தலைவி தத்தெடுத்த வளர்ப்பு மகன்

 தலைவி தத்தெடுத்த              வளர்ப்பு மகன்

இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட ஜெயலலிதா இன்னொரு பெண்ணின் கண்ணசை வில் கைப்பாவையாகச் செயல்பட்டார் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

கட்சியில் தன்னை மறைமுகத் தலைவியாக அறிவித்துக்கொண்டு செயல்பட்டவர் சசிகலா. தனி மனுஷியாக்கப்பட்ட ஜெயலலிதா உறவுகளுக்காக ஏங்கியிருக்கிறார். அதைச் சரியாகப் புரிந்துகொண்ட சசிகலா தன் உறவுச் சொந்தங்களை அவரிடம் பழகவிட்டு உறவை பலப்படுத்திக்கொண்டார். ரத்த உறவுகளை வாசலுக்கு வெளியே நிறுத்திவைத்தார்.

சட்டமீறலாக அரசுக்குச் சொந்தமான டான்ஸி நிலத்தை முதமைச்சராக இருந்தபோது பச்சைக் கையெழுத்தைப்போட்டு வாங்கிவிட்டு பின் திருப்பிக் கொடுத்தார். அதேபோல் சொத்துக்குவிப்பு வழக்கில் சரியான முறையில் நடந்துகொள்ளாததால் தானே வழக்கில் சிக்கிக்கொண்டு மாண்டார்.

ஒரு மனிதனை வளர்ப்பு மகனாக அறிவித்து பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்து ஊரே மெச்ச திருமணம் செய்துவிட்டு ஆட்சியை இழந்தார். பின் வளர்ப்பு மகனைத் துறந்தார்.

சென்னை பெருவெள்ளத்தில் அணையைத் திறக்க முடியாதபடி ஜெயலலிதாவின் அரணாக இருந்து பல நூறு உயிர்கள் பறிபோகக் காரணமானவர் சசிகலா.

ஜெயலலிதா மரணத்தில்கூட அவரைப் பார்க்கவிடாமல் மத்திய அமைச்சர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டினார் என்பது வரலாறு.

இரும்பு மனுஷி, எதற்கும் அஞ்சாதவர், ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிவர் என்று பெருமைப் பட்டுக் கொண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஜெயலலிதாவின் பின்னால் இருந்து கொண்டு ஆப்பசைத்த, குழிபறித்த, சாட்டையைச் சுழற்றிய, சூத்திரதாரியைப் பற்றித் தெரியாது.

சசிகலா உடனிருந்து நடத்திவைத்த, சந்தி சிரித்த திருமணத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

ஒரு கின்னஸ் சாதனையாகவே பதிவாகியிருக்கிறது சுதாகரன் திருமணம். தமிழகத்தைத் திகைப்பில் ஆழ்த்திய அந்த ஆடம்பரக் கல்யாணம், ஜெயலலிதாவின் ஆட்சியையே முடிவுக்குக் கொண்டுவந்தது.

2017ல் சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் – நால்வரும் முறைகேடாக சொத்து சேர்த்ததை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இறந்துவிட்டதால் வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். ஆனால் அது விடுதலை அல்ல.

சசிகலா, சுதாகரன், இளவரசி – மூவரும் மறுநாள் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட னர். தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்தவேண்டும் என்பதும் தண்டனை யில் ஒரு பகுதி. குவித்த சொத்துக்களை விற்றுத்தான் அபராதத்தை செலுத்தவேண்டும் என தீர்ப்பு.

‘தமிழக அரசியலுக்கு சசி வேண்டும்’ என்று ஜனவரியில் சிலர் போட்ட கணக்கால் தீர்ப்பின் சரத்துகள் அனுமதிக்கப்பட்டன. 2021 ஜனவரியில் சசிகலாவும், இளவரசியும் அபராதத்தைக் கட்டி வெளியே வந்துவிட்டனர். பின் சுதாகரனும் சிறையிலிருந்து வெளிவந்தார்.

90ஸ், 2K தலைமுறை சுதாகரனின் திருமண நிகழ்வை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காக ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்..

