வள்ளுவனை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு

 வள்ளுவனை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்கொண்ட தமிழ்நாடு’ என்று பாரதி பாடியதற்குப் பிறகும் வள்ளுவனையும் அவர் வடித்த குறளையும் தேசிய நூலாக அறிவிக்காமல் இருப்பது ஏன்? ‘யாமறிந்த புலவரிலே வள்ளுவனைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை’ என்றும் பாரதி பாடியிருக் கிறார். மோடி தமிழ்நாட்டுக்கு அறிவிக்கை விடும்போதும் சொற்பொழிவு ஆற்றும்போதும் ட்வீட் செய்யும்போதும் தமிழையும் வள்ளுவனையும் மறக்காமல் குறிப்பிடுகிறார். பின் ஏன் தேசிய நூலாக அறிவிக்கத் தயக்கம்?

ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்குத் தேவையான வழிகளைப் போதித்தவர் திருவள்ளு வர். 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள்கள் வீதம் 1330 குறள்களை எழுதி யுள்ளார் திருவள்ளுவர். அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்றாகப் பிரித்து முக்கனியின் சுவையைப் போல், தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலகுக்கே விருந்தளித் துள்ளார் வள்ளுவர். ஆனால் குறளில் எங்குமே தமிழ், தமிழர் என்ற வார்த்தை இடம்பெறா தது இந்த நூலை உலகப் பொதுமறையாகக் கருதுவதற்கு அருமையான தகுதியாகும். உலகப் பொது மறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை நடைமுறைப் படுத்திய கலைஞர் கருணாநிதி ஆட்சியில்தான்.

திருவள்ளுவர் கோவில் வள்ளுவர் அவதரித்த இடம் என்று கூறப்படும் சென்னை மயிலாப் பூரில் வள்ளுவர், வாசுகிக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் திருவள்ளு வர் தினத்தன்று அரசு சார்பில் மாலை, மரியாதை அணிவிக்கப்பட்டு விழா நடைபெறுகிறது.

வள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31ஆம் ஆண்டு பிறந்திருக்கலாம் என்று திருவள்ளுவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள் திருவள்ளுவர் பிறந்து இன்றோடு 2053 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்துப் பயன்படுத்துகிறார்கள்.

திருவள்ளுவருக்குச் சிலை

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நடுக்கடலில் திருவள்ளுவருக்குச் சிலை அமைக்க கலைஞர் அரசு திட்டமிட்டது. அதன்படி 1996ஆம் ஆண்டு பணி தொடங்கப்பட்டு 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை அப்போதைய முதல்அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

கடல்மட்டத்திலிருந்து 30 அடி உயரம் கொண்ட பாறையில் இந்தச் சிலை அமைக்கப்பட் டுள்ளது. 7000 டன் எடை கொண்ட இந்தச் சிலை 3681 மிகப் பெரிய கற்களால் வடிவமைக் கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அரசு சிற்பக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கணபதி ஸ்தபதி இந்தச் சிலையைச் செதுக்கி நிறுவினார்.

திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 38 அடி உயரத்தில் இதன் பீடமும், 95 அதிகாரங்களைக் கொண்ட பொருட்பால் மற்றும் இன்பத்துப் பாலைக் குறிக்கும் வகையில் 95 அடி உயரத்தில் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. திருக்குறளின் 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் சிலையின் உயரம் 133 அடி உயரத்தில் நிறுவப் பட்டுள்ளது. இந்தச் சிலை 150 சிற்பக் கலைஞர்கள் மூலம் தினம் 16 மணி நேரம் 4 ஆண்டு கள் தொடர் உழைப்பின் மூலம் ரூ. 6 கோடியே 11 லட்சம் செலவில்  நிர்மாணிக்கப்பட்டது.

அதேபோல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி 1975 முதல் 1976 வரையான காலப்பகுதியில் வள்ளுவருக்குக் கோட்டம் கட்டினார்.

வள்ளுவர் கோட்ட மூலவர்

வள்ளுவர் கோட்டத்தின் கட்டடக்கலை வடிவம் திருக்கோவிலூரின் பெரிய கல்லின் செயல்திறன் உள்ள ஒரு கோவில் தேர் (39 மீ. உயரம்) போல் உள்ளது. வள்ளுவர் கோட்டத்தை தென்னிந்திய கட்டிடக்கலை நிபுணரான வி. கணபதி ஸ்தபதி தலைமையில் கட்டப்பட்டது. வள்ளுவர் கோட்டத்தின் முக்கிய ஆடிட்டோரியம் ஒரே நேரத்தில் 4,000க்கும் அதிகமான மக்கள் அமர்ந்து கண்டுகளிக்கும் வண்ணம்  எந்தத் தூணின் ஆதரவும் இல்லா மல்அமைக்கப்பட்டுள்ளது. தெய்வீகத் திருக்குறளின் 1330 வசனங்கள் வள்ளுவர் கோட்டத் தின் பரந்த ஆடிட்டோரியத்தை இணைக்கும் முகடு அரங்குகளில் உள்ள கிரானைட் நெடுவரிசைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுமானத்தில், 3000 கற்களாலான கற்கள் பயன்படுத்தப்பட்டன.

