காவல் துறையில் இரண்டு கறுப்பாடுகள்

இன்று (16-11-2021) காலை 9 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு இன்ஸ்பெக்டர்கள் வீடுகளி லும் அதிரடியாகப் புகுந்து சோதனை நடத்தியது ஆச்சர்யமாக இருந்தது. காரணம், காவல் துறையில் குற்றம் நடந்தால் வேறு டிபார்ட்மென்டுக்கு மாற்றுவது சகஜம். ஆனால் இந்த இருவர் பேரிலும் பணியில் உள்ளபோதே தமிழகக் காவல்துறை ஆக் ஷனில் இறங்கியது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காவல் துறையில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் விபசாரத் தடுப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது. சென்னையில் விபசாரத் தொழிலை முற்றிலுமாக ஒழிப்பதற்காகப் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்தப் பிரிவு சார்பில் அடிக்கடி போலீசார் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தி குற்றவாளிகளைப் பிடிப்பது உண்டு. ஆனால் தற்போது விபசார புரோக்கர் களும் காலத்திற்கு ஏற்ப ஆன்லைன் மூலமாகவே இந்தத் தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னையில் விபசாரத் தொழிலில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புரோக்கர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் தங்களுக்குக் கீழ் பல்வேறு குழுக்களை வைத்துக்கொண்டு அவர்கள் மூலமாகச் சத்தமில்லாமல் இதில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுபோன்று செயல்படும் புரோக்கர்களின் மூலமாக விபசாரத் தடுப்புப் பிரிவு போலீசுக்கு அதிகளவில் பணம் லஞ்சமாக கைமாற்றப்படுவது உண்டு. தங்களது தொழிலைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக ஒவ்வொரு மாத மும் குறிப்பிட்ட அளவு லஞ்சப் பணத்தை இன்ஸ்பெக்டர்களுக்கு புரோக்கர் கள் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதன் மூலம் அங்கு பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் தாங்கள் பணிபுரியும் காலத்துக்குள் பெரிய அளவில் வசூலில் ஈடுபட்டு கோடிக்கணக்கான சொத்துக்களைச் சேர்த்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக விபசாரத் தடுப்புப் பிரிவில் பணிபுரிவதற்கு இன்ஸ்பெக்டர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவது வழக்கம்.

அங்கு பணிபுரிவதற்கு அரசியல், உயர் அதிகாரிகள் மற்றும் பெரிய ஆட்களின் பரிந்துரைகளையும் இன்ஸ்பெக்டர்கள் நாடுவது காலங்காலமாகத் தொடர்ந்து வருவது தொடர்கதை.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தியது. இது அங்கு வசித்துவரும் மற்ற அதிகாரிகள் மத்தியிலும் அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் காவல் துறையில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியிலும் இந்தச் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சாம் வின்சென்ட். சைதாப்பேட்டை சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருப்பவர் சரவணன். இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள காவல் ஆய்வாளர் குடியிருப்பிலும், இன்ஸ்பெக்டர் சரவணன் புழுதிவாக்கம் ஜெகலட்சுமி நகரிலும் வசித்து வருகிறார்கள்.

இன்ஸ்பெக்டர்கள் சாம் வின்சென்ட், சரவணன் இருவரும் விபசாரத் தடுப்பு பிரிவில் கடந்த 2018-ம் ஆண்டு பணிபுரிந்தபோது விபசார கும்பலிடம் பணப்பலன்களைப் பெற்றுக்கொண்டு கோடிக்கணக் கில் பயனடைந்ததாக லஞ்ச ஒழிப்புப் போலீசார் குற்றம் சுமத்தி வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.

இந்தக் காலகட்டத்தில் அவர்கள் தவறாக முறைகேடான வழியில் யார், யாரிடம் பணம் பெற்றுள்ளார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர் பாக இருவர் மீதும் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் மீது 13(2), 13(1)(டி) ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே இன்று லஞ்ச ஒழிப்பு போலீ சார் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் அதிரடி சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தியது அங்கு வசித்துவரும் மற்ற அதிகாரிகள் மத்தியிலும், அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இது தொடர்பாக சாம்வின்சென்ட், சரவணன் இருவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு செய் துள்ளனர். காலை 9 மணிக்குத் தொடங்கிய சோதனை பிற்பகல் வரை நீடித்தது. சோதனை முழுமையாக முடிந்ததும் அது தொடர்பான விவரங் களை லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிடுவார்கள்.

சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், இருவரும் விபசார புரோக்கர்களிடம் பலன் அடைந்ததாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார், யாரிடம் பணம் வாங்கினார்கள்? எவ்வளவு தொகை அவர்கள் விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றிய காலத்தில் புரோக்கர்களால் கொடுக்கப்பட்டுள்ளது? என்ற தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசியதில் “சாம்வின்சென்ட், சரவணன் ஆகியோர் 8.1.2018 முதல் 15.5.2018 வரை பாலியல் தொழில் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் விபச்சார புரோக்கர்களிடம் லஞ்சம் பெற்றதாக வந்த புகார்களின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இன்று இருவரின் வீடுகள், அவர்களின் உறவினர்கள் வீடுகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் நாங்கள் சோதனை நடத்திவருகிறோம். சோதனைக்குப் பிறகுதான் இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டிருக் கிறோம். இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக ஆடியோ ஒன்று கிடைத்திருக் கிறது” என்றார்.

இன்ஸ்பெக்டர்கள் சாம்வின்சென்ட், சரவணன் ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பாலியல் தொழில் தடுப்பு பிரிவில் பணிபுரிந்தனர். அப்போது நடந்தவை, மூன்றாண்டுகளுக்குப் பிறகு தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இந்த விசாரணையில் தற்போது OYO என்கிற தங்கும் விடுதி தமிழ்நாடெங்கும் செயல்பட்டு வருகிறது. அதில் ஆன்லைனில் ஆண் பெண் யார் யாருடன் வேண்டுமானாலும் இடத்தைத் தேர்வு செய்து தங்கலாம் என்கிற முறையை ஒழிக்கவேண்டும். இதை மட்டும் காவல் துறை கண்டுகொள்வதே இல்லை என்கிற கருத்து மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...