ஓடிடி தளத்தில் கலக்கும் 2 தமிழ் வெப்சீரிஸ்கள்

 ஓடிடி தளத்தில் கலக்கும் 2  தமிழ் வெப்சீரிஸ்கள்

தமிழில் தற்போது திரைப்படங்களுக்கு இணையாக வெப்சீரிஸும் வந்து கொண்டிருக்கின்றன. அதில் தற்போது வந்து ஓ.டி.டி. தளங்களில் பரபரப்பாகப் பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் இரண்டு சீரியல்களின் விமர்சனங்களைப் பார்ப்போம்.

ஜீ5 ஓ.டி.டி.யில் 7 எபிசோடுகளாக ரிலீஸ் ஆகியிருக்கிறது விலங்கு!

சினிமாவில் பெரிய அளவில் சோபிக்காத விமல், வெப்சீரிஸில் நடித்தால் எப்படி இருக்கும்? ஒரு பரிசோதனை முயற்சிதான் விலங்கு. தரமான, கலகலப்பான, த்ரில்லர் க்ரைம் ஸ்டோரிதான் விலங்கு.

பிற மொழிகளில் குறிப்பாக, இந்தியில் அதிக  வெப்சீரிஸ்கள் க்ரைம், திரில்ல ராக சக்கைப்போடு போடுகின்றன. தமிழில் அவ்வப்போது த்ரில்லர்கள் வந்தா லும், அவை இந்தி தழுவலாகவே உள்ளன. ஆனால், அக்மார்க் தமிழ் சூழலில், திருச் சியை ஒட்டிய ஒரு சிறு கிராமத்தில் நடக்கும் சம்பவத்தை த்ரில்லராக கூறியிருக் கிறார்கள். உண்மையில், விலங்கு… அந்தத் திருப்தியை குறைக்கவில்லை.

விமல் இப்படித்தான் நடிப்பார், இப்படித்தான் பேசுவார் என்கிற அத்தனை ஃபார்முலாவையும் உடைத்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்.

ஒரு கிராமத்தில் நடக்கும் கொலை, அந்தக் கொலையைக் கண்டுபிடிக்க வரும் போலீஸ் அதிகாரிக்கு நடக்கும் சோதனைதான் கதை. ஒரே நேரத்தில் குடும்பம், பணி என இரு நெருக்கடிகளைச் சமாளித்து வெற்றி பெறுகிறாரா என்பதுதான் கதை.

முனீஸ்காந்த், பாலசரவணன், ஆர்.என்.ஆர்.மனோகர் என போலீஸ் பட்டாளங் கள் அனைவருமே, உண்மையான போலீஸாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர் களுக்குள்ளான உறவாகட்டும், பேச்சாகட்டும், அதிகாரமாகாட்டும் எல்லாமே இயல்பாக வெளிப்படுத்திருக்கிறார்கள். சில இடங்களில் ஆபாசக் காட்சிகள் பல இடங்களில் ‛பீபீ’ இல்லாத வசனங்கள் முகம் சுளிக்க வைத்தாலும், நிஜத்தில் அது எங்கு பயன்படுத்தப்படுமோ, அங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சினிமாவில் மட்டுமல்ல, வெப்சீரிஸிலும் ஹீரோயின் வேஸ்ட் என்பதை, இங்கு நிரூபித்திருக்கிறார்கள். வேஸ்ட் என்று சொல்வதைவிட, நீண்ட நெடிய வெப் சீரிஸில், நாலைந்து சீன்தான் இனியாவுக்குக் காட்சிகள். அப்படியென் றால், அத்தனை எபிசோடில் யாரை காட்டுகிறார்கள் என்று கேள்வி எழும்; கவலை வேண்டாம்… ‛தலையில்லாத சடலம், தடயம் தேடும் போலீஸ், போலீஸ் தேடும் அக்யூஸ்ட்…’ என அனைத்திலும் க்ரைம் சீன் தான். கிச்சா’ கதாபாத்திரத் தேர்வு சிறப்பு.

க்ரைம் என்பதற்காக இறுக்கத்தைக் கட்டிப்பிடித்து அழாமல், கலகலப்பாக அதை நகர்த்திருப்பதுதான் இயக்குநரின் சாமர்த்தியம். பரபரப்பாக செல்லும் காட்சி களில்கூட, காமெடியைத் திணித்து புதிய ஃபார்முலாவை படைத்திருக் கிறார்கள். ஒரு எபிசோட் கூட ஃபோர் அடிக்காமல், அடுத்தது என்ன என்கிற வகையில் நகர்கிறது.

விமல் படமாக இருந்தாலும், விமலை விட ஸ்கோர் செய்யும் கதாபாத்திரங்கள் அங்கு அதிகம். அதில் பால சரவணனுக்கு ஒரு பங்கு உள்ளது. கொஞ்ச நேரம் வந்தாலும் ரேஷ்மா கதாபாத்திரம் பேசப்படுகிறது.

