கேட்ட வரம் அருளும் கொப்புடைய நாயகி அம்மன்

 கேட்ட வரம் அருளும் கொப்புடைய நாயகி அம்மன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடைஅம்மன் கோயில் உள்ளது. இத்தலத்தின் மூலவராகவும், உற்சவராகவும் கொப்புடை நாயகி அம்மன் அருள்பாலிக்கிறார். மேலும் இத்தலமானது பழமை வாய்ந்து திகழ்கிறது. கொப்புடை அம்மன் கோயில், தென்னிந்திய பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. காரை மரங்கள் வளர்ந்திருந்த பகுதி யைத் திருத்தி அழித்து மக்கள் குடியமர்ந்ததால் அப்பகுதி காரைக்குடி எனப் பெயர் பெற்றது. காரைக்குடியின் தென்பகுதியில் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சங்கராபுரம் சிற்றூரில் கோயில் கொண்டிருந்தாள் காட் டம்மன். காட்டில் அமர்ந்திருந்ததாலே இந்த அம்மனுக்குக் காட்டு அம்மன் என மருவி காட்டம்மன் என்றானது.

அப்போது அப்பகுதியை ஆட்சி புரிந்துவந்த சிற்றரசன், காட்டம்மன் மீது அளவில்லா பக்தி கொண்டிருந்தான். தினந்தோறும் அம்மனை வழிபட்ட பின்னரே தன்னுடைய அன்றாடப் பணிகளைச் செய்யத் தொடங்குவான். தான் அன்றாடம் செய்யும் பணிகள் விவரம், அடுத்து செய்யப்போகும் பணி கள், பயணங்கள், திட்டங்கள், வரவு, செலவுகள் என எல்லாவற்றையும் மறைக்காமல் தனது மனசாட்சியாகத் தன்னையும் மனது மனதையும் ஆளும் அந்தக் காட்டம்மனிடமே ஒப்புவித்து வந்தான்.

காட்டம்மன் கோயில் உற்சவ விக்கிரகம் ஐம்பொன்னால் செய்யப்பட்டது.

அப்போது திடீரென முகலாயர் படையெடுப்பு நடந்தது. முகலாயர்களால் உற்சவ காட்டம்மனுக்கு ஏதும் நடந்துவிடக்கூடாது என்றெண்ணிய சிற்ற ரசன், செஞ்சை சங்கராபுரத்தில் இருந்த காட்டம்மன் கோயில் உற்சவ விக்கிரகத்தை அன்றாட வழிபாடுகள் முடிந்த பிறகு ஒரு வேப்பரத்தின் அடியில் இருந்த பெரிய பொந்தில் மறைத்து வைத்தான். காலங்கள் சில கடந்த நிலையில் மரப்பொந்தில் இருந்த காட்டம்மனை மாடு மேய்க்கும் சிலர் கண்டெடுத்தனர். அதை ஒரு மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். காரைக்குடி விரிவடைந்து வளர்ச்சியடைந்த பிறகு அந்தச் சிலையைத் தற்போதுள்ள இடத்தில் நிறுவினர்.

இப்படி ஒப்படை செய்யப்பட்டதால் ஒப்படையாள் எனப் பெயர் பெற்றது. இதுவே நாளடைவில் மருவி கொப்புடையாள் என்றானது. அம்மனின் நாமம் குறித்து இலக்கியவாதிகள் கூறுகையில் கொப்பு என்பது பெண்கள் அணியும் காதணிகளில் ஒன்று. இந்த அம்மன் காதில் கொப்பை அணிந் திருப்பதாலும் கொப்புடைய நாயகி என்று அழைக்கப்படுகிறாள் என விளக்கம் அளித்துள் ளனர்.

கொப்புடை நாயகி அம்மன் கோயில் காரைக்குடி நகரின் நடுவில் அமைந் துள்ளது. நுழைவாயிலில் மூன்று நிலைகளுடன் ராஜகோபுரங்கள் நிற் கிறது. இடதுபுறம் விநாயகர் சந்நிதியும் கருப்பர் சந்நிதியும் உள்ளது.

சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் மூலவரும் உற்சவ ரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத் தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில்தான். காவல் தெய்வம் கருப்பண்ண சாமி வேறெங் கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி இங்கு அருள்பாலிக்கிறார்.

வலதுபுறம் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கிறார். கருவறையைச் சுற்றியுள்ள பிராகாரத்தில் கன்னிமூல கணபதி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனிச் சந்நிதிகள் கொண்டு அருள்கின்றனர். உள்பிராகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் உவந்தருள் செய்கிறார். சுப்பிரமணியர் எதிரே பைரவர் சந்நிதி உள்ளது. கருவறையில் ஒப்புடை நாயகி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருளாட்சி புரிகின்றாள். கோயிலில் தேர்த்திரு விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. இந்தத் தேர் பனைமர சட்டங்களால் உருவாக்கப்பட்டது. தேரானது கொப்புடைய அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு கண்மாய் வழியாகக் காட்டம்மன் கோயிலுக்குச் செல்லும். பின் அங்கிருந்து மீண்டும் கண்மாய் வழியே காரைக்குடிக்கு வந்து நிலை நிற்கும்.

தோல் நோய்கள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர் மற்றும் மணவாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திப்போர் போன்றவர்கள் அனைவரும் வந்து வழிபட்டு அம்மனின் அருளைப் பெற்று தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகின்றனர்.

உடல்நலக் குறைவினால் அவதிப்படுவோர், இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். பூரண நம்பிக்கை கொண்டு இங்கு வருவோரின் குறைகள் யாவும் நிவர்த்தியடைகிறது என்பது நம்பிக்கை.

சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய்க் கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய்க்கிழமையும், ஐந்து செவ்வாய்க் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய்க்கிழமையும் கொப்புடை யம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறும்.

சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச் செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயி லின் சிறப்பான திருவிழா ஆகும். வாரத்தின் ஒவ்வொரு ஞாயிறு, செவ் வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...