அமரர் கல்கியும் பொன்னியின் செல்வன் சினிமாவும்

 அமரர் கல்கியும்                   பொன்னியின் செல்வன் சினிமாவும்

கல்கி என்ற பெயர் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துலகில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத் தியது. புதிய வாசகர்கள் புதினங்களைப் படிக்க ஆர்வம் கொள்ள வைத்தது. அந்தப் பெயருக்குச் சொந்தக்காரர்தான் கல்கி கிருஷ்ணமூர்த்தி. 

இவர் எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ புதினம் தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. காரணம், தமிழக வாசகர்கள் மத்தியில் அவர் புதினங்களுக்கு இன்றுவரை நல்ல வரவேற்பு கிடைப்பதே ஆகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். சமஸ்கிருதமும் தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்துவந்த அக்காலகட்டத்தில் தமிழிசைக்காக சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி. நாட்டு விடுதலைப் போரில் பங்குகொள்ள வேண்டுமென்று விரும்பிய கல்கி, படிப்பை விட்டுவிட்டு, கரூரில் நாமக்கல் கவிஞர் தலைமை யில் நடந்த கூட்டத்தில் தடையை மீறிப் பேசினார். போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். அவருக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது.

சிறையில் இருந்தபோது ‘விமலா’ என்ற தமது முதல் நாவலை எழுதினார். இந்த நாவல் பிறகு வ.ரா. நடத்திய ‘சுதந்திரன்’ பத்திரிகையில் வெளியாகியது. ‘ஏட்டிக்குப்போட்டி’ என்ற நகைச்சுவை கட்டுரையை கல்கி எழுதி அனுப்பினார். ‘கல்கி’ என்ற புனைப்பெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதிய முதல் கட்டுரை இதுதான். தொடர்ந்து விகடனில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதலானார். ஆனந்த விகடனின் பொறுப்பாசிரியர் ஆனார். கல்கியின் எழுத்தாற்றலும், வாசனின் நிர்வாகத் திறமையும் சேர்ந்ததால், விகடனின் விற்பனை பல்லாயிரக்கணக்கில் உயர்ந்தது. விகடனில் கல்கி எழுதிய முதல் தொடர்கதை ‘கள்வனின் காதலி’. இது தமிழ்நாடெங்கும் கல்கியின் புகழைப் பரப்பியது. திரைப்படத்திற்கென்றே கல்கி எழுதிய ‘தியாகபூமி’ கதை திரைப் படத்தின் போட்டோக்களுடன் விகடனில் தொடராக வெளிவந்தது. புதுமை யான அந்த முயற்சி விகடனின் விற்பனையையும் கல்கியின் புகழையும் சிகரத்துக்குக் கொண்டுசென்றது. 

1952 – 1953ஆம் காலகட்டத்தில் கல்கி எழுதத் தொடங்கிய ‘பொன்னியின் செல்வன்’ மூன்றாண்டுகள் தொடராக வெளிவந்தது. கதையின் முடிவு பலருக்கு திருப்தி அளிக்கவில்லை என்று குறிப்பிட்டு, கதாபாத்திரங்கள் பின்னர் என்ன ஆனார்கள் என்பதற்கு ஒரு முடிவுரையே எழுதினார். அத்தகைய நாவல், பின்னர் வாசகர்களின் பேராதரவைப் பெற்று ‘கல்கி’ இதழில் பலமுறை மறு பிரசுரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கல்கியின் கதைகள் திரைத்துறையினரையும் கவர்ந்ததில் வியப்பில்லை. கல்கி கதைகளைத் தெளிவான காட்சியமைப்போடு திரைப்படத்துக்கு எழுதுவதைப் போலவே அழகாக எழுதுவார். வாசகர்களுக்குக் குழப்பம் ஏற்படாமல் சூழ்நிலையை சீன் பை சீன் சொல்வது அவர் ஸ்டைல்.

அதனால் அவர் கதைகளைப் படமாக்க தமிழ்த்திரையுலகில் பலமுறை பிரபல நடிகர்களாலும் இயக்குநர்களாலும் முயற்சி எடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது. காரணம் கல்கியின் கதைகளில் நிறைய அழுத்தமான கேரக்டர்கள் இருக்கும். கற்பனையானாலும் சம்பவங்கள் நாட்டில் நடந்த நடப்பு நிகழ்ச்சி களை மையப்படுத்தியே இருக்கும். படமெடுப்போர் அதை மாற்றாமல் எடுக்க வேண்டும். சரித்திரக் கதையென்றால் நிறைய பொருட்செலவில் எடுக்க வேண்டும். அப்போதுதான் பிரம்மாண்ட மாக கல்கி எழுத்துக்கு ஈடுகொடுக்க முடியும். கல்கி கதையைப் படமாக்குவதில் உள்ள இந்தப் பொறுப்பின் காரணமாகவே பலமுறை பலரால் அவர் கதை படமாக்கப்படுவது தடைப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை பிரம்மாண்டமான பொருட்செலவில் படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். உரையாடல் பகுதிகளை எழுத்தாளர் ஜெய மோகன் செய்கிறார்.

