மார்கழி 27: ஸ்ரீஆண்டாளுக்கு உகந்த கூடாரவல்லித் திருநாள்

 மார்கழி 27:  ஸ்ரீஆண்டாளுக்கு உகந்த கூடாரவல்லித் திருநாள்

கூடாரவல்லி தினம் என்றால், கண்ணன், ஆண்டாளை ஆட்கொள்ளப் போவதாக ஆண்டாள் உறுதியாக நமக்கெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்திய நன்னாள். ஜீவாத்மா – பரமாத்மா தத்துவத்தில், பரமாத்மா வந்து ஜீவாத்மாவைத் தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொள்வது உறுதி என்பதை நிரூபித்த வைபவம் கூடாரவல்லி திருநாள். இந்த நாளில், அனைவரும் இல்லங்களிலும் அருகில் உள்ள கோயில் களிலும் அக்கார அடிசில் செய்து, பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைத்து, அக்கம் பக்கத்தார் அனைவருக்கும் பக்தர்களுக்கும் வழங்கி மகிழுங்கள்.

இந்த நன்னாளில், பெண்கள் புத்தாடை அணிகலன்கள் அணிந்து கொள்வது சுபிட்சத் தைக் கொடுக்கும். ஆண்டாளின் மன விருப்பத்தை ஸ்ரீமந் நாராயணன் நிறை வேற்றித் தந்தருளியது போல், நம் விருப்பங்களை அந்த ஆண்டாளே நிறைவேற்றி அருள்வாள் என்பதாக ஐதீகம்.

முடிந்தால், ஆண்டாளுக்கு புடவை சாத்துங்கள். ரோஜா, சாமந்தி, முல்லை, தாமரை மலர்கள் சூட்டி, அந்தச் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியை அலங்கரியுங்கள்.

‘மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேரோ லெம்பாவாய்’ எனும் பதத்தின் மூலம், ஆண்டாள் உலக ஒற்றுமையை சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தியிருக்கிறாள். அதாவது இறைவன் முன்னே அனைவரும் சமம் எனும் உணர்வை வலியுறுத்தியவள் ஆண்டாள். நமக்கெல்லாம் வழிகாட்டியாக, பெண் களுக்குத் தலைவியாகத் திகழ்பவள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

அதன் பொருட்டே, மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் அருளிய திருப்பாவையும் பிரபந்தப் பாசுரங்களும் பாடப்படுகின்றன. பிறகு பக்தர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருந்து (இதை கோஷ்டி விநியோகம் என்று சொல்லுவார்கள்) பிரசாதங்களை விநியோகம் செய்யும் மரபு உண்டாயிற்று. அந்த தருணத்தில், உயர்ந்தவர், தாழ்ந்த வர், அறிவுடையார், அறிவிலார், ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் என எந்தவொரு வேறுபாடும் இல்லாமல், அனைவரும் ஒன்றாகப் பாடி பகவானுக்கு அமுது செய்து, அதைப் பிரசாதமாக்கி அனைவருக்கும் வழங்கி மகிழும் வழக்கம், ஆண்டாளால்தான் நிகழ்ந்தது.

நாளை திருப்பாவை 27வது பாடலான சுடாரைவெல்லும் சீர்கோவிந்தா என்று தொடங்கும் பாடலைப் பாடுங்கள்.

“கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா 

உன்தன்னைப் பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே

பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம் 

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்.”

நாளை இப் பாடலைப் பாடி, சர்க்கரைப் பொங்கல் படைத்து, பெருமாளையும் ஆண்டாளையும் வழிபடுவோம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...