மதுரையில் சிறையில் ரூ.100 கோடி ஊழல்

 மதுரையில் சிறையில்                      ரூ.100 கோடி ஊழல்

மதுரை சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ததில் போலிஸ் அதிகாரிகளால் ரூ.100 கோடி ஊழல்நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்கு ஒரு கொடுமை ஆடிக்கிட்டு வர்ற மாதிரி இருக்கிறது இந்தச் செயல். குற்றம் செய்துவிட்டு திருந்துவதற்காக செய்யப்பட்ட இந்தத் திட்டத்தில் காவல் காக்கவேண்டிய காவலர்களே ஊழலில் ஈடுபட்டது கடந்த ஆட்சியின் மீது அனைவருக்கும் எரிச்சல் அடைய வைத்துள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி முறை கேடு மாஜி அமைச்சர்கள், அதிகாரிகள் சிக்குகின்றனர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், விசாரணையில், சிறைத் துறையின் அதிகாரிகள் பலருக்கும் இதில் தொடர்பு உள்ளது என தெரியவந்துள்ளது. மேலும், இதில் அ.தி.மு.க. மாஜி அமைச்சர்களும் சம்பந்தப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை ஐகோர்ட் வக்கீலும், சிறைக் கைதி கள் உரிமை மைய இயக்குநருமான புகழேந்தி, ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களின் பேரில் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஓய்வுபெற்ற சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநிலத்தில் மதுரையில் மட்டுமே இது போன்ற ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாகக் கூற முடியாது. சென்னை, பாளையங்கோட்டை, திருச்சி, கோவை, வேலூர், கடலூர் உள்ளிட்ட 9 இடங்களில் இருக்கும் சிறைகளிலும் கைதிகளைக் கொண்டு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் பங்க் போன்றவையும் கைதிகளைக் கொண்டு செயல்படுகிறது. அரசு சிறப்பு தனிக்குழு அமைத்து, ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, விசாரணை மேற்கொள்வது அவசியம்” என்றார்.

இது மதுரை மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் இருக்கும் ஊழல் அதிகாரிகளுக்கு ‘கிலியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மத்திய சிறையின் 1,600 கைதிகளில் தண்டனை கைதிகள் மட்டுமே 700க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த கைதிகளைக் கொண்டு பொருட்கள் தயாரித்து, சிறை வளாகத்தில் உள்ள ‘பிரிசன் பஜார்’மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை சிறையில் அலுவலக கவர்கள், காடா துணிகள், நாப்கின், இனிப்பு, காரம், மழை கோட், கொரோனா காலத்தில் மாஸ்க் என பல பொருட்களையும் தயாரிக்கும் பணிகளில் கைதிகள் ஈடுபடுத்தப்படுகின் றனர். சிறை வளாகத்தில் நர்சரி, மூலிகை செடிகள், பூச்செடிகள், மரக்கன்று கள் வளர்த்து விற்கப்படுகின்றன. சிறை பின்புற இடத்தில் கத்தரி, வெண்டை, கோஸ், தக்காளி மற்றும் பல்வேறு வகையான கீரை வகைகளையும் பயிரிட்டுள்ளனர். சிறையில் வீணாகும் தண்ணீரை சுத்திகரித்து வழங்க, மறுசுழற்சி கருவியும் செயல்படுகிறது. மேலும், கட்லா, சாதா கெண்டை, ஜிலேபி, விரால் உள்ளிட்ட மீன்களை கைதிகள் வளர்த்து உயிருடன் விற்பதும் நடக்கிறது,

மேலும் துணிகள் சலவையகம், காளான் பண்ணை, மட்டன் ஸ்டால் போன்ற வையும் நடத்தப்படுகின்றன. சிறைக்குள்ளும், வெளியிலும் கேன்டீனும் செயல் படுகிறது. மதுரை சிறை வளாகத்தில் உள்ள மட்டன் ஸ்டாலுக்காக, சிவகங்கை சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் திறந்தவெளி யில் வளர்க்கப்படுகின்றன. அங்கிருந்து லாரிகள் மூலம் இவை மதுரை கொண்டு வரப்படுகின்றன. கைதிகளுக்கான சிறு வருவாயாகவும், தண்டனை முடிந்து, திருந்தி வெளிவரும்போது தொழில் வாய்ப்புகளுக்கு எனவும் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிறை அதிகாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சிறைத்துறை யில் ‘மெகா’ ஊழல் நடத்தியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த மருத்துவப் பொருட்கள், எழுது பொருட்கள், காகித உறைகள் ஆகியவற்றை அரசு அலுவலகங்கள், மருத்துவ மனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாகப் போலி கணக்குத் தயாரித்து ரூ.100 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.

ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்ட பொருட்களை லட்சக்கணக்கில் விற்றதாக கணக்கு காட்டி, கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் அப்போதைய சிறை கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி.களுக்கு தொடர்பு உள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை செயலாளர், சிறைத்துறை டி.ஜி.பி. ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் அப்போதைய சிறை கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி.களுக்கு தொடர்பு உள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை செயலாளர், சிறைத்துறை டி.ஜி.பி. ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘‘இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் வழக்கு ஏதும் பதிவு செய்யப் பட்டுள்ளதா? ஆயிரக்கணக்கான உறைகள் தயாரிக்கப்பட்டதாக மட்டுமே தகவல் அறியும் சட்டத்தில் தகவல் கிடைத்துள்ள நிலையில், லட்சக்கணக்கான எண்ணிக்கையில் விற்றதற்கான ஆதாரங்கள் இல்லாமல், பொது வழக்காக தொடர முடியாது’’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி தணிக்கை அறிக்கையின் மூலமே ஊழல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

அந்த மனுவில், “மதுரை மத்திய சிறையில் கைதிகளால் தபால் அனுப்புவதற்கான உறைகள், அட்டைகள் போன்ற ‘ஸ்டேஷனரி’ பொருட்கள், மருத்துவ உதவிப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவை பல்வேறு அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள், கோர்ட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தாக போலியாக கணக்கு தயாரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நடந்துள்ள இந்த ஊழலில் சுமார் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இது தெரியவந்துள்ளது.

சிறை கைதிகளால் அதிகமான பொருட்கள் தயாரிக்கப்பட்டதாகவும், அதற்காக சிறை கைதிகளுக்கு ஊதியம் கொடுக்கப்பட்டதாகவும் கூறி போலியான கணக்கு காண்பிக்கப்பட்டு அதன்மூலம் கோடிக்கணக்கில் பணம் சுரண்டப் பட்டுள்ளது. இந்த ஊழலில் சிறைத்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது.

இதுதொடர்பாக சிறைத்துறை டி.ஜி.பி., தமிழக உள்துறை செயலாளருக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து லஞ்சஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மதுரை சிறையில் ஊழல் நடந்திருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான விவரங் களுடன் புதிய வழக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மாஜி அமைச்சர்கள் மதுரை மத்திய சிறையில் உயரதிகாரியின் கணவர் ஒருவர் டோர் கீப்பராக பணியாற்றியபோது, கைதிகள் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது, மூலப்பொருட்கள் வாங்குவது என பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இதில் உயரதிகாரிகள் முதல் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கும் தொடர்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது.  மேலும் கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு 20 சதவிகிதம் கூலியாகக் கொடுக்க வேண்டும். அதுவும் கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். எனவே, முறை யாக மோசடிகளை விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...