இந்தியாவிலேயே சுத்தமான நகரம் இந்தூர்… திருச்சிக்கு 7வது இடம்

 இந்தியாவிலேயே சுத்தமான நகரம் இந்தூர்… திருச்சிக்கு 7வது இடம்

நான்காவது முறையாக இந்தியாவின் சுத்தமான நகரம் என்கிற விருதை தட்டிச் சென்றது இந்தூர். இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்த வருஷம் டாப் 10 இடங்கள் பிடித்திருக்கிறது. அதில் நம் திருச்சி நகரமும் இடம் பிடித்திருக்கிறது.

மத்தியப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தூர் இந்தியாவிலேயே மிகவும் தூய்மையான நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தப் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது இந்த நகரம்.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த மதிப்பைப் பெற்ற ம.பி. அரசுக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார். மேலும் அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சௌஹானின் தொடர் அர்ப்பணிப்பால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றும், முனிசிபல் கார்ப்பரேசனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஸ்வச் சர்வேக்‌ஷான் (Swach Survekshan) என்ற திட்டத்தின் கீழ் ஸ்வச் மஹோட்சவ் என்ற பெயரில் நகர்ப்புறத்தில் நிலவிவரும் தூய்மை சூழலுக் காக இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இந்தூரைத் தொடர்ந்து சூரத் மற்றும் நவி மும்பை நகரங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

1.இந்தூர் மத்தியப் பிரதேசத்தின் மாளவ பீடபூமியில் உள்ள இந்தூர் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான இடமாகும். அமைவிடம் மற்றும் மனித னால் உருவாக்கப்பட்ட பார்வையிடங்கள் என்ற அனைத்து சிறப்புகளும் நிறைந்த இந்தூர், மத்தியப்பிரதேசத்தின் இதயம் என்று மிகவும் பொருத்த மான பெயரைப் பெற்றுள்ள இடமாகும். இந்தூருக்கு சுற்றுலா வருபவர்கள் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் நதிகள், அமைதி யான ஏரிகள் மற்றும் உயர்ந்து கிடக்கும் பீடபூமிகள் ஆகியவற்றின் திணறடிக்கும் காட்சிகளைக் காண முடியும்.

2.போபால் பட்டியலில் இரண்டாவது இடம் பிடிச்சிருக்கிறது மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால். மத்தியப்பிரதேச அரசு எடுத்துக்கொண்ட சீரிய முயற்சி காரணமாக இந்த மாநிலத்தில் இரண்டா வது நகரமாக தூய்மை நகரான போபால் இடம் பெற்றிருக்கிறது. இந்தியா வின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றாக இருக்கும் போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர மாகத் திகழ்ந்து வருகிறது. முந்தைய போபால் மாநிலத்தின் தலைநகரமாக இருந்த இன்றைய போபால், ஏரிகளின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தச் சுத்தமான மற்றும் செம்மையான நகரம் இந்தியாவிலேயே மிகவும் பசுமையான நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது.

3.சண்டிகர் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலை நகராக இருக்கும் சண்டிகர்தான் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. வடமேற்கு இந்தியாவில் ஷிவாலிக் மலையடி வாரத்தில் இந்த சண்டிகர் எனும் யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. இது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகரம் எனும் விசேஷமான அடையாளத்தைக் கொண்டுள்ளது. சண்டி எனும் ஹிந்து கடவுள் வீற்றிருக்கும் ஸ்தலம் என்பதால் இதற்கு ‘சண்டிகர்’ எனும் பெயர் வந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாகத் திட்டமிட்டு நிர்மாணிக் கப்பட்ட பெருநகரம் எனும் பெருமையும் இதற்குண்டு.

4. விசாகப்பட்டினம் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றிருக் கிறது. விசாகப்பட்டினம். ஆந்திர மாநிலத்தின் கடலோர நகரமான இது 2019ம் வருடத்துக்கான தூய்மையான நகரங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக் கப்பட்டிருக்கிறது. வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டணம் கிழக் குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமாகும். அடிப்படை யில் ஒரு தொழில்நகரமான இந்த விசாகப்பட்டணம் தனது ரம்மிய மான கடற்கரைகள், எழில் கொஞ்சும் மலைகள், பசுமையான இயற்கைக் காட்சி கள் போன்றவற்றின் மூலம் ஒரு பிரபல்யமான சுற்றுலாத் தலமாகவும் மாறியிருக்கிறது.

