வலிமை ரிலீஸ் அப்டேட்

 வலிமை ரிலீஸ் அப்டேட்
  • அஜித்தின் படம் எதுவும் 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
  • அஜித் ரசிகர்கள் இந்தப் படத்தை எதிர்பார்த்து சமூக வலைதளங்களில் பல பதிவுகளை வெளியிட்டனர். அதனால் வலிமை அப்டேட் என்ற ஹாஸ்டெக் ட்ரெண்ட் ஆனது.
  • ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களின் முதல் நாள் வசூலை வலிமை திரைப்படம் முதல் நாளே அடித்து நொறுக்கி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நடிகர் அஜித் மீண்டும் கோலிவுட் கிங் தான் என நிரூபித்துள்ளார்.
  • ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘வலிமை’ கடந்த 24ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. வெளியான முதல் நாளிலேயே ரூ.36,14 கோடி ரூபாய்யும், இரண்டாவது நாளான நேற்று ரூ.24.62 கோடி ரூபாய்யும் வசூலித்து, மொத்தம் ரூ.60.79 கோடி ரூபாயை தமிழகத்தில் மட்டுமே வசூலித்துள்ளது.
  • வலிமை பட ரிலீசை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். அதிகாலையிலே திரையரங்குகள் களைகட்டியது. ரசிகர்களுக்கு நிகராக திரையுலக பிரபலங்களும் ‘வலிமை’ முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆர்வம் காட்டியது வியப்பாக உள்ளது. இந்நிலையில் நடிகர் அருண்விஜய் ரசிகர்களுடன் பர்ஸ்டே பர்ஸ்ட் ஷோ பார்த்துவிட்டு ‘வலிமை’ படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
  • உலகம் முழுவதும் 75 கோடி வரை இந்தப் படம் முதல் நாளில் வசூல் செய்திருக்கும் என பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், 45 முதல் 50 கோடி வரைதான் இந்த படம் வசூலித்துள்ளது என்பது தெளிவாகி உள்ளது.
  • சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் வலிமை படத்தின் வசூல் மேலும், அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் வார முடிவில் தமிழ்நாட்டிலேயே 100 கோடி ரூபாய் வசூலை வலிமை படம் ஈட்டி விடும் என்றும் தெரிகிறது.
  • கடந்த வருடமே கொரோனா ஊரடங்கு காரணமாக அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருந்த படத்தின் முதல் பார்வை தள்ளி போனது. இதற்கு பின்பு தளர்வுகள் அறிவிக்கப்பட ஹைதராபாத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
  • 14 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடிக்கும் வலிமை படத்தில், அதேபோல அம்மா சென்டிமெண்ட் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அதற்காகவே, படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தனி பாடலை உருவாக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • படத்தின் முதல் பாதி, சண்டைக்காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் ஸ்டைல், டெக்னிக்கல் ஒர்க் ஆகியவை தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
  • வலிமை திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்த நிலையில், அதன் நீளத்தை குறைத்திருக்கிறது வலிமை படக்குழு. 2 மணி நேரம் 55 நிமிடங்கள் கிட்டத்தட்ட 3 மணி நேர படமாக வெளியான வலிமை படம் இரண்டாம் பாதியில் போர் அடிப்பதாக கிளம்பிய விமர்சனங்களால் முதல் பாதியில் 2 நிமிடங்களும் இரண்டாம் பாதியில் 10 நிமிடத்தையும் தமிழ் வெர்ஷன் வலிமையில் நீக்கியுள்ளது படக்குழு. இந்தியில் 15 நிமிட காட்சி வரை கத்தரிக்கப்பட்டு இருக்கிறதாம்.
  • ‘வலிமை’ படம் சென்சாராகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது.  பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்தப் படத்தைப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.
  • வலிமை படத்தைப் பார்த்த பாலிவுட்டின் சினிமாபிரமுகரும், முன்னாள் சென்சார் போர்டு ஆலோசகருமான ராஜேஷ் வாசனி படம் பற்றி முகநூலில் மிரட்டலான விமர்சனம் செய்துள்ளார். அதில்,  ஜீ ஸ்டூடியோவின் பான் இந்தியா குழுவுடன் நாங்கள் படத்தைப் பார்த்தோம், படத்தைப் பார்த்து மிரண்டு விட்டோம். ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் & மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு இந்திய சினிமாவின் பதில் தான் வலிமை, வெள்ளித் திரைகளை வலிமை படம் எரிய வைக்கப் போகிறது. ஷோமேன் போனி கபூரின் த்ரில்லர் உங்கள் மூச்சை இழுக்கும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...