வெற்றிமாறன் தலைமையில் கிராமப்புற மாணவர்களுக்கு சினிமா பயிற்சி

தமிழ் சினிமாவை கிராமப்புற மாணவர்களும் கற்று நல்ல தரமான சினிமாவை எடுக்கவும் எழுத, இயக்க, நடிக்க வரவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது (International Institute of Film and Culture – IIFC) சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம்.

இந்த அமைப்பின் தலைவர் இயக்குநர் வெற்றி மாறன், வழிகாட்டியாக ராஜநாயகம், செயலாளராக வெற்றி துரைசாமி ஆகியோரின் முன்னெடுப்பில் கடந்த ஏப்ரல் 2021ல் தமிழ்ப் புத்தாண்டு அன்று தொடங்கப்பட்டது.

இது சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வகுப்புகள் நடத்தவிருக்கிறது.

சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து 5 சுற்று சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக, சுற்று 2 (எழுத்து தேர்வு) தமிழகம் முழுவதும் 5 இடங்களில் நடத்தப்படுகிறது .


IIFC  அதன் முதுகலை பட்டயப்படிப்பில் முதல் பேட்ஜ் 40 மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி காலம் ஒரு வருடம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி, தங்குமிடம் மற்றும் உணவுக்காக 100% மானியங்களைப் பெறுவார்கள்.
 
எனவே, மொத்தம் 1450 மாணவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்கிறார்கள் . தேர்வின் காலம் 3 மணி நேரம் (காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை).

பதிவு செய்யவேண்டிய இணையதளம் : https://www.iifcinstitute.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!