5. சூரத் இந்தியாவின் வைர நகரமான சூரத் தூய்மையான நகரங்கள் பட்டி யலில் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் பட்டியலில் 5வது இடத்தைப் பெற்றி ருக்கும் சூரத் நகரம் பல சுற்றுலா அம்சங்களையும் தன்னகத்தே கொண் டுள்ளது. குஜராத் மாநிலத்தின் தென்-மேற்குப் பகுதியில் உள்ள சூரத் அதன் ஜவுளிகள் மற்றும் வைரங்களுக்காக மிகவும் புகழ்பெற்ற நகரமாகும். இவை மட்டு மல்லாமல், இந்நகரம் அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பெருமை களுக்காக மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

6. மைசூர் இந்தப் பட்டியலில் மைசூர் 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கலாச்சார தலைநகரமான மைசூர் அதன் தூய்மை யான மற்றும் ராஜகம்பீர தோற்றத்துக்காகவே தென்னிந்தியாவில் பிரசித் திப் பெற்ற நகரமாகும். மைசூரின் புராதன அழகும் நன்கு பராமரிக்கப் பட்டிருக்கும் தோட்டங்களும் தொன்மை வாய்ந்த மாளிகைகளும், குளுமை யான நிழற்சாலை களும் இங்கு வருகை தரும் ஒவ்வொரு பயணியின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன.

7. திருச்சி தூய்மையான இந்திய நகரங்கள் பட்டியலில் நம்ம திருச்சி 7 வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் முதல் பத்து இடங்களில் இருக்கிற ஒரே இடம் இதுதான். அதே நேரத்தில் பொள்ளாச்சி, நாகர்கோவில் போன்ற இடங்களும் முன்னாடி இருந்ததற்கு நல்ல தூய்மையான நிலையை அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். திருச்சி அல்லது திருச்சிராப்பள்ளி தெற்கு இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தொழில் மற்றும் கல்வி நகர மாக விளங்கி வருகிறது. இந்நகரம் காவேரி ஆற்றின் கரையில் அமைந் துள்ளது. இது தமிழ்நாட்டின் நான்காவது பெரிய மாநகராட்சியாகவும் நகர்ப்புற குழுமமாகவும் இருக்கிறது. இடத்தின் பெயர், தோற்றம் பற்றி பல்வேறு சிந்தனைகள் உலா வருகின்றன. திருச்சிராப்பள்ளி என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தையான ‘த்ரிஷிராபுரம்’ என்ற சொல்லில் இருந்து வருகிறது

8.வதோதரா வதோதரா நகரம்தான் தூய்மை இந்தியா நகரங்கள் பட்டிய லில் எட்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இங்கு பல அழகிய சுற்றுலாத் தளங்களும் இருக்கிறது. முந்தைய கெய்க்வாட் மாநிலத்தின் தலைநகர மான பரோடா அல்லது வதோதரா, விஸ்வாமித்ரி நதிக்கரையில் அமைந் துள்ளது. விஸ்வாமித்ரி நதிக்கரையைச் சுற்றிலும் கிடைத்துள்ள 2000 ஆண்டுகள் பழமையான தொல்பொருள் சான்றுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களால், அகோலா மரங்கள் வளரும் இந்த அங்கோட்டா என்ற சிறு குடியேற்ற பகுதி இன்று அகோடா என்று அழைக்கப்படுகிறது

9. திருப்பதி உலகிலேயே பணக்கார சாமியாக பக்தர்களால் நம்பப்படுகிற ஏழுமலையான் குடியிருக்கிற திருப்பதிதான் 9ஆவது இடத்தில் இருக்கிற தூய்மையான நகரம். சித்தூர் மாவட்டத்தில் கிழக்குத்தொடர்ச்சி மலை களின் அடிவாரத்தில் வீற்றிருக்கும் திருப்பதி நகரம் ஒரு அதிமுக்கியமான, ஆன்மீக பாரம்பரிய நகரமாக இந்தியாவில் புகழ்பெற்று விளங்குகிறது. உலகப் பிரசித்திப் பெற்றுள்ள வெங்கடாசலபதி கோயில் இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருமலை எனப்படும் மலையுச்சியில் அமைந்துள்ளது. வேறெங்கும் காணமுடியாத வகையில் ஏராளமான பக்தர்களும் பயணி களும் விஜயம் செய்யும் பரபரப்பான கோயிலாக இது சர்வதேச அளவில் அறியப்படுகிறது.

10 மங்களூர் கர்நாடக மாநிலம் மங்களூர் இந்தப் பட்டியலில் 10வது இடத் தைப் பெற்று இந்தியாவின் தூய்மையான நகரங்களில் ஒன்றாக இருக் கிறது. கர்நாடகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது கருநீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும் உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது. மங்களாதேவி தெய்வத்தின் பெயரில் அமைந்திருக்கும் இந்த மங்களூர் நகரம் பல காலமாக ஓய்வில்லாத ஒரு துறைமுக நகர மாகவே விளங்கி வந்திருக்கிறது..

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...