டோலோ 650 மாத்திரைகள் இந்தியாவில் ரூ.350 கோடிக்கு விற்பனை

 டோலோ 650 மாத்திரைகள் இந்தியாவில் ரூ.350 கோடிக்கு விற்பனை

COVID-19 தொற்றின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றான காய்ச்சல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரையின் விற்பனையை மும்மடங்காக அதிகரித் துள்ளது. இது சாதனை அல்ல. வேதனைதான். நோயை மக்களுக்குத் தீர்க்கிறது மாத்திரை அதில் தவறு இல்லை. ஆனாலும் மாத்திரைகள் நோயின் தீர்வுதான். ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்கள், பல்லாயிரக்கணக்கான டோலோ 650 மாத்திரைகளை ஒரு சில ஆண்டுகளில் விழுங்கியிருக்கிறார்கள் என்பது உள்ள படியே நன்மையல்ல.

2019ஆம் ஆண்டில் கோவிட்-19 பரவுவதற்கு முன்பு, இந்தியா சுமார் 7.5 கோடி டோலோ மாத்திரைகளை விற்றுள்ளது என்று ஆராய்ச்சி நிறுவனமான IQVIA வெளி யிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2021 நவம்பர் மாதம் வரை, இது 145 மில்லியன் ஸ்ரிப்கள் (2019 ஆம் ஆண்டை விட இரு மடங்கு) அதாவது, 202 கோடி மாத்திரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு COVID-19 தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து, இந்தியா வில் ரூ.350 கோடிக்கும் அதிகமான டோலோ 650 மாத்திரைகளை விற்பனை செய்துள்ள தாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் விற்ற மாத்திரைகளின் அளவை அடுக்கி வைத்தால், உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தைவிட பல நூறு மடங்கு உயரமாக இருக்கு மாம்.

உலக அளவில் மட்டுமல்ல, இந்தியாவில் எவ்வளவு விற்பனை ஆகியிருக்கிறது தெரியுமா? கடந்த ஓராண்டில் மட்டும் கிட்டதட்ட 650 கோடி (டன்) அளவுக்கு விற்பனை ஆகியிருக்கிறது.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையுடன் இந்தியா போராடி வரும் நிலையில், டோலோ 650, மார்ச் 2020 முதல் இதுவரை ரூ.507 கோடி அளவிற்கு விற்பனையாகி, பாராசெடாமல் மாத்திரையின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.  கொரோனா காலகட்டத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட மாத்திரைகளில், டோலோ 650 மற்றும் CALPOL 650 மாத்திரைகள் இடம் பெற்றுள்ளன.

டோலோ-650 மாத்திரையை பெங்களூருவைத் தளமாகக் கொண்ட மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் தயாரித்து வருகிறது. டோலோ-650 ஒரு பிரபலமான வலி நிவாரணி என்பதோடு, காய்ச்சல் – உடல் வலி ஏற்படும் போதும் எடுத்துக் கொள்ள மருத்துவர் களால் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இதய நோய், சிறுநீரக பிரச்சினை (Kidney Problem), நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்கூட, டோலோ-650 மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் கள் மருத்துவர்கள். இது கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் பொதுவாகவே இருக்கும் மருந்து எனலாம்.

முதுகுவலி, தலைவலி, மூட்டுவலி, பல் வலி போன்ற உபாதைகள் வந்தால் வலி யைத் தணிக்கப் பயன்படுகிறது. காய்ச்சல் காரணமாக உடலில் ஏற்படும் வலியைக் குறைக்கிறது. புற்று நோயினால் அவதியுறும் நோயாளிகளுக்கு அல்லது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு, அவர்கள் வலி யைச் சமாளிக்க உதவும் வகையில் இது பெரும்பாலும் அளிக்கப்படுகிறது. டோலோ 650 மி.கி. மாத்திரை (Dolo 650 MG Tablet) பொதுவாக வாய்வழியாக அல்லது மலக்குடல் வழியே அளிக்கப்படு கிறது, இது நரம்புவழி உபயோகத் திற்கும் கிடைக்கிறது.

பலரும் காய்ச்சல் அதிகமாக இருக்கும் சமயங்களிலும்கூட டோலோவை மருந்துக் கடைகளில் வாங்கி சாப்பிடுகிறார்கள். அது மிகவும் தவறு. இப்படி எதற்கெடுத்தாலும் டோலோ மாத்திரையைப் பயன்படுத்துவது கடும் விளைவுகளை உண்டாக்கும் என்கிறார்கள்.

DOLO 650 அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதால் பல்வேறு பக்கவிளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என மருந்தியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

DOLO 650 எடுப்பதால் சிறுநீரகப் பிரச்சினைகள், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. ஆனால் கல்லீரல் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்கிறார்கள்.

oxyphenbutazone, metamizola, leflunomide, pilocarpine, ethanol, lamotrigine, phenytoin போன்ற சேர்மக் கலவைகளால் ஆன மாத்திரைகள் எடுக்கும்போது அவற்றுடன் சேர்த்து DOLO 650 மருந்துகளை எடுக்கக்கூடாது. அதனால் கடும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப் புண்டு என்றும் கூறுகிறார்கள்.

மது அருந்திய சமயங்களில் DOLO 650 எடுத்துக் கொள்வது ஆபத்தில் முடியலாம் என்பது குடிமகன்களுக்கு சொல்லும் அறிவுரை.

எது எப்படியோ, மாத்திரையைக் குறைக்க, பழங்கால முறைப்படி, இஞ்சி, சுக்கு, திப்பி போன்ற இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...