19-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது
19வது சென்னை சர்வதேசத் திரைப்படத் திருவிழா நேற்றுடன் (7-1-2022) நிறை வடைந்தது. கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெற்ற 19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டே ஷன்’ நடத்தியது. இந்தத் திரைப்பட விழாவை பிவிஆர் நிறுவனம் இணைந்து வழங்குகிறது. 53 நாடுகளில் இருந்து 121 திரைப்படங்கள் இந்த விழாவில் திரை யிடப்பட்டன.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி சத்யம் திரை யரங்கில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் பொதுச் செயலர் இ.தங்க ராஜ், இணை இயக்குநர் முரளி, விழாவின் நடுவர்களான இயக்குநர்கள் வசந்த பாலன், எஸ்.எஸ்.ஸ்டான்லி உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டி பிரிவில் சிறந்த படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டன.
வசந்த் சாய் தயாரித்து, இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
பரிசுத் தொகையாக இயக்குநருக்கு 2 லட்சம் ரூபாயும், தயாரிப்பாளருக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.
இரண்டாவது சிறந்த தமிழ்த் திரைப்படமாக கணேஷ் விநாயகன் இயக்கிய, ‘தேன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் களுக்கு சரி சமமாக தலா 50,000 ரூபாய் அளிக்கப்பட்டது.
இன்னுமொரு இரண்டாவது சிறந்த தமிழ்த் திரைப்படமாக பா.ரஞ்சித் தயாரிப்பில் தமிழ் இயக்கியிருந்த ‘சேத்துமான்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.
நடுவர்களின் சிறப்புப் பரிசாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தில் நடித்திருந்த நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு ஒரு லட்சம் ரூபாயும் ஸ்பெஷல் ஜூரி விருதும் வழங்கப்பட்டது.
இந்த வருடத்திய சினிமா சாதனையாளர் விருது இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு அளிக்கப்பட்டது.
அமிதாப்பச்சன் பெயரில் வருடா வருடம் வழங்கப்படும் சிறந்த இளம் சாதனை யாளருக்கான விருது பிரபல பின்னணிப் பாடகரான சித் ஸ்ரீராமுக்கு அமிதா பச்சன் யூத் ஐகான் அவார்டும் பரிசுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் அளிக்கப்பட்டது.
கர்ணன், உடன்பிறப்பே, தேன், கட்டில், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண் களும், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், ஐந்து உணர்வுகள், மாறா, பூமிகா, சேத்துமான், கயமை கடக்க உள்ளிட்ட 11 தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன.
சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் திரைப்படத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூரத்தி இசையில், கண்ணதாசன் எழுதி, சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பாடிய காலத்தை வென்றது ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடல்.
“இதை கர்நாடக இசை பாணியில் பாடுவதாய் குதறிவிட்டார் சித்ஸ்ரீராம்” என சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.