‘வலிமை’ படத்தைப் பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்!

 ‘வலிமை’ படத்தைப் பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்!

‘வலிமை’ பிரம்மாண்ட வெளியீட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் மலேசிய அஜித் ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ்  கார்ப்பரேஷ னால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக  மலேசிய மனிதவளத் துறை அமைச்சரும் தீவிர அஜித் ரசிகரான டத்தோ ஸ்ரீ   M.சரவணன் அவர்களும், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் சி.இ.ஓ. டத்தோ அப்துல் மாலிக் தஸ்திகர் அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்திய சிறப்பு  சூப்பர் பைக்கர்களின் சாகசங்கள், சிங்க நடனம் மற்றும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன்  50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக் குத்  திரைப்படத்தைப் பார்க்கவும், அஜித் நற்பணி  அறக்கட்டளைக்கு மலேசிய பண மதிப்பில் (RM 5000 ) ரொக்கம் மற்றும் இலவச  சானிடைசர்கள் மற்றும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன. அனைவரும் படத்தை ரசித்தார்கள். மலேசியா அஜித் ரசிகர் மன்றம் நிறைய தொண்டுகளைச் செய்துள்ளது. முக்கியமாக கொரோனா தொற்றின் போதும், மலேசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான இளைஞர் அதிகாரமளிக்கும் நிறுவனமாகவும் உதவி செய்து வருகின்றனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *