ஓஷோ சிந்தனைகள்

ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக் கிறார்கள். சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். அவர்கள் பரவாயில்லை. இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார் கள். அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடு கின்றனர்.

நன்னெறியைப் பற்றியும், அதன் மூலம் சொர்க்கத்தை அடைவதைப் பற்றிச் சிந்திப்பதும், பணத்தைப் பற்றிச் சிந்திப்பதற்குச் சமமாகத்தான் இருக்கும். ஒரு மனிதன் நிகழ்காலத்தில் வாழும்போது மட்டும்தான் பணத்தைப் பற்றியோ அடுத்த உலகத்தைப் பற்றியோ சிந்திக்காமல் இருக்கமுடியும். பணம் என்பது எதிர்காலம். எதிர்காலத்துக்கான பாதுகாப்பு. அதிகாரத்தின் அடையாளம்.

அதனால்தான் நீ பணத்தை மேலும் மேலும் சேகரிக்கிராய். ஆனால் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உன்னை விட்டு ஒருபோதும் அகலாது. ஏனெனில் அதிகார தாகம் முடிவில்லாதது. மக்கள் அதிகாரத் திற்காக ஏங்கித் தவிக்கின்றனர். ஏன் என்றால் அவர்கள் அவர்களுக் குள்ளே வெற்று மனிதர்களாக இருக்கிறார்கள்.

அந்த வெறுமையை எதைக் கொண்டாவது நிரப்பப் பார்க்கின்றனர் .அது பணமாக இருக்கலாம்; அதிகாரமாக இருக்கலாம்; தன் மதிப்பாக இருக்கலாம்; மற்றோரால் மதிக்கப்படுவதாக இருக்கலாம்; நல்ல குண நலன்களாக இருக்கலாம். இவ்வுலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள். இருக்கும் வெறுமையை நிரப்ப முயல்பவர்கள் ஒரு வகை. இவர்கள் எப்போதும் ஏமாற்றத்துடனே இருக்கிறார்கள். அவர்கள் நிரம்ப குப்பையைச் சேகரிக்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பயனற்றதாகி விடுகிறது.

வெறுமையை அப்படியே காண முயலும் இன்னொரு வகையினர் தியானம் செய்தவர்கள் ஆகிறார்கள். உன் முன் இருக்கும் கண நேரத்தில் வாழ்ந்து பார். எதிர்காலத்தை விட்டுவிடு. அப்போது பணம் அதன் கவர்ச்சியை இழந்துவிடும்.

உங்கள் வருங்காலத்தைப் பற்றி நீங்கள் எதுவும் நிச்சயமாகக் கூற முடியாது. சொல்லவும் கூடாது. வருங்காலம் என்பது ஒரு திறந்த வெளி. இதை அறிந்துகொள்ளும் மனிதனின் முயற்சி நகைப்புக்குரியது. ஆனால் மனிதன் இதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான். இறந்த காலத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான். இது ஒருக்காலும் நடக்காது. நீங்கள் எப்போதும் நிகழ்காலத்துக்கு வருவதில்லை. நடந்து முடிந்ததை நீங்கள் சீர்செய்ய முடியாது. நடக்கக்கூடியதை உங்களால் அறிந்துகொள்ள முடியாது. வருங்காலத்தை உங்கள் அறிவால் தீர்மானிக்க முடியாது. வருங்காலத்தைப் பற்றி எதுவும் நிலையில்லை. ஆனால் மனிதன் வருங்காலத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதைத் தனக்குச் சாதகமாகச் செய்ய முயலுகிறான்.இது முட்டாள் தனம். நீங்கள் அதை முன்பே அறிந்து கொண்டால் அது வருங்கால மில்லை. அது இறந்த காலமாகி விடுகிறது.

கருமித்தனம்,பொறாமை கொண்ட மனம்,வெறுப்பு இவற்றிற்கு ‘பகிர்ந்து கொள்ளுதல்’என்பது என்ன என்று தெரியாது.நீங்கள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை.நீங்கள் யாருக்காவது எதையாவது கொடுத்தால் அதில் சில பேரங்கள் மறைந்திருக்கின்றன.நீங்கள் திரும்ப அவர்கள் ஏதேனும் வெகுமதிகள் கொடுக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்.எதையும் பதிலுக்கு எதிர்பாராது இருப்பதே பகிர்ந்து கொள்ளுதலின் அர்த்தமாகும்.இன்னும் சொல்லப் போனால் கொடுப்பவன்தான் நன்றியோடு இருக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் பேராசையைச் சரியாகப் புரிந்துகொண்டால் மட்டுமே நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைய முடியும். அதைத் துறக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சரியாகப் புரிந்துகொள்ளாத போதுதான் துறவு எண்ணம் வருகிறது.

சில பேர் பணத்துக்கு எதிராக இருக்கிறார்கள். சிலர் பணத்தைப் பிடித் துத் தொங்கிக் கொண்டிருக் கிறார்கள். ஒருவன் அதைக் கண்டு அஞ்சு கிறான். ஒருவன் பேராசை கொள்கிறான். இருவருமே பணத்தினால் ஆக்கிரமிக்கப்படுகிறார்கள். மிகுந்த ஈடுபாட்டினை முதலில் தவிர்க்க வும். அதைப் போல துறவு எண்ணத்திலும் ஜாக்கிரதையாக இருந்து தவிர்க்க வேண்டும். இரண்டுமே எலிப்பொறி போலத்தான்.

மிக்க ஈடுபாடும் அடக்குதலும் இயந்திரத்தனமானது.