திருவள்ளுவர் ஆண்டு

பிரபவ ஆண்டு முறையில் தமிழ் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு அழிவும், இழிவும் உண்டானதை எண்ணிப் பார்த்து நுண்ணறிவுடைய அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடி ஆராய்ந்தனர்.

திருவள்ளுவர், இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் எனவும், அவர் பெயரில் தொடராண்டைப் பின்பற்றுவது சாலச்சிறந்தது என்றும், அதையே தமிழாண்டு எனக் கொள் வது என்றும் முடிவு கட்டினர். இந்த முடிவை அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டு பின்பற்றத் தொடங்கினர்.

மேற்கண்ட முடிவைச் செய்தவர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார், தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை. நாவலர் நா.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர்.

திருவள்ளுவர் ஆண்டின் முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமை ஏழும் – வழக்கில் உள்ளவை. திருவள்ளுவரின் காலம் கி.மு. 31. இப்பொழுது திருவள்ளுவர் ஆண்டு 2053.

தைத் திங்களின் பெருமை

தைத் திங்களில்தான் உழவர்களின் விளைபொருள் களஞ்சியத்துக்கு வருகிறது. பொருளா தார திட்டம் வகுக்கும் காலம் தை. கிராமத்தினர் – ஊர்ச் சொத்தை குத்தகைக்கு விடும் காலமும் தைத் திங்களே.

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 முதல் ஏற்று 1972 முதல் அரசித ழிலும் வெளியிட்டு – தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப் பெற்று வருகின்றது.

எனவே உலகிலுள்ள 10 கோடித் தமிழ் மக்களும் தமிழர் மானம் காத்திட திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்ற வேண்டும். கடிதங்கள், அழைப்பிதழ்கள் ஆவணங்கள் ஆகியவற்றில் திருவள்ளுவர் ஆண்டினையே பின்பற்ற வேண்டும். திருவள்ளுவர் தமிழ் மொழியில் குறளை எழுதியதாலும், தமிழரானதாலும் குறளையும் வள்ளுவரையும் ஏற்றுக் கொள்ள வும் பிற மொழியினர் தயங்குகின்றனர்.

ஆனால் அவருடைய பொதுமையை உணர வேண்டும். ஓரிடத்திலேனும், தமிழ் என்றோ, தமிழ்நாடு என்றோ, முவேந்தர் என்றோ திருக்குறளில் குறிப்பிடவில்லை. அவர் கூறும் கருத்துக்கள் உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப் பெற்றுள்ளதால் – திருக்குறள் உலகமறை என்று மதிக்கப் பெறும் உயரிய நூலாகும்.

திருவள்ளுவர் திருக்கோயில் மூவலர்

அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தினாற்போல சிறிய குறட்பாக்களில் பெரிய செய்தி கள் அடங்கி உள்ளன. 60 ஆண்டு முறை பயனற்றது. – 60 ஆண்டு முறையை ஆரியர் தமக்குள்ள செல்வாக்கால் தமிழரசரிடம் புகுத்தினர்.

இப்போது வழங்கும் பிரபவ – அட்சய ஆகிய வருடங்கள் சாலி வாகனன் என்பவரால் (கனிஷ்கர்களால்) கி.பி. 78-ல் ஏற்பட்டவை. 60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதாலும் மிகக் குறுகியதினாலும் வரலாற்று நூலுக்குப் பயன்பட்டது. பிரபவ என்றால் எந்தப் பிரபவ என்று கூற முடியாததால் இந்தக் கால அளவு இன்மை பற்றித் தமிழுக்கு ஒரு குறையும் இல்லை. வழக்கில் உள்ள 60 ஆண்டு முறை சரியில்லை. இதைப் பின்பற்றுவது மானக்கேடு என அறிஞர்களும் – பகுத்தறிவுப் பகலவன் பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் கூறியுள் ளனர்.

இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவர் குறித்து தமிழில் தன் ட்விட்டர் பக்கத்தில், “திருவள்ளுவர் திரு நாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புகளும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக் கின்றன” எனப் பதிவிட்டுள்ளார்.

முதல் பத்தியை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

வள்ளுவர் எழுதிய திருக்குறள் தேசிய நூலாக்கத் தயங்குவதேன்?

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...