கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார பீரங்கி தா.பா. நினைவுகூரத்தக்கவர்
மனதில்பட்டதை ஒளிவு மறைவில்லாமல் பேசும் மிகச் சில அரசியல் தலைவர் களில் முக்கியமானவர் தா.பாண்டியன். தமிழ்நாடு, தமிழ்மொழி, ஈழத் தமிழர் வாழ்வுரிமை உள்ளிட்டவற்றுக்காக எப்போதும் குரல் கொடுத்துவந்தவர் தா.பாண் டியன். தந்தை பெரியார்மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், சமூகநீதி, சாதிய வன்கொடுமை எதிர்ப்பு ஆகியவற்றுக்காகவும் குரல் கொடுக்கத் தவறியதில்லை. `ஜனசக்தி’ பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் கடைசிப் பக்கத் தில் `சவுக்கடி’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தின.
சட்டமன்றத் தேர்தலில் ஆறு முறையும், நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று முறையும் போட்டியிட்டிருக்கிறார். 1983-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது, தோழர்கள் கல்யாணசுந்தரம், டாங்கே உள்ளிட்டோரோடு இணைந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். 1983-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை அக்கட்சியின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றி னார். 1989, 1991 நாடாளுமன்றத் தேர்தல்களில் வடசென்னை தொகுதியில் போட் டியிட்டு வென்றார். இந்த இரண்டு தேர்தலிலும் காங்கிரஸோடு கூட்டணி யிலிருந்தது ஐக்கிய கம்யூனிஸ்ட்.
1991 நாடளுமன்ற பிரசாரக்கூட்டத்தின்போது ராஜீவ் காந்தியின் உரையைத் தமிழில் மொழிபெயர்த்தார்.. 1991, மே 21-ம் தேதி ராஜீவ் காந்தி வெடிகுண்டு வைத்துக் கொல்லப்பட்டபோது, அவரது அருகில்தான் நின்றுகொண்டிருந்தார் தா.பாண்யன். குண்டு வெடித்தபோது தா.பாண்டியனும் தூக்கிவீசப்பட்டார். முத லில் அவரும் உயிரிழந்துவிட்டதாகவே செய்திகள் வந்தன. ஆனால், படுகாயங் களுடன் தீவிர சிகிச்சை பெற்று மீண்டு வந்தார் தா.பா.
தா.பாண்டியன் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கீழவெள்ளை மலைப்பட்டி என்ற ஊரில் தாவீது – நவமணி ஆகியோருக்கு நான்காவது மகனாக 1932 மே 18 இல் பிறந்தார். இவரின் பெற்றோர் கிறித்தவ மிசனரிப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். தா.பாண்டியன் காமக்காபட்டி கள்ளர் சீரமைப் புத் துறைப் பள்ளி, உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்றார். இவர் ஆங்கில முதுகலை படிக்க காரைக்குடி, அழகப்பா கல்லூரியில் சேர்ந்தார்.அங்கு இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாணவர் பெருமன்றம் சார்பில் போட்டியிட்டு மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆங்கில முதுகலைப் பட்டமும் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.
இவர் தன் கல்வியை முடித்ததும், காரைக்குடி, அழகப்பச் செட்டியார் கல்லூரி யில் விரிவுரையளராகப் பணியற்றினார். இவர் 1957 சட்டமன்றத் தேர்தலில் புனைபெயரில் பரப்புரை மேற்கொண்டார். என்றாலும், இவரது பெயர் சில செய் தித் தாள்களில் வெளியாகவே இவர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இருந்தபோதும் கல்லூரி நிறுவனர் இவருக்கு ஊக்கமூட்டிக் கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் நூல்களை வாங்கிப் பரிசளித்துள்ளார்
இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்வதற்கு முன்பாக, பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப. ஜீவானந்தம் தொடங்கிய தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளராக இருந்துள் ளார். இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தை எதிர்த்தாலும், இலங்கைத் தமிழ ரின் பிரச்சினைக்கு இலங்கை அரசு பின்பற்றும் வன்முறையான அணுகுமுறை யைக் கண்டித்து அதற்கு அமைதியான அணுகுமுறையில் தீர்வைக் காணுமாறு அறைகூவல் விடுத்தார்.
தா.பாண்டியன் கூடங்குளம் அணுமின் நிலையத்தைக் கட்டுவதற்கு முதலில் ஆதரவு தெரிவித்தார். என்றாலும், பின்னர் இவரே ரசிய அரசுக்கு இழப்பீட்டைக் கட்ட விலக்கு அளிப்பது ஏற்கவியலாதது எனக் கூறியுள்ளார். இவர் சமூகநீதிக் காகவும் மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் அறிவியல் கல்வியை ஆதரித்தும் போராடியுள்ளார்.
தா.பாண்டியன் சோவியத் நாடு நேரு விருதைப் பெற்றுள்ளார். மெத்த படித்திருந் தாலும் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் சிறப்பாகப் பேசும் பேச் சாற்றல் மிக்கவர். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார பீரங்கியாகச் செயல்பட்டவர். 35 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
இவருக்கு இரு மகள்களும், தாவீது சவகர் எனும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி லில்லி ஜாய்ஸ்.
கட்சிக்காரர்களால் தா.பா. அழைக்கப்பட்ட இவர் சிறுநீரகத் தொற்று விளைவித்த உடல் நலக்குறைவினால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 26, 2021 அன்று தன் 88ஆம் அகவை யில் காலமானார். இவரது உடல் தம் முன்னோர் வாழ்ந்த உசிலம்பட்டி, கீழ் வெள்ளைமலைப்பட்டி, தாவீது பண்ணையில் 2021, பிப்ரவரி, 27 ஆம் நாளன்று நல்லடக்கம் செய்யப்பட்டார்.