நீங்கள் பேராசை, பாலுணர்வு, கோபம், பொறாமை. இவைகளுக்குள் உங்கள் மனதைத் திறந்து கொண்டு பயமில்லாமல் ஆழமாகச் சென்றால் நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைகிறீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கிறது. அறிந்து கொள்ளுதல் உங்களை விடுவிக்கிறது. மாறாக நீங்கள் அதை அடக்கினாலும், இயந்திரத்தனமாக மிகவும் ஈடுபட்டாலும், முடிவு ஒன்றுதான்.

முதலில் நீங்கள் உங்கள் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் உடலின் குரலுக்கு மதிப்பு கொடுங்கள். பிறகு மனதின் குரலைக் கேட்டு அதனைப் பூர்த்தி செய்யுங்கள். எதையும் தவிர்க்கா தீர்கள். அவற்றின் தேவைகளில் ஆழமாகச் செல்லுங்கள். அன்புடன் கூர்ந்து கவனியுங்கள். உங்கள் உடலோடும் மனதோடும் நட்பாக இருங்கள். அப்போதுதான் ஒரு நாள் அவற்றைக் கடந்து செல்ல முடியும்.

நான் ஏன் அடுத்தவரது கருத்துக்களைக் கண்டு பயப்படுகிறேன்? ஏன் என்றால் நீங்கள் நீங்களாக இல்லை. நீங்கள் மற்றவர்களது அபிப்பிரா யங்களைத் தாங்கும் தூணாக இருக்கிறீர்கள். நீங்கள், மற்றவரது அபிப்பிராயத்தைத் தவிர வேறு இல்லை. நீங்கள் அழகானவர் என்று மற்றவர் சொன்னால் ,நீங்கள் அழகாக இருப்பதாக நினைக்கிறீர்கள். அவலட்சணமாக இருப்பதாகப் பிறர் சொன்னால், அப்படி இருப்பதாகவே கருதுகிறீர்கள். இவ்வாறு மற்றவர் கூறும் அபிப்பிராயங்களை சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒருவர் நீங்கள் அழகானவர் என்று சொல்ல, அடுத்தவர் நீங்கள் அருவருப்பானவர் என்று சொன்னால் நீங்கள் பின்னவர் சொன்னதை மறக்க நினைக்கிறீர்கள். ஆனால் அதை உங்களால் மறக்க முடியாது. இரண்டு கருத்துக்களும் உங்கள் உள்ளேதான் ஆழமாக இருக்கும். இப்போது நீங்கள் இரண்டும்கெட்டான் நிலையில் இருக்கிறீர்கள். அதாவது, நீங்கள் பல பொருட்களின் கலவையாக இருக்கிறீர்கள்.

நீங்கள் உங்கள் ஆன்மாவை அடையவில்லை. உங்களுக்கென்று எந்தத் தனித்தன்மையும் இல்லை. நீங்கள் வெறும் அடுத்தவரது குப்பைதான். ஆகவே நீங்கள் எப்போதும் பயத்தில் இருக்கிறீர்கள். ஏனெனில் அடுத்த வரது கருத்துக்கள் மாறினால், நீங்களும் மாறவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் அடுத்தவரின் பிடியில் இருக்கிறீர்கள்.

முதலில் தைரியமாக உங்களை சார்ந்து இருங்கள். அப்போது உங்களைத் தவிர வேறு யாரும் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ மாற்ற இயலாது. பொய்யான பிறர் அபிப்பிராயத்துக்கும், நீங்கள் கனவுலகில் சஞ்சரிப்பதற்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது. ஒருவன் உங்களைப் புகழும்போது, அவன் சக்தி மிக்கவனாகத் தெரிகிறான். அவனுடைய புகழ்ச்சியை நீங்கள் ஏற்றுக் கொண்டால், நீங்கள்தான் அவனுக்கு இரையானவன். இப்போது அவன் உங்களைத் தனது பிடியில் வைத்துக் கொள்ளலாம். அவன் உங்கள் குருவாகவும், நீங்கள் அவன் அடிமையாகவும் இருப்பீர்கள்.

பிறர் ஒவ்வொருவரும்,’இதைச் செய்கிறார்கள்,அதைச் செய்கிறார்கள், இதை சாதிக்கிறார்கள்’, நீ மட்டும் எப்படி நின்றுவிடுவது? போய்க் கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது. இன்னும் அதிக தூரம், அதிக வேகத்தில், இன்னும் அதிக கம்பீரத்தோடு, இன்னும் அதிக எழுச்சியோடு என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் என்பது மட்டும் தெரிய வில்லை. எது சேரும் இடம் என்பது மட்டும் தெரிவதில்லை. எதை சாதிக்க வேண்டும்? பணமா, கௌரவமா? அப்படித்தான் அவை நிறைய வந்தாலும் அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்றிருக் கிறாய்?

பெரிய வீட்டை வாங்கி வாழலாம்.நீதானே வாழப்போவது? வீடல்லவே! சிறிய வீட்டில் நிம்மதி இல்லை என்றால் பெரிய வீட்டில் அதிகமாக நிம்மதியை இழக்கப் போகிறாய். உன்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்றால் பணம், புகழை வைத்து என்ன செய்யப் போகிறாய்? உலகம் முழுக்கத் தெரிந்தவன் ஆகலாம். அதனால் ஆகப் போவ தென்ன? உன்னுடைய உள்ளிருட்டு அப்படியேதான் இருக்கப் போகிறது.

மற்றவர்களை நேசியுங்கள்; மதியுங்கள். மற்றவர்களைவிட மேலானவ ராகவோ, உயர்ந்தவராகவோ ஆக முயலாதீர்கள். மற்றவர்களைத் தாழ்த்தாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!