புனித நடிகர் புனித் ராஜ்குமார்
நாட்டில் பேரும் புகழும் பெற்ற எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் மக்கள் மத்தியில் நிரந்தரமாக வாழ்பவர்கள் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மாதிரி ஒரு சிலர்தான். அந்த மாதிரி ஒரு நடிகர் (29-10-2021) மறைந்தது மனவேதனை அடைகிறது.
45 இலவச பள்ளிக்கூடங்கள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 கோ சாலைகள், 1800 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கியவர் இன்று நம்மிடையே இல்லை. இவ்வளவு தொண்டுகளை வெளியே தெரியாமல் செய்தவர், பெரிய தொழில் அதிபரோ, கார்பரேட் சமூகச் செயற்பாட்டாளரோ அல்ல… அவர் ஒரு நடிகர். ஆம் கர்நாடக மாநில சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார்தான் அவர்.
மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மூன்றாவது மகன்தான் புனித் ராஜ்குமார். வயது 46. சென்னையில் பிறந்து வளர்ந்த புனித் ஆறாவது வயதில் மைசூருக்குத் தந்தையுடன் குடியேறினார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்த புனித்துக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாகியது. சில ஆண்டுகளில் தனது நடிப்பால் கன்னடத் திரை உலகின் சிகரத்தைத் தொட்டார். தந்தை ராஜ்குமாரைப் போலவே சூப்பர் ஸ்டார் ஆனார்.
கன்னட திரைவுலகில் கோடிகளில் சம்பளம் வாங்கிய ஒரே நடிகர் புனித்தான். கோடி கோடியாகப் பணம் சேர்ந்தது. அதை அவர் தனது சொத் தாக ஆக்கிக்கொள்ளாமல் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை மக்களுக்குச் சேவை செய்வதற்கே செலவிட்டார். மக்களின் தேவை அறிந்து உதவிகள் செய்யத் தொடங்கினார். அவரது எளிமை, இரக்க குணம், பிறருக்கு உதவும் குணங்கள் அவரைத் தனியாக அடையாம் காட்டியது.
விக்ரமின் படப்பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு வந்திருந்தார். அதே மேடையில் இருந்த புனித்தின் எளிமையை யும் அவர் செய்துவந்த சேவைகளையும் கேள்விப்பட்டு அர்னால்டு வெகு வாகப் பாராட்டினார். அதை நன்றியுடன் ஏற்றுக்கொண்ட புனித் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
மிகக் குறுகிய காலத்தில் ஏராளமான விருகளையும் பாராட்டுகளையும் பெற்றார். 2007ல் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, 2008ல் சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநில விருது, 2010ல் சிறந்த நடிகருக்கான விருது, 2012ல் சீமா அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருது, 2013ல் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார் புனித் ராஜ்குமார்.
ஒரு நடிகர் இப்படி எல்லாம் இருப்பாரா? இப்படி எல்லாம் வாழ முடியுமா? என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் வாழ்ந்து கட்டினார்.
புனித் தினமும் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது வழக்கம். அவர் சென்ற அதே ஜிம்மில் உடற்பயிற்சி பெற்றவர் கல்லூரி மாணவி அஸ்வினி, புனித் ராஜ்குமாரைப் பார்த்து வியந்து காதலில் விழுந்தார். இரண்டு ஆண்டுகள் காதலித்து அஸ்வினியின் படிப்பு முடிந்ததும் அவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திரிதி, வந்திதா என்கிற இருமகள்கள் உண்டு.
தொண்டுள்ளம் கொண்ட புனித் ராஜ்குமார் மிகப் பெரிய நடிகராக இருந்தும் பந்தா இல்லாதவர். எளிமையை விரும்புபவர். தனது ரசிகர்கள் வீடு களுக்கு நேரடியாகச் சென்று உற்சாகப்படுத்தி அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிடுவார்.
அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது இந்தியத் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. குறிப்பாக, ஒட்டுமொத்த கர்நாடகமும் சோகத்தில் மூழ்கி இருக்கிறது. அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு காண்ட்ரவா மைதானத்தில் மக்கள் கூட்டம் அலையென திரண்டு வந்தது. லட்சக்கணக்கான ரசிகர்கள் விடிய விடிய வரிசையில் நின்று கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தியது. இது அவர் படத்தில்தான் நடித்தார் வாழ்க்கை யில் நல்ல மனிதராக வாழ்ந்தார் என்பதைக் காட்டுகிறது.
இளம் பயதிலேயே பலர் மாரடைப்பு பலியாவதைத் தடுப்பதற்காகவே தனியாக ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். இளம் வயது மாரடைப்பு திட்டத்தின் தூதுவராகவும் இருந்தார் புனித். அப்படிப்பட்டவரையும் மாரடைப்பு வீழ்த்திவிட்டது. சில நாட்களாகவே உடல்நிலையில் திருப்தியில்லாமல் இருந்திருக்கிறார். ஆனால் அவர் வேலையின் நெருக்கடியிலும் மன அழுத்தத் திலும் இருந்ததால் அவரால் வந்திருப்பது இதயக்கோளாறுதான் என்று யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. சம்பவம் நடந்த அன்று உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்றுவிட்டு வந்தவருக்கு பகல் 11 மணிக்கு இதய வலியின் காரணமாக மருத்துவமனைக்குச் சென்றவர். சில மணி நேரங்களில் இறந்த செய்துதான் வந்தது.
நடிகர் புனித் ராஜ்குமார் உயிரோடு இருக்கும் வரை பிறருக்குத் தானம் செய்வதையே பிரதானமாக வைத்திருந்தார். இறந்த பிறகும் தனது இரு கண்களையும் தானம் செய்திருந்தார். அதன்படி அவரது இரு கண்களையும் டாக்டர்கள் வந்து எடுத்துச் சென்றார்கள். அதைப் பார்த்து ரசிகர்கள் கதறி அழுதது கர்நாடகா முழுவதும் கேட்டது என்றார் ஒரு ரசிகர்.
“கன்னட பவர் ஸ்டார் என் நண்பன் ராஜ்குமார் சினிமா லெகசி. இப்போது அவர் மகன் இல்லை என்பதைக் கேட்க மனம் நொறுங்கும் செய்தி. இயற்கைக்கு அன்பு இல்லை. அத்தகைய இளமையான இதயம் புனீத் ராஜ்குமார். இவர் குடும்பத்திற்கும் தென்னிந்திய திரையுலகிற்கும் இது தாங்கமுடியாத இழப்பு” என்று வருத்தம் தெரிவித்தார் இயக்குநர் பாரதிராஜா.
புனித் ராஜ்குமாரின் அகால மரணம் இரு மாநில ஒற்றுமைக்கு ஒரு பேரிழப்பு எனலாம். மிகச் சிறந்த மனிதராகச் செயல்பட்டது ஒரு சாட்சி. சில வருடங்களுக்கு முன் காவிரி ஆணையத்தை எதிர்த்து நடந்த வன்முறை களில் தனித்து நின்று தமிழகத்திற்கு நியாயமாக என்ன கிடைக்க வேண் டுமோ (காவிரி நீர்ப்பங்கீட்டில்) நியாயமாக நாம் கொடுக்க வேண்டும் என அனைத்து நடிகர்கள் பங்கெடுத்துக்கொண்ட மேடையில் பெங்களூருவில் தைரியமாக, நேர்மையாகப் பேசிய புனிதர் புனித் ராஜ்குமார். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.