12 மணி நேரப் பணி, வாரத்தில் 4 நாள் வேலை! அமலுக்கு வரவிருக்கிறது?

 12 மணி நேரப் பணி, வாரத்தில் 4 நாள் வேலை! அமலுக்கு வரவிருக்கிறது?

ஒவ்வொரு நாட்டிலும் வேலை செய்யும் ஊழியர்களின் நேரம் தொடர்பாக பொருளாதாரக் கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

உலகத்திலேயே ஆசியா கண்டத்தில்தான் ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள்.அதிலும் இந்தியாவில்தான் அதிக அளவில் ஊழியர்கள் உழைக் கிறார்கள். வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் வேலை செய்கிறார்கள்.

கொலம்பியாவில் 47.6 மணி நேரமும், சீனாவில் 46 மணி நேரமும், துருக்கி யில் 45.6 மணி நேரமும், மெக்சிகோவில் 44.7 மணி நேரமும், கோஸ்டாரிகா வில் 43.5 மணி நேரமும் வார வேலை நேரங்களாக இருக்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வேலை செய்யும் தினத்தை 4½ நாட்களாகக் குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதேபோல இந்தியாவிலும் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் வேலை நாட்களைக் குறைக்க ஏற்கெனவே ஆலோசிக்கப்பட்டு வந்தது. தற்போது வேலை நாட்களை 4 நாட்களாகக் குறைக்க பரிசீலனை நடைபெற்று வருகிறது. வேலை நாட்கள் குறைக்கப்பட்டாலும், தினசரி பணி நேரம் அதிகமாக இருக் கும். நாள்தோறும் பணியாற்றும் நேரம் 12 மணி நேரம் வரை நீட்டிக்கப்படும். இதனால் வாரத்திற்கு 48 மணி நேரம் எனப் பணியாற்ற வேண்டிய அதே நிலையே ஏற்படும்.

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தை அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மசோதா குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

“தற்போது தொழில் நிறுவனங்களில் நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் வீதம் வாரத்திற்கு ஆறு நாட்களுக்கு 48 மணி நேரம் பணி நேரமாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக உள்ளன.

ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதியை மாற்றம் செய்ய அரசு விரும்பவில்லை. எனினும் ஒரு நாளுக்கான வேலை நேரத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.

மீதமுள்ள 3 நாட்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும். இதைத் தொழிலாளர் கள் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும். ஏனென் றால் அனைவராலும் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது. இவற்றை உள்ளடக்கி தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்து, மசோதாவைத் தயாரிக் கும் பணி நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதத்தில் மசோதா தயாரிக்கப்பட்டு மத்திய அமைச்சரவைக்கு அனுப்பப்படும். ஒப்புதலுக் குப் பிறகு மசோதாவை நிறைவேற்ற திட்டமிடப்பட் டுள்ளது. அடுத்த நிதியாண்டான ஏப்ரல் 1-ந் தேதி முதல் இதை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்றார் அவர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...