அஷ்ட நாகன் – 5| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்-
நவக்கிரகங்களில் சனீஸ்வரன் தனிகரற்றவர். சனீஸ்வரனை ‘நீதிமான்’ என்று சாஸ்திரம் கூறுகிறது. ஏனெனில், அவருக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. ஒருவரின் கர்ம வினைக்கேற்ப நற்பலன்களையும் சங்கடத்தையும் ஏற்படுத்துபவர். ‘சனியனே’ என்ற வார்த்தையை நாம் தப்பித் தவறியும் பயன்படுத்தி விடக்கூடாது. ஈஸ்வர பட்டம் பெற்ற அவரை ‘சனீஸ்வரன்’ என்று சொல்லி வணங்குவது உத்தமம்.
ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகக் சனி, மரண சனி, மங்குசனி மற்றும் பொங்கு சனி என்று நாம், நம் வாழும் காலத்தில் சனீஸ்வரன் பிடிக்குள் தான் வாழ்கின்றோம். நாகங்களில் கரு நாகங்களை ‘கார்க்கோடகன்’ என்ற நாகத்தின் வம்சாவழியில் வந்தவர்கள் என்று நம்ப படுகிறது. ஒருவர் கருமையான நாகத்தை அடிக்கடி பார்க்க நேர்ந்தால், குறிப்பிட்ட அந்த நபருக்கு சனி திசையோ அல்லது ஏழரைச் சனியோ, கண்டகச் சனி போன்றவை நடப்பதாக அர்த்தம். ஒரு நபரை நாகம் தீண்டுவது போல் கனவு வந்தால், குறிப்பாக நாகம் தீண்டிய இடத்திலிருந்து குருதி வருவதைப் போல கனவு கண்டால் ‘அந்த நபரை பிடித்த சனீஸ்வரன் அவரை விட்டு விலகுவதாக அர்த்தம்.’
– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-
மறுநாள். காலை வேளை!
அரவிந்தனும் நந்தனும் தங்கள் புத்தகக் கடையில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு மௌனம் மட்டுமே பேசியது. பாம்புக்காரன் என்னும் அந்த இருளன் கொடுத்த கருடக் கிழங்கை இருவரும் தங்கள் கைவசம் வைத்திருந்தனர். அவர்களின் மௌனத்தை கலைக்கும் வகையில் ஒரு பெண்குரல் ஒலித்தது.
“ஹலோ! சார்.”
அவர்கள் இருவரும் நிமிர்ந்து பார்த்தனர். அவர்களுக்கு எதிரில் பாலிவுட் தேவதை மாதிரி ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளின் தோற்றம் நடிகை ‘ராதிகா ஆப்தே’வை நினைவூட்டியது. இருவருக்குள்ளும் சற்று தடுமாற்றம். நந்தன் தன் மௌன விரதத்தை கலைத்து விட்டு பேச ஆரம்பித்தான்.
“வாங்க மேடம். உங்களுக்கு என்ன வேணும்?”
“நாக புராணம் கிடைக்குமா?”
நாக புராணம் என்ற வார்த்தைகளைக் கேட்டதும் நந்தனுக்கும் அரவிந்துக்கும் திகிலில் உண்டானது.
“என்னது நாக புராணமா?” என்று ஒருவித அதிர்ச்சியோடு நந்தன் கேட்டான்.
“ஆமாங்க. என் பேரு யோகினி. நான் ஒரு எழுத்தாளர் ‘மின் கைத்தடி’ அப்படிங்கிற பிரபலமான மின்னிதழுக்காக ‘இச்சாதாரி நாகங்களை’ மையமாக வச்சி ஒரு தொடர் கதை எழுத இருக்கேன். அந்த தொடருக்காக நாகங்கள் குறித்து எனக்கு சில அரிய தகவல்கள் தேவைப்படுகிறது.”
