கண்டுபிடிப்பாளரைக் கண்டுகொள்ளாத  நாட்டில் கண்டெடுத்த   நல்முத்து சி.வி.ராமன்

 கண்டுபிடிப்பாளரைக் கண்டுகொள்ளாத  நாட்டில் கண்டெடுத்த   நல்முத்து சி.வி.ராமன்

ராமன் விளைவைக் கண்டுபிடித்த பிப்ரவரி 28-ம் நாளை ஒவ்வொரு ஆண் டும் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வெள்ளையரசு காலத்தில் பல அரசியல் நெருக்குதல் கண்ட சி.வி.ராமன் பற்றிய பதிவு.

கடல் நீர் வெண்மை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அது நீலநிற மாக இருப்பது வான நிறமான நீலவண்ணத்தின் பிரதிபலிப்பு  என்பதும் பலருக்கும் தெரிந்தும் தெரியாமல் இருக்கும். அதாவது ஒளிச்சிதறல். ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும்போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது. சரி இது ஒரு சாதாரண நிகழ்வு தானே, இதனால் என்ன பயன்? இருக்கிறது என்று கேட்பவர்கள் உண்டு.

பெட்ரோலிய வேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணிக்க உதவும்.

போதை மருந்துகளை எடுத்துச் செல்ல பயன்படும் உறைகளைச் சிதை வுறுத்தாமலேயே மருந்துகளை இனம் காணலாம்.

வண்ணப்பூச்சுகள் இருகும்போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதை அறியலாம்.

அணுக்கருக் கழிவுகளைத் தொலைவிலிருந்தே ஆய்வு செய்ய உதவும்.

சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெரு மையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறி வியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.

சி.வி.இராமன்  நவம்பர் 7ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராப்பளியில் பிறந்தார். சென்னையிலே உள்ள பிரெசிடென்சி கல்லூரியில் 1902ஆம் ஆண்டு நுழைந்து 1904ல் கலை இளநிலை பி.ஏ. பட்டம் பெற்று கல்லூரியில் முதலாவதாக நின்று தங்கப் பதக்கம் பெற்றார். அப்பொழுது அவருக்கு அகவை 16 நிறைந்திருந்தது.

ராமன் தனது அறிவியல் கல்வி ஆர்வத்தை புதைத்துவிட்டு தன் தந்தை யின் நச்சரிப்புத் தாங்காமல் எஃப்.சி.எஸ். தேர்வு எழுத இந்தியாவிலேயே முதலிடம் பெற்று அப்போதுதான் பணி நியமனம் பெற்றிருந்தார். அப்பாவுக் காக அரசுப் பணி, தனக்காக அறிவியல் என பிடிவாதமாக ராமன் செயல் படத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஜில்லாவின் உயர் மட்ட அதிகாரியான அவர் மீது அரசுக்கு சந்தேகம் வரவில்லை. ஆனால் 1908ல் லண்டன் ராயல் கல்வியகத்தின் பிரதான அறிவியல் சஞ்சிகையில் ராமனும், ஆஷூபாபு வும் சேர்ந்து எழுதிய அறிவியல் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளிவந்து அவரை காட்டிக் கொடுத்துவிட்டது. பிரிட்டிஷ் அரசு முதலில் ராமனை ரங்கூனுக்கும் பிறகு நாக்பூருக்கும் பந்தாடியது.

1917 வரை அவர் பலமுறை பல ஊர்களுக்குத் தூக்கி எறியப்பட்டார். இந்திய அறிவியலின் உலகளாவிய முகவரியைச் சிதைக்க வெள்ளையர்கள் மேலும் பலவித சூழ்ச்சிகளில் ஈடுபட்டனர். பின்னர் 1907ல் இவர் முது கலைப் பட்டமும் பெற்றார். அதிலும் இவர் உச்சச் சிறப்புகளோடு பெற்றார். முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

சி.வி.இராமன் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்பு கள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைகழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார்.

ராமனோடு சேர்ந்து ராமன் விளைவை ஆராய்ந்தவர்தான் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு ஏனோ சரியான அங்கீகாரம் கிடைக்கப்பட வில்லை. இவருடன் சேர்ந்து 1943-ல், ‘Travancore Chemical and Manufacturing Co. Ltd’ என்னும் ஒரு கம்பெனியைத் தொடங்கி, அதன் மூலமாகத் தென்னிந் தியாவில் நான்கு தொழிற்சாலைகளைத் தொடங்கினார்.

ராமன் விளைவு என்றால் என்ன?

ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும்போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது; இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. அவை

1. படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி

2. முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்

3. முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள் பயன்பாடுகள்.

