ரஜினியின் நடிப்பும் வாழ்நாள் சாதனையாளர் விருதும்

35 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இடைவெளியில்லாமல் நடித்ததோடு அல்லாமல் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நிரந்தரமாக்கி முன்னணி கதாநாயகனாக இன்றுவரை வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.

தீபாவளி ரிலீசுக்காக அண்ணாத்த படம் ரெடியாக இருக்கிறது. அதற்காக தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தியேட்டர்களும் காத்திருக்கின்றன, வேறு படங்களுக்கு கதவுகள் திறக்கப்படாமல். அந்தளவுக்கு ரசிகர்களை 35 ஆண்டுகளாகக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் ரஜினி.

நேற்று (25-10-2021) ரஜினியின் சினிமா சாதனையைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதாக தாதா சாகேப் பால்கே விருதை ஒன்றிய அரசு அறிவித்து வழங்கியிருக்கிறது.

ரஜினியின் சினிமா வரலாற்றில் மெதவாக வேகமெடுத்து மேலே மேலே போய்க்கொண்டே இருக்கிறார்.

1975ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் அவர் பெயர் போடும்போது அபஸ்வரம் என்று தெரிய வரும். தாடி வைத்துக்கொண்டு ஒரு நோயாளியாக பெரிய கேட்டைத் திறந்து ஒரு வீட்டுக்குள் வரும்போது யாருக்கும் தெரியாது இவர் தமிழ் சினிமா வையே ஆளப்போகிறார் என்று.

அடுத்தடுத்து அவர் நடித்த படங்களில் அவரது நடிப்பும் உடல் மொழியும் தனித்துத் தெரிந்ததை ரசிகர்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

ரஜினி வில்லனாக இருந்து கதாநாயகனாக ஆனதில் முன்னோடி. அந்தக் காலத்தில் வில்லன்கள் பெயர் பெறுவது கடினம். ஆனால் ரஜினியின் வில்லன் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்தது. 1976ல் வெளியான மூன்று முடிச்சுகள் படத்தில் ரஜினி வில்லனாகவும் கமல்ஹாசன் கதாநாயகனாகவும் நடித்தனர். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ரஜினிக்குத்தான் படத்தில் முக்கிய ரோல். இருந்தால் பார்வையாளர்களை ரசிக்க வைத்தார். படம் சூப்பர் ஹிட்.

அதேபோல் கமல் ரஜினி நடித்த அவர்கள் படத்தில் முழு வில்லனாக வந்து ஸ்டைல் மட்டுமல்லாமல் நடிப்பில் தனி முத்திரை பதித்தார். அவர் வரும் காட்சிகளில் தியேட்டரில் கைத்தட்டல் எழுந்தது.    

பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினியே படத்தில்தான் ரஜினியின் முத்திரை பதித்த காட்சிகள் வெளியாகின. பரட்டை பரட்டை என்கிற வசனமும். மயிலு அம்மாவுக்கு தாவணி போட்டா எப்படி இருக்கும் என்கிற வசனமும் அன்றைய இளைஞர்காளால் பேசப்பட்ட வசனங்கள். 16 வயதி னிலே படத்தில் ரஜினி கொஞ்சக் காட்சிகளிலே வச்தாலும் பெரிய அளவில் பேசப்பட்டது.

ரஜினி பைரவி என்கிற படத்தில் எஜமான விசுவாசத்தோடு நடித் திருப்பார். அந்தப் படத்தில்தான் எஸ்.தாணு விநியோகஸ்தராக இருந்தார். அவர்தான் விளம்பரத்தில் முதன் முதலாக சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்து விளம்பரம் செய்தார்.

1978ல் மட்டும் 25 படங்களில் நடித்து முடித்திருந்தார் ரஜினி. நடிக்க வந்த ஏழு வருடங்களில் 75 படங்களில் நடித்து முடித்திருந்தார். அதனால் அவர் மனநிலையில் மிகவும் சோர்ந்திருந்தார்.

ரஜினிக்கு டைல்தான் வரும் நடிக்க வராது என்பவர்களுக்கு ரஜினி நடித்த முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, சதுரங்கம், ஆறு புஷ்பங்கள், முரட்டுக் காளை, ஜானி, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களைப் பார்க்கச் சொல்ல வேண்டும். நடிப்பில் முத்திரை பதித்த படங்கள் அவை. அவரும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கத் தயாராகத்தான் இருந்தார். ஆனால் அவரது டைல் ஆளுமை அவரை விடவில்லை.

ரஜினியின் தமிழ்ப் படங்களின் ஆளுமை இந்திப் படங்கள் வரை பாய்ந் தன. இந்தியில் 28 படங்களில் ஹீரோவாக நடித்தார். இந்தியில் முதல் படமான அந்தா கானூன் பெரிய ஹிட் அடித்த படம். இந்தியில் இதுவரைக் கும் ஹீரோக்கள் மூன்று வேடங்களில் நடித்த படங்கள் ஹிட் ஆனதில்லை. ஆனால் ரஜினி நடத்த ஜான் ஜானி ஜனார்த்தன் படம் 20 தியேட்டர்களில் 50 வாரங்களைக் கடந்து ஓடியது. இதேபோல் மூன்று ஹீரோக்களின் ஒருவராக ரஜினி நடித்திருந்த கிராப்தார் படத்தில் சிகரெட்டை தூக்கிப் போட்டு துப்பாக்கியால் சுட்டு பற்ற வைக்கும் காட்சியில் ரசிகர்கள் கைத்தட்டல் விசில் பறந்தது. தமிழில் தர்மதுரை, மலையூர் மம்பட்டியான் படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ரஜினி ஹீரோவாக நடித்தார். இரண் டுமே பெரிய வெற்றி பெற்றது.

1995ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா படம் 15 மாதங்கள் திரையரங்குகளில் ஓடியது. ரஜினி நடித்த படங்களில் டாப் ஒன்னில் வைக்க வேண்டிய படம் எனச் சொல்லலாம். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அந்தப் படத்தை இயக்கியிருந்தார். ரஜினி மாஸ் சீன் படம் முழுக்க வரும். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் என டைட்டில் கார்டு போட்டதுமே தியேட்டரே அதிர்ந்தது.

1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா  படம் நடிகர் திலகம் சிவாஜி யோடு சேர்ந்து நடித்த கடைசிப் படம். ரஜினிக்குத் தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தது. இந்தப் படம். எல்லா தியேட்டர்களிலும் 100 நாட்கள் ஓடி 440 மில்லியன் டாலரை சம்பாதித்தது ஒரு சாதனை.

தமிழில் வந்து ஹிட்டான சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெத்தராயடு படத்தில் ரஜினி மூத்த நாட்டாமையாக நடித்தார். இதே படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டபோது அதே வேடத்தில் நடித்தார் ரஜினி.

அவர் நடித்த முத்து படம் உலக நாடுகளில் உலக அளவில் ரஜினிக்கு ரசிகர்களைக் கொண்டுவந்து சேர்த்தது. இதனால் அங்கு ஜப்பான மொழியில் முத்து படம் டப் செய்யப்பட்டது. ஜப்பானில் ரஜினி ரசிகர் மன்றம் தொடங்கினார்கள். அவர்கள் மொழியில் டான்சிங் ராஜா என்று அழைத்தார்.

சிவாஜி படம் வெளியானபோது எல்லா சேனல்களும் அதற்கு விளம்பரம் தரும் விதமான விமர்சனம் செய்தது. அதனாலேயே அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...