு பொறி தட்டுகிறது. தமிழ் மொழி பேசிய மக்கள் இவர்களுக்கு முன்னதாகவே இந்தப் பகுதிகளில் இருந்திருக்க வேண்டும். அப்படித் தமிழிலிருந்து பிரிந்து வந்த மொழியாக இவர்கள் மொழியும் இருந்திருக்கும் என்று உறுதி செய்தார்கள். நாற்பது ஆயிரம் ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் ஒரு மொழியைப் பேசிக் கொண்டிருக்கிற மக்கள் மொழியில் தமிழ்தான் அடிப்படையாக இருக் கிறது என்று சொன்னால் இவர்கள் தென்பகுதியில் இருந்த தமிழ் மக்களி லிருந்து பிரிந்துவந்த குழுக்கள் என்றால், நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழ் மொழி இருந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இன்றைய அளவிலி ருந்து 300 அடி கீழே இருந்தது என்று கடலியல் ஆய்வாளர்கள் கண்டறிந் திருக்கிறார்கள்.  அப்போது தெற்கே நிலப்பரப்பு பெரிய அளவில் இருந் திருக்கிறது. ஒரே நிலமாக இல்லை என்றாலும் இன்றைய தமிழ்நாட் டிலிருந்து தெற்கே நமக்கு நீண்ட நிலப்பரப்பு இருந்திருக்கிறது. கடல் மட்டம் சிறியதாக இருந்த காரணத்தால் கட்டுமரத்தில் அங்கங்கே குழுக் களாக மக்கள் பயணப்பட்டிருக்கிறார்கள். நாற்பது ஆயிரம் ஆண்டு களாகப் பேசும் மொழியில் தமிழ் அடிப்படையாக இருக்கிறதென்றால் தமிழ் அறுபது, எழுபது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தோன் றியிருக்கலாம் என்று கணக்கிட்டார்கள். காலின் மாசிகா என்ற அறிஞர் சொல்லியிருக்கிறார், ‘ஊழிக்காலத்தில் தென்னிந்தியாவில்தான் தமிழ் என் கின்ற மொழி உலகத்தின் மூலமொழியாக இருந்திருக்க வேண்டும்’.

ஏனென்றால் மனிதனுடைய மண்டை ஓடு, உறுப்புகளை எல்லாம் ஆய்வு செய்து, மொழி தோன்ற ஆரம்பித்ததே அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்றும், அது தென்னகத்தில் தோன்றியதுதான் என்றும் கண்டறிந்தார்கள் ஆய்வாளர்கள்.

ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலம், லத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட மொழி கள் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்தான் தோன்றியது என்று அதன் மொழியறி ஞர்களே கூறியிருக்கிறார்கள். பென்சில்வேனியாவில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சமஸ்கிருதப் பேராசிரி யர் ஸ்டீபன் ஹில் லியார் லெவிட் என்கிறவர் ‘எல்லா மொழிகளுக்கும் மூலமொழியாகிய ஒரு மொழி தென்னகத்தில்தான் தோன்றியது’ என்று எழுதியிருக்கிறார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...