சினிமாவாக இருந்திருந்தால், விமலுக்கு ‛கம்பேக்’ சொல்லலாம். இது வெப் சீரிஸ் என்றாலும், இதிலும் ‛கம்பேக்’ சொல்வதில் தவறில்லை. இது கரடுமுர டான போலீசாரின் நியாயத்தைக் கூறும் கதை. அவர்கள் குற்றவாளிகளை அடித்துத் துவைக்கும்போது, அது நியாயமாகவே மனதிற்குத் தோன்றும். அந்த இடத்தில்தான், அவர்கள் எண்ணம் ஜெயித்திருக்கிறது. அதே நேரத்தில், வெள் ளந்தி மனிதர்கள், குற்றவாளிகளை வெளுத்து வாங்கும்போது, வெறி கொண்ட மனிதர்களாக மாறுவது ஏன் என்பது தெரியவில்லை. ஆனால், அது தான் போலீஸ் என்கிற கருத்தும் அதில் இருக்கிறது.

விலங்கு… போலீஸ் கதை என்பதால் கையில் மாட்டும் விலங்கு என்றுதான் எண்ணத் தோன்றும். விமல் ஒரு போலிஸ்காரரைப்போலவே பேசவில்லை. நடக்கவில்லை, கம்பீரம் காணவில்லை. ஆனால் ஒரு உண்மையான காவல் நிலையத்தையும் அங்கு நடக்கும் சம்பவங்களையும் சிறப்பாகப் பதிவு செய் திருக்கிறார்கள்.

பெண்களை ‘இரை’யாக நடத்தும் ஆண்களுக்கு எதிராக ‘இறை’ தூதர் அவதரிப் பார் என்னும் கருத்தை வலியுறுத்தும் இத்தொடர் ஆஹா’ செயலியில் உள்ளது. 6 பாகங்கள்.

இருவேறு காலகட்டங்களில் நடக்கும் கதை. ஒன்று 1985 முதல் 1997 வரை, மற்றொன்று 2019ல் நடக்கும் கதை. முக்கிய பிரமுகர் கடத்தப்படுகின்றார், அவரைக் கண்டுபிடிக்கும்படி மத்தியில் வலியுறுத்துகின்றார்கள். அதற்காக  ‘consultant’ ராபர்ட் வாசுதேவன் உள்ளே வர, கதை பரபரவென்று சூடுபிடிக்கின்றது. கடந்த காலத்தில் பெண் சிறுமிகளின்பால் நடத்தப்படும் பாலியல் சீண்டல் களையும் பதிவு செய்கின்றார்கள்.

பாதி தொடரிலேயே நம்மால் முடிவை யூகிக்க முடிகின்றது, ஆனால் அதையும் தாண்டி அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் செம. அனைவரின் நடிப்பும் அருமை. இசையில் ஜிப்ரான் அதகளம் செய்திருக்கின்றார். ஒளிப்பதிவு, இயக்கம் என எல்லாமும் கனகச்சிதம்.

திரைப்படத்தைப் போலவே சண்டைக்காட்சிகளும் பிளாஸ்பேக்களும் உள்ளன. கோவா, கொரடைக்கானல் போன்ற இடங்களில் அதிக அவுட்டோர் காட்சிகளில் படமாக்கப்பட்டுள்ளன.

ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ராஜேஷ். M.செல்வா இயக்கியிருக்கிறார். சரத்குமார் ராபர்ட் வாசுதேவன் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். சரத்குமாருடன் இணைந்து நிழல்கள் ரவி, அபிஷேக் ஷங்கர், ஸ்ரீகிருஷ்ணா தயால், கௌரி நாயர், ஸ்ரீரஞ்சனி பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

வெப்சீரிஸ் என்றாலே சில முகம் சுளிக்கவைக்கும் காட்சிகளும், வசனங்களும் தேவை என்ற டெம்ப்ளேட்டை’ ஏன் தமிழ் இயக்குநர்களும் உடைப்ப தில்லை என்பது மிகப்பெரிய கேள்வி. மேக்கிங்கில் சில ஆங்கிலப்பட இயக்குநர்களின் பாதிப்பு தெரிகின்றது. ‘பர்ட்ஸ் ஆப் ப்ரெ’ (Birds of Prey) என்னும் நாவலின் திரை யாக்கம் இத்தொடர். 18+ என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதன்படியே படத்தில் பாலியல் காட்சிகள் சில இடங்களில் நேரடியாகவும் சில இடங்களில் மறைமுக மாகக் காட்டப்படுகிறது. சிறுமியைப் புணரும் காட்சி ‘சித்திரிப்பு’ கொடூரமானது. அம்மா, அப்பா, பிள்ளைகளுடன் பார்ப்பது சிரமம். நேரமிருப்பவர்கள் தனித் தனியாக இத்தொடரைக் காணலாம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...