ஊர்வனங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் 22 வயதாகும் வேதப்பிரியா என்ற பெண் தைரியமாகப் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக அதைக் கொண்டுவிடுகிறார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதந்துவந்த ஏராளமான பாம்புகள் தங்­கள் இருப்­பி­டத்­தில் வசிக்க முடி­யா­மல் வெள்­ளத்­தில் ஆங்­காங்கே மிதந்து எங்கு பதுங்­கு­வது என்று தெரி­யா­மல் பாதிப்­புக்குள்­ளாகி பல குடியிருப்புகளுக்குள்  புகுந்தன. 

வேளச்சேரி, பள்ளிக்கரணை, சிட்லபாக்கம், வளசரவாக்கம், விருகம்பாக் கம் உள்பட 145 இடங்களில்  25 சாரைப்பாம்பு, 8 மண்ணுளிப்பாம்பு, 20 நல்லபாம்பு, 20 தண்ணீர்பாம்பு, 9 கொம்பேறிமூக்கன் உட்பட 82 பாம்புகளைப் பிடிபட்டன. 

அத்­த­கைய வீடற்ற ஏரா­ள­மான பாம்­பு­க­ளுக்கு அடைக்­க­லம் கொடுத்து உத­விய வேதப்­பி­ரியா கணே­சனுக்குப் பாராட்­டு­கள் குவிகின்­றன.

சென்னை கெரு­கம்­பாக்­கத்­தைச் சேர்ந்த வேதப்­பி­ரியா பாம்­பு­க­ளைப் பரா­ம­ரிக்­கும் தொண்­டூ­ழி­யர். இப்­போது அவர், தமிழ்­நாடு தீய­ணைப்பு மீட்­புப் படை­யில் தொண்­டூ­ழி­ய­ரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார். கடந்த மூன்று ஆண்டுகளாக பாம்புகளை லாகவமாகப் பிடித்துக் காப்பாற்றுகிறார்.

சென்­னை­யி­லும் புற­ந­கர்ப் பகுதி­யி­லும் வெள்­ளம் ஏற்­பட்­ட­போது அவருக்கு 50க்கும் மேற்­பட்ட இடங்­களிலிருந்து அழைப்­பு­கள் வந்­த­ன. அவற்­றின் பேரில் செயல்­பட்ட வேதப்­பி­ரியா, வெள்­ளத் ­தையும் பொருட்­ப­டுத்­தா­மல் பல இடங்­களுக்­கும் சென்று தண்­ணீ­ரில் நீந்­திக்கொண்­டி­ருந்த பாம்­பு­க­ளைப் பிடித்து பத்­தி­ரப்­ப­டுத்­தி­னார்.

வேதப்­பி­ரியா பாம்பு பரா­ம­ரிப்­பில் மற்­ற­வர்­க­ளுக்­குப் பயிற்சி அளித்தும் வரு­கி­றார். பொது­
மக்­கள் பாம்­பு­க­ளி­டம் சிக்கி செய்­வ­த­றி­யாது உயி­ரி­ழக்­கக் ­கூ­டிய பல சம்­ப­வங்­க­ளைத் தான்
சந்­தித்து இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித் தார். மேலும் அவர்,

“நான் தற்போது புளுகிராஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்டுப்பணித் துறையில் தன்னார்வலராகவும் இருக் கிறேன். அங்கும் பாம்புகள் பிடிக்கும் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்.

பாம்பைக் கண்டதும் யாரும் பயப்பட வேண்டாம். நீங்கள் அமைதியாக இருந்தால் அதுவும் அமைதியாகச் சென்றுவிடும். ஒரு வீட்டில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்குள் ஒரு சாதாரண பாம்பு இருப்பதாகச் சொல்லி அழைத்தார்கள். நான் அங்கு சென்று பார்த்தபோது அது நல்ல பாம்பு என்று தெரிந்தது. பிடிக்கச் சென்றதும் தன்னைத் துன்புறுத்தக்கூடாது என்பதைபோல் எச்சரிக்கை செய்து படம் எடுத்தது. அதைப் புரிந்து கொண்ட நான் அதைச் சாந்தப்படுத்திப் பிடித்தேன்.

சென்­னை­யில் 30 சிற்­றி­னங்­களைச் சேர்ந்த பாம்­பு­கள் வசிப்­ப­தா­க­வும் அவற்­றில் நான்கு சிற்றினப் பாம்­பு­கள் நச்­சுப் பாம்­பு­கள். பாம்­பு­க­ளைத் தொடா­ம­லேயே அவற்­றைப் பிடித்து ­வி­ட­லாம்.

ஒரு வீட்­டில் பாம்பு புகுந்­து­விட்­டால் எல்லா கத­வு­க­ளை­யும் சன்­னல்­க­ளையும் திறந்­து­விட வேண்­டும். பாம்பு பிடிப்­ப­வர் வரும்­வரை பாம்­புக்­குத் தொல்லை கொடுக்­கக்­கூ­டாது.  அதைத் துன்புறுத்தி அடித்துக் கொல்ல முயற்சிக்கக் கூடாது. அதுவும் கோபம் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எதிர்த்துப் போராடும் அப்போதுதான் கடிக்கும். அதை நாம் புரிந்துகொண்டால் பாம்புகளால் நமக்குப் பிரச்சினையே இல்லை. ஊர்வனப் பிராணிகளான பாம்புகளுக்கும் பசி, கோபம், உணர்ச்சிகள் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்ற வேதப்பிரியா கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 500 பாம்புகளைப் பிடித்து வனத்துறை யிடம் ஒப்படைத்துள்ளார் என்பது பாராட்டுக்குரியது.

பாம்புகளுக்கும் இதயம் (அரூபமாக) உண்டு என்று நேசம் காட்டிய வேதப்பிரியாவை வாழ்த்துவோம். தொடரட்டும் அவரின் பாம்புகளைப் பாதுகாக்கும் பணி.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...