மாற்றுத்திறனாளி கிரிக்கெட் பயிற்சியாளராக அப்பாய் அலி தேர்வு

 மாற்றுத்திறனாளி கிரிக்கெட் பயிற்சியாளராக அப்பாய் அலி தேர்வு

பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராகத் தமிழக இளைஞர் அப்பாஸ் அலி  நியமனம்

அப்பாஸ் அலி, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 235 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். 1959 இலிருந்து 1966 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1991-1992 ஆம் ஆண்டில் ஆத்திரேலியா வில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்தியத் துடுப்பாட்ட அணியின் பயிற்சியாளராக இருந்தார். அவர் தற்போது பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளி களுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாள ராகத் தமிழக இளைஞர் அப்பாஸ் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து வாரியத்தின் பொதுச் செயலாளர் ஹாரூண் பாஷா கூறியிருப்ப தாவது  : “தமிழகத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் போட்டியானது பங்களாதேஷ் நாட்டின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் 100 வது பிறந்த நாளையொட்டி நடக்க இருக்கிறது.

இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்,  பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியானது அடுத்த ஆண்டு 2022 ஜனவரி மாதம் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.

ஷார்ஜாவில் நடந் த மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பயிற்சியாளராகச் செயல்பட்ட அப்பாஸ் அலி இந்த போட்டிக்கான துணை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்” என்றார்.

இது குறித்து அப்பாஸ் அலி கூறியிருப்பதாவது : “இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக என்னை நியமனம் செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட அப்பாஸ் அலிக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித் துள்ளனர். அவருக்கு வாழ்த்துக்களைத்  தெரிவிக்க : +91 78454 66866

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...