இந்தத் திரைப்படத்தை  மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனத்தின் சார்பாக இயக்கித் தயாரிக்கின்றார் மணிரத்னம்

பல தலைமுறைகள் கொண்டாடிவரும் நாவல் கல்கியின் “பொன்னியின் செல்வன்”.  ஏற்கெனவே இதைப் படித்துப் பலர் பரவசமாகினர். பலரும் இதைப் படமாக்க நினைத்து முடியாமல் போனது. ஆனால் அதை முடித்துக் காட்டிள்ளார் மணிரத்னம்.

இந்தத் திரைப்படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஜெய ராம், ஐஸ்வர்யா ராய், திரிசா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா,  பிரகாஷ்ராஜ் அஸ்வின் ககுமனு, நிழல்கள் ரவி போன்ற பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான்  இசைமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் இடம்பெறும் ஜெயம் ரவியின் காட்சிகள் முடிவடைந்தன. அதேபோல் தற்போது நடிகர் கார்த்தியின் வசனக் காட்சிகளும் முடிந்துவிட்டன. இந்த நிலையில் குவாலியரில் மற்ற நடிகர்களின் இறுதிக்கட்ட கட்சி காட்சிகளை பிரம்மாண்ட அரண்மனைகளில் மணிரத்னம் பட மாக்கிவிட்டார். கடந்த பல மாதங்களாக ஐதராபாத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது. இறுதி யாக பொள்ளாச்சியில் நடந்த ‘பொன்னியின் செல்வன்-1’ முதல் பாகத்தின் படப்பிடிப்பு இத்துடன் முடிவடைந்தது என்று படக்குழு அறிவித்தது. ஆர்.ஆர். வேலைகள்தான் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தலை முடியை நீளமாக வளர்த்து, கொரோனா போன்ற இயற்கை இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும் கட்டுமஸ்தான உடலமைப்புடனும், தோற்றம் மாறாமல் பேணிக் காப்பதும் கடினமாக இருந்துள்ளது. அத்துடன் மனதளவில் தளர்ச்சியும் அடைந்துள்ளனர். அதற்கும்மேல் பொன்னியின் செல்வன் படத்திற்காகப் பல படங்களின் வாய்ப்பு களைத் தவறவிட்டுள்ளனர்.

அரங்கங்களை பெரும்பாலும் தவிர்த்து இயற்கையான இடங்களிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டுள் ளதைக் குறிப்பிட்டு, கொரோனா காலத்தில்கூட இதை மணிரத்னம் பாதுகாப்பாக நடத்தியிருப்பதாகச் சொல்கின்றனர்.

குறிப்பாக, அரண்மனை காட்சிகள், போர் காட்சிகள் இவை அனைத்தும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் என உறுதியாகக் கூறுகின்றனர். இதற்காகப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர் களும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிகிறது.

படத்தில் 98 சதவிகித வேலைகள் நிறைவடைந்துவிட்டதால் இறுதிக்கட்டப் பணிகளை விரைவில் துரிதப்படுத்த திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அத்துடன் நாவலில் இருந்த சுவாரஸ்யம், நிச்சயம் திரையில் பிரதிபலித்து மாயம் செய்யும் எனவும் உறுதிபட தெரிவிக்கின்றனர்.

மூலவன்

1 Comment

  • என் பயமெல்லாம் – இந்தத் திரைப்படம் பொன்னியின் செல்வனாக, அதாவது கல்கியின் பொன்னியின் செல்வனாக, இருக்குமா என்பதுதான். கல்கியின் அழகான உரையாடல்கள்தான் இந்தக் கதைக்கே உயிரோட்டம் தந்தன – வந்தனம், பொன்தானம் என்ற வார்த்தையில் விளையாடும் வந்தியத்தேவன்-ஜோசியர் உரையாடல், அதில் அழகாகப் பழுவேட்டரையர்களைக் குறிப்பிடுவது, ஏன் கோபப்படுகிறீர்கள் என்று கேட்காமல், ஏன் இத்தனை மறக்கருணை பாலிக்கிறீர்கள் என்ற உபயோகம், ஆழ்வார்க்கடியானின் சமயோசிதமான பேச்சு… அடுக்கிக் கொண்டே போகலாம். வெறுமே செட்களைப் பிரம்மாண்டமாகப் போட்டுவிட்டு கதையின் உயிர்நாடியைக் கோட்டைவிட்டுவிடாமல் இருக்க வேண்டும். பார்க்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...