1995. ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சர். தனது குடிமக்கள் வாய்பிளக்கும் வகையில் தன் வளர்ப்பு மகன் சுதாகரனுக்குத் திருமணம் என்னும் திருவிழாவை நடத்தத் தீர்மானித் தார். ஒன்றரை லட்சம் பேருக்குமேல் கலந்துகொண்ட திருமணம். அதற்குத்தான் கின்னஸ் விருதும். இது 26 வருடங்களுக்கு முன் (8.9.95) நடந்த பிரம்மாண்டம் என்பதை நினைவில் கொண்டு கீழ்க்காணும் செலவுக்கணக்கைப் படிக்கவும்.

ஒரு வெள்ளித் தட்டில் பரிசுப் பொருட்கள், ஒரு பட்டுச் சேலை, பட்டு ரவிக்கை ஆகியவற் றுடன் வி.ஐ.பி.களுக்கு அழைப்புகள். ஒவ்வொன்றும் ரூ. 20,000/- பெறுமானவை..

அலங்காரங்கள், கட்-அவுட்கள், சிலைகள் இவற்றிற்கு மட்டும் ரூ. 50 லட்சம். இரண்டு லட்சம் தம்பூல பைகள். ரூ.36 லட்சம். வி.ஐ.பி. விருந்தினர்கள் தவிர, 1,10.000 கட்சிக்காரர் களுக்கு உணவு ஏற்பாடுகள்.

சென்னையின் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் வி.ஐ.பி.க்களுக்காக 1,050 அறை கள். சுமார் 300 குளிரூட்டப்பட்ட வாடகைக்கார்கள்.

கலை இயக்குநர் தோட்டா தரணி அமைத்த 70,000 சதுர அடி பரப்பில் திருமணப் பந்தல். ஒவ்வொன்றும் 25 ஆயிரம் பேர் கொள்ளுமளவுக்கு 10 உணவு அரங்கங்கள் அமைக்கப் பட்டன. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மழை.

மின்கம்பங்களில் கரண்ட் எடுப்பது, நகர் முழுக்கப் பள்ளம் தோண்டி அலங்கார வளைவு அமைப்பது, நிதி வசூல், காவல் துறை குவிப்பு என்று ஒரே வேட்டை விளையாடுதான். தவிர திருமணத்துக்கு மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு விபரீதம் நிகழ்த்தப்பட்டது. திருஷ்டி படாமல் இருக்க இது போன்ற நிகழ்வுகளுக்கு சில பரிகாரங்கள் செய்வதுண்டு! இருப்பதில் மிகப் ‘பெரிய’ பரிகாரத்தைச் செய்ய மாந்திரீகர் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதா முன்னிலையில் இரவில் நடத்தி முடிக்கப்பட்டது! அதோடு திருவக்கரை கோயிலில் மந்திரிக்கப்பட்ட தங்கத் தகடுகளை, மணவிழாப் பந்தலின் எட்டுத் திக்குகளிலும் புதைத் தார்கள்.

வைர, வைடூரியம் உட்பட நவமணிகளையும் போட்டுப் புதைத்துச் சாணத்தால் மெழுகினார் கள்! கூடவே, மணமேடையிலும் ஒரு அடி இடைவெளியில் மந்திர வார்த்தைகள் பொறித்த தங்கத் தகடுகள் புதைக்கப்பட்டன! இவை அனைத்தும் அப்போதே பத்திரிகைளில் செய்தி களாக வந்தன.

திருமண வளாகத்துக்கு உள்ளே மூன்று ஏ.ஸி. பங்களாக்கள் அசுரவேகத்தில் கட்டப்பட்டன! அதே நேரம் திருமணம் நடைபெற்ற எம்.ஆர்.சி. நகரில் வசித்த குடும்பங்கள் போலீசாரால் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டன.

பந்தலில் வரவேற்க சென்னை கல்லூரிகள் தங்களிடம் பயிலும் அழகான பத்து மாணவி களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப கட்டாயப்படுத்தப்பட்டன.

ஜெயலலிதாவும், சசிகலாவும் திருமணத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொண்டு நடந்துவந்த புகைப்படங்கள் வெளியாகத் தொடங்கின. அந்தப் படங்கள்தான் மக்கள் மனதில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.

மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்குவதாக அறிவித்த ஜெயலலிதா, அவருக்கு உதவியாள ராக வந்த சசிகலா – இவர்கள் நகைக்கடைகளாக நடமாடுவதைப் பார்த்து திகைத்துப் போனார்கள் தமிழக மக்கள்.

திருமணத்துக்கு வந்த பரிசுப் பொருளே 100 கோடி ரூபாயைத் தாண்டும் என்று ஊடகங் களில் செய்திகள் வெளியாயின. திருமண ஏற்பாடுகளைப் பற்றி பத்திரிகைகள் எழுதத் தொடங்கியதுமே ஜெயலலிதா பொங்கிவிட்டார் :

‘‘ஒரு முதல்வரின் மகன் திருமணம் எப்படி நடக்குமோ, அப்படித்தான் இந்தத் திருமணமும். இதுபற்றி யாரும் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை!’’

1995 செப்டம்பரில் சுதாகரனின் இந்தத் திருமணத்தை நடத்துகிறார் ஜெயலலிதா. எட்டே மாதத்தில் நடந்த 1996 மே சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெறு கிறது அ.தி.மு.க. பர்கூரில் ஜெயலலிதாவே தோற்றுப் போனார். அதுவரை சுப்பிரமணியம் சுவாமி வழக்கை நம்ப மறுத்த தமிழக மக்கள் ஜெயலலிதாவை அருவறுத்து ஒதுக்கிய தருணம் அது.

ஒரே வருடத்தில் தனது வளர்ப்பு மகன் என்ற பதவியிலிருந்து சுதாகரனை வெட்டி தூக்கி எறிந்தார் ஜெயலலிதா. 2001ல் ஜெயலலிதா முதல்வராக மீண்டதும், ஹெராயின் வழக்கு, கைத் துப்பாக்கி வழக்கு என சுதாகரன் மீது வழக்குகள் பாய்ந்தது தனிக் கதை.

யார் இந்த சுதாகரன்?

சசிகலாவின் உடன் பிறந்த அக்கா வனிதாமணியின் கடைசி மகன்தான் சுதாகரன். T.T.V. தினகரன், பாஸ்கரனுக்கு அடுத்ததாகப் பிறந்தவர். தன்னை சின்ன எம்.ஜி.ஆர். என்று அழைத்துக்கொண்டு சில காலம் வலம் வந்தார்.

இவ்வளவு வளர்ந்த ஆண் மகனை ஏன் தத்தெடுக்கிறார் என எல்லாரும் ஜெயலலிதாவை வியந்த சில மாதங்களில் நடிகர் சிவாஜி கணேசன் பேத்தி யோடு சுதாகரனுக்குத் திருணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் பெரும் கோடீஸ்வர குடும்பங்கள் இணைந்த மணவிழா அது. பின்னாட்களின் நிகழ்வுகள் சிவாஜியின் மனதை சுக்குநூறாக்கி உருகுலைத் தது.

இவ்வழக்கில் அப்ரூவர் ஆகிவிடுமாறு சுதாகரனுக்குப் பல இடங்களிலிருந்தும் அறிவுரை யும், அச்சுறுத்தலும் வந்தன. ஆனால் சுதாகரன் மறுத்துவிட்டார்.

ஏராளமான சொத்துக்களை வைத்துள்ள மன்னார்குடி குடும்பத்தினருக்கு 10 கோடி ரூபாய் எல்லாம் பிச்சைக் காசு. டி.டி.வி. தினகரனும் பாஸ்கரனும் தன் சகோதரரைக் கண்டுகொள் ளாமல் விட்டதுதான் பரிதாபம். ஆனால் ஜெயலலிதாவின் அந்த கோரமுகத்தை மறைக்க இன்று பல கோடி செலவில் திரைப்படம் உருவாக்கப்படுகிறது.

சினிமாவில் பிறவியெடுத்து அரசியல் தலைவியான ஜெயலலிதாவுக்கு, அவர் மரணத் துக்குப் பின் அதே சினிமா மூலம் ஒரு மறுபிறவி முயற்சிதான் ‘தலைவி’.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...