இயற்பியலைவிட வேதியியலில் இராமன் சிதறல் அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளது. கரிம, கனிம வேதியியலில் சிதைவுறுத்தா வேதிப்பகுப்பிற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படுவது ராமன் விளைவே. பகுப்பிற்குட்பட்ட பொருளின் “கைரேகை”யாக இராமன் நிறமாலை உள்ளது; திரவங்களுக்கு மட்டுமல்லாது வளிம, திடப்பொருள்களுக்கும் இம்முறையைப் பயன்படுத் தலாம் என்பது இதன் சிறப்பு. குறிப்பாக,

1. பெட்ரோலியவேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணித்தல்,

2.   சட்டப்புறம்பான போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல்,

3. வண்ணப்பூச்சுகள் இருகும்போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதை அறிதல்,

4.  அணுக்கருக் கழிவுகளைத் தொலைவிலிருந்தே ஆய்வு செய்தல்,

5.   10  வினாடியே ஆயுட்காலம் கொண்ட நிலையற்ற வேதி இனங்களின் நிறமாலைகளைப் பதிவு செய்வதில் ஒளி வேதியலாளர்கள், ஒளி உயிரிய லாளர்களுக்கு லேசர்-ராமன் நிறமாலையியல் தொழில்நுட்பங்கள் உதவு கின்றன.

82வது வயது வரை அறிவியலையும், முயற்சியையும், உழைப்பையும், இந்தியப் பெருமிதத்தையும் தன்னகத்தே கொண்டிருந்த சர்.சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்ததை அறிவிக்கும் நோபல் கமிட்டியின் தந்தி ராமனுக்குப் போய் சேராமல் இரண்டு நாட்களுக்கு வைஸ்ராய் நிறுத்தி வைத்திருக்கிறார். தனது அயல்நாட்டு சகாக்கள் மூலம் ராமன் தனக்குப் பரிசு கிடைத்ததை அறிகிறார். நோபல் பரிசை (தாகூர் போலவே) நேரில் பெற வேண்டாம் என முதலில் வெள்ளை அரசு ஆலோசனை வழங்குகிறது. பிறகு நோபல் ஏற்புரை வழங்க ராமனுக்குத் தடை விதிக்கிறது.  ஆனால் தடையை மீறி பரிசைப் பெற்றுக் கொள்ளும்போது ராமன் பேச அனுமதி கேட்டுபோசும்போது “இந்த விருதை இந்தியச் சிறையில் வாடும் ஆயிரக் கணக்கான சுதந்திரப் போர் வீரர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்” என முழங்கி னார்.

நோபல் அறக்கட்டளையின்  கொள்கைப்படி,  நோபல் பரிசு அமைதியான வழியை நாடும் கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட வேண்டும் என்பது விதி முறை. அத்துடன், கண்டுபிடிப்பு அனைவராலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.. இந்த இரண்டு கொள்கைகளுக்கும் உட்பட்ட கண்ட றிதல் ராமன் விளைவு இருந்தது! உலகிலேயே கண்டுபிடிப்பிற்காகக் குறைந்த நாட்களில் (இரண்டு ஆண்டுகள்) நோபல் பரிசு பெற்றவர் ராமன்தான்.

சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணி புரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தை (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டுமல்லாமல் இவர் பெங்களூருவில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத் தைத் தொடங்கி, அதன் தலைவராகவும் பணிபுரிந்து, அக்கழகத்தின் வழி புகழ்பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஓர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.

ராமனின் குடும்பம் இசைக் குடும்பம். அதனால் இவர் வயலின் (பிடில்), மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.

ராமன் இந்தியாவிலிருந்துகொண்டே இயல்பியலில் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு வாங்கிய ஒரேயொருவர் (இன்றுவரையில்). ஆனால் இதற் கெல்லாம் மேலாக இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி என்பதை முறையாகத் தோற்றுவித்து அதன்மூலம் பல்லாயிரம் அறிவியல் அறிஞர் களை உருவாக்கிய ராமன் அறிவியலாளர்களின் அறிவியலாளர்.

தனது நோபல் பரிசுத் தொகையின் ஒரு பகுதியை சுதந்திரப் போராட்ட நிதியாய் வழங்கிய ராமன், தான் கல்கத்தாவிலிருந்து பெங்களூருக்கு சி.வி.ராமன் அறிவியல் கல்வியகம் அமைத்துக்கொண்டு கவுரவமாய் போய் இணைந்தார்.

ராமன் அவரது ஒளியியல் சார்ந்த ஆராய்ச்சிக்காகப் பெயர் பெற்றிருந் தாலும் ஒலி, நுகர்வு ஆகியவற்றிலும் ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் செய்திருக் கிறார். எண்ணற்ற ஆராய்ச்சியுரைகளைப் படைத்திருக்கிறார்; சில புத்தகங் களை எழுதியுள்ளார். தன் இறுதிக்காலத்தை வெளிநாட்டில் கழித்த சர்.சி.வி. ராமன் 1970 ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி மறைந்தார்.

ஒருமுறை அவரிடம் கடவுளைப்பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அவர் அதனைக் கவனிக்காதது போல் தவிர்த்தார். கேட்டவர் விடவில்லை. ராமன் பதிலுரைத்தார்.

“கடவுள் இருக்கிறார் என்றால் ஒரு டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு இந்த பிரபஞ்சம் முழுவதும் தேடு. வெறும் யூகங்களை வைத்துக்கொண்டு உன் நேரத்தை வீணாக்காதே” என்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...