ஜெய்பீம் – மேலும் தொடரும் சர்ச்சை
சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் படம் கடந்த ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களிலேயே சிறந்த படங்களின் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டிய படம் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. அது குறித்து பாராட்டுகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருந்தாலும் இந்தப் படம் உண்மைக் கதையை வைத்து எடுத்த விதம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
ஜெய்பீம் உண்மைக்கதை என்பதால் அதில் வக்கீலாக நடித்த சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் இந்த வழக்கை எடுத்து நடத்திய வழக்கறிஞராக இருந்த இன்று ஓய்வு பெற்ற நீதிபதியாக இருக்கும் சந்துருவின் பெயரே வைக்கப்பட்டது.
கதாநாயகன் ராஜாக்கண்ணு பெயரும் அதே பெயர் வைக்கப்பட்டது. விசாரணை அதிகாரி ஐ.ஜி. பெருமாள்சாமி பெயரும் உண்மைப் பெயர். மற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் புனை பெயர்காளக இருளர் சமூதாயத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களே வைக்கப்பட்டன.
இந்த வழக்கை நடத்தவேண்டும் என்பதற்காக கல்யாணத்தையே தள்ளிப் போட்டு வழக்கை நடத்தியவர் கோவிந்தசாமி அவர்தான் உண்மைக் கதாநாயகன். அவர் இந்தக் கதையில் ஊறுகாயைப்போல பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்கிற கருத்தும் உள்ளது.
பாதிக்கப்பட்ட கதாநாயகியின் உண்மைப் பெயர் பார்வதி, படத்தில் செங் கேணி. போலீஸ் எஸ்.பி.யாக இருந்தவர் உண்மை பெயர் அந்தோணிசாமி, கதையில் குருமூர்த்தி. படத்தில் அவர் கொடுமைக்காரராகச் சித்திரிக்கப்பட்டிருந்தார். அவர் வீட்டில் இருக்கும்போது அவர் வீட்டில் மாற்றப்பட்டிருந்த காலண்டரில் வன்னியர்கள் அடையாளமான தீச்சட்டியும் வன்னிய சங்கப் பெயரும் இடம்பெற்றது. இது ஒரு நொடிதான் இடம் பெற்றாலும் அது அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனால் கடுமையான கண்டனக் குரல்களும் எழுந்தன.
அதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் படத்தில் அந்தக் காட்சியில் உள்ள வன்னியர் அடையாள காலண்டரின் படத்தை லட்சுமி சுவாமியின் படத்தை இடம் பெறச் செய்தார். அதன் பிறகு அந்தோணிசாமி பெயர் குருமூர்த்தியாக மாற்றப்பட்டது. ஒரு கிறிஸ்துவர் இந்துவாக மாற்றப் பட்டார். கொடுமைக்கார போலிஸ் இல்லத்தில் இந்துக் கடவுளின் படம் வைக்கலாமா எனக் கண்டனக் குரல் இந்து அமைப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.
அது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்ட பெண் பார்வதி இருளர் சமுதாயமே இல்லை. அவர் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர்கள் பாம்பு எலிகளைப் பிடிப்பதில்லை. கூடை முடைபவர்கள். ஆனால் தயாரிப்பாளர் சூர்யா இருளர் சமுதாய முன்னேற்றத்துக்காக முதல்வர் ஸ்டாலினிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்துவிட்டார். அது அந்தப் பாதிக் கப்பட்ட குறவர் சமுதாய மக்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் இன்னும் சென்னையில் மிகவும் வறிய நிலையிலேயே உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம்… பணத்தை வழங்கியது ஒரு பக்கம் என குரல்கள் எழுகின்றன.
தயாரிப்பாளர் சூர்யா வழங்கிய காசோலையிலும் கிறிஸ்றின் மிஷன் பெயர் இடம்பெற்றுள்ளது. அந்த டிரஸ்டின் பெயர் யார் வழங்கியது. அந்த டிரஸ்டின் பெயர் வலைதளத்தில் தேடினாலும் கிடைக்கவில்லை என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது வலைதளத்தில் வைரலானது.
இதற்கிடையே பா.ம.க. இளைஞர் அணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஜெய்பீம் படத்தில் வன்னிய சங்க அடையாள காலண்டர் இடம்பெற்றதற்கும் அந்தோணிசாமி பெயர் குருமூர்த்தி என மாற்றப்பட்டதற்கும் கட்டண அறிக்கை விடுத்தார். அதற்கு உடனே நடிகர், தயாரிப்பாளர் சூர்யா மறுப்பு அறிக்கை விட்டதும் நடந்திருக்கிறது.
ஒரு வெற்றி பெற்ற படம் சரியான கவனமின்மை காரணமாக எவ்வளவு சர்ச்சைகளுக்கு ஆளாகியிருக்கிறது? புகழ்பெற்ற நீதிபதி சந்துரு கதையின் ஆலோசனையில் இருந்துள்ளார். சமூக ஆர்வாலர் பேராசிரியர் கல்யாணி இருந்துள்ளார். இருந்தும் கதையில் பல விதங்களில் சர்ச்சைக்கு இடம் வைத்துவிட்டாரே இயக்குநர் த.செ.ஞானவேல் என்று சொல்கிறார்கள் பொது பார்வையினர்.
ஜெய்பீம் படம், இருளர் சமுதாய வெளிச்சம் மற்றும் சொன்ன விதங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சில சம்பவங்கள் கவனக்குறைவாக இடம் பெற்றுள்ளது என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுப்பிரிவினர். சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய தயாரிப்பாளர், நடிகர் சூர்யாவும், இயக்குநர் த.செ.ஞானவேலும் தக்க பதில் வழங்காமல் மௌனம் காப்பது பேல கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்னும் என்ன நடக்குமோ பொறுத்திருந்து பார்போம். அதற்கு பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு உதவி கிடைத்தால் நல்லது.