நீட்ட்ட்ட்டிக் கொடுத்த NEET

 நீட்ட்ட்ட்டிக் கொடுத்த NEET

2008 முதல் 2018 வரையிலான 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் இருந்து மருத்துவப் படிப்பிற்குத் தேர்வு பெற்ற மாணாக்கர்களது மொத்த எண்ணிக் கையே 50க்கும் குறைவே.

உச்சபட்ச மதிப்பெண் பெறும் ஏழை மாணவ, மாணவியருக்கு சில நேரங் களில் அது சாத்தியமாகியிருக்கின்றது. இல்லையேல் பணம் படைத்த வருக்கும், அதிகாரம் படைத்தவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரி களின் கதவுகள் வழி திறந்திருக்கின்றன.

நீட் தேர்வுக்கு முந்தைய காலகட்டங்களில் அரசுப் பள்ளிகளுக்கென தனி இடஒதுக்கீட்டை எந்த அரசும் கொடுக்கவில்லை. கொடுத்ததும் இல்லை. கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீடு எனச் சில காலம் இருந்து விட்டு, பின்பு அரசியல் சித்து விளையாட்டுகளில் அதுவும் காணாமல் போய்விட்டது.

தேர்வைக் கண்டு பயம்கொள்ளுதலும், தேர்வில் தோல்வி அடைந்ததற்காக உயிரை மாய்த்துக்கொள்ளுதலும் NEETல் தொடங்கியதில்லை. 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளிலும் முன்னரே நிகழ்ந்துள்ளது. தொடர்ந்தும் வந்துள்ளது.

மதிப்பெண்களைத் துரத்திக்கொண்டிருக்கும் வரை,  இத்தகைய அவலங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

அனிதாவின் மரணம் நீட் தேர்வினால் ஏற்பட்டதென்பதை, ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஆனால் அடுத்தடுத்த மரணங்கள் என்பது அரசியலாக்கப் பட்டது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

மதம், இனம்,சாதி, பொருளாதாரம் என எவ்வித பாகுபாடுமின்றி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் வாழ்வின் அடித்தட்டிலுள்ள குடும்பங்களிடமிருந்தும் மருத்துவர் கள் உருவாகத் தொடங்கியிருக்கின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் அரசுப் பள்ளிகளிலிருந்து 950க்கும் மேற் பட்ட மருத்துவர்கள் தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளனர். இவர்களில் அநேக நபர்கள் அடித்தட்டு நிலையில் உள்ள மக்கள்.

பெரும்பாலும் எல்லா மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகத் தொடங்கி இருக்கின்றனர். சேலம், புதுக்கோட்டை, தர்மபுரி ஆகிய மாவட் டங்கள் அரசுப் பள்ளிகளில் நடப்பு ஆண்டில் முன்னிலையில் இருந்ததைக் கவனிக்க வேண்டும். பின்தங்கிய் மாவட்டங்களாக கருதப்படும் மாவட்டங் களில் இருந்தும் மருத்துவர்கள் புறப்பட்டிருப்பதன் காரணம் எதனால்? எங்கிருந்து? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த கால தேர்வு முறைகளில்  12ஆம் வகுப்பு மதிப்பெண் முறைகளில் கிடைக்காத  மருத்துவ வாய்ப்பு 7.5% இடஒதுக்கீட்டின் மூலம் எளிய மக்க ளுக்குக் கிடைத்துள்ளது என்பதை இந்த இடத்தில் கவனிக்க வேண்டியிருக் கிறது. அத்தோடு மதிப்பெண்களை நோக்கி ஓடும் மனநிலையும் தற்போது மாறத் தொடங்கியிருக்கிறது.

அரசுப் பள்ளிகளிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வான மருத்துவ மாணவிகளை நேர்காணல் செய்தால் தெரி யும். அவர்களுக்கான வாய்ப்பு எங்கிருந்து உருவானது என்பது புரியும்.

நீட் எதிர்ப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், அதுவரை அரசுப் பள்ளி மாண வர்களுக்கான வாய்ப்பை  7.5 சதவிகிதத்திலிருந்து நாம் இன்னும் அதிகரித் துக் கொடுக்கவேண்டிய  அவசியத்தில்  இருக்கின்றோம் என்பதையும்  கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கின்றது. அப்பொழுதுதான் மக்களுக் கான மருத்து வர்கள் அதிகம் உருவாக வாய்ப்பும், கிராமப்புறங்களில் தாய்மொழி பேசும் மருத்துவர்களையும் நம்மால்  உருவாக்க முடியும்.

நீட் ரத்து செய்யப்பட வாய்ப்பே இல்லை எனில், அதனை நேர்மறையாக எதிர்கொண்டு, மாணவர்கள் அத்தேர்வினை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு களைக் கொடுப்பதற்குத் தயாராக வேண்டும். இல்லை. ரத்து செய்ய முடியு மெனில் அதனை உடனடியாகச் செய்துவிட்டு, மாற்றுமுறையிலான தேர்வு முறைகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உரிய இடஒதுக் கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு நீட் தேர்வின் மீதான குழப்பங் களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே நம் மாணவர்களுக்கும் நல்லது. நம் மாநிலத்திற்கும் நல்லது.

சிகரம் சதிஷ், எழுத்தாளர்- ஆசிரியர்

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...