“நீங்க சொல்றது புரியுதுங்க. எனக்குத் தெரிஞ்சு ‘நாக புராணம்’ அப்படின்னு ஒரு புத்தகம் இல்லை. போன மாசம் தான் யாரோ ஒரு புதிய எழுத்தாளர் ‘நாக புராணம்’ அப்படின்னு ஒரு புக்கை எழுதியதாக கேள்விப்பட்டேன்” என்று அரவிந்தன் கூறினான்.
“ரொம்ப நன்றிங்க. எந்த பதிப்பகம்ன்னு தெரியுமா?”
“அருணா பப்ளிகேஷன்ஸ்.”
யோகினி இருவரிடமும் நன்றி கூறிவிட்டு கடையை விட்டு வெளியேற காலெடுத்தாள். அதற்குள் ஒரு நான்கு பேர் கேமராவும் மைக்குமாக மூவரையும் சூழ்ந்துகொண்டனர்.
“வணக்கம் சார். நீங்க தானே அரவிந்த் மற்றும் நந்தன்? நாங்க, ‘நம்ம திருச்சி’ அப்படிங்ற யூ-டியூப் சேனல்ல இருந்து வரோம். நேத்திக்கு உங்க கழுத்துல ஒரு பாம்பு சுத்திக்கிட்டு இருந்துச்சுல, அந்த நிகழ்வை நாங்க ஃபேஸ்புக் லைவ்ல பார்த்தோம். எங்களுக்கு ஒரு பேட்டி கிடைக்குமா?” என்று அந்த நால்வர்களில் ஒருவன் கேட்டான்.
நந்தனுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. தன் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டான்.
இடையில் நால்வரிகளில் ஒருவரான கேமராமேன் வேப்ப மரத்திற்கு அடியில் பாம்பு புற்றை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான்.
அடுத்து ஒருவன், “சார்! இந்த புரோகிராமுக்கு ‘வேப்ப மரத்து பாம்பு சாமியார்’ன்னு பேர் வச்சா நல்லா இருக்கும்” என்று கிண்டல் அடித்தான்.
அவர்களின் பேச்சு யோகினிக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
“சார் இவங்க யாரு? நாக கன்னியா?” என்று மைக் வைத்திருந்தவன் கேலியாக கேட்டான்.
அவன் பேச்சை கேட்ட யோகினி சிரித்துவிட்டாள்.
அரவிந்த் ஆவேசமானான்.
“ஏய் மிஸ்டர்… உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?” என்று அரவிந்த் கோபத்தில் சீறினான்.
“அரவிந்தர் சார்! ஏன் பாம்பு மாதிரி சீறுறிங்க? கூல் டவுன்… கூல் டவுன்…” என்றான் கேமரா மேன்.
“நீங்க நாலு பேரும் கிளம்புறீங்களா? இல்ல போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணட்டா” என்றான் நந்தன்.
“சார் நீங்க கோபமா இருக்கீங்க. நாளைக்கு நான் மட்டுமில்ல, பல டிவி சேனல்ல இருந்தும் வருவாங்க. ஆனா, நீங்க எங்களுக்கு தான் முதல்ல பேட்டி தரனும்” என்று சொல்லிவிட்டு அவர்கள் விலக ஆரம்பித்தனர்.
யோகினிக்கு எல்லாம் வியப்பாக இருந்தது.
“ஹலோ!!! நந்தன் இங்கு என்ன நடக்குதுன்னு எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா?”
நந்தன் பேச வார்த்தைகளின்றி மௌனம் காத்தான். ஆனால், அரவிந்தன் அவன் கண்ட கனவு முதல் நந்தன் கழுத்தில் கருநாகம் படமெடுத்து ஆடியது வரை அனைத்தையும் கூறினான்.
யோகினி வாயடைத்துப் போனாள். அவள் பேசத் தொடங்கினாள்.
“அரவிந்த், நீங்க சொல்வதைக் கேட்கும்போது, என் கதைக்கு தேவையான விஷயங்களை உங்க மூலமாக கிடைக்கும்ன்னு நம்புறேன். உங்களால உதவ முடியுமா?”
“நாங்களே பிரச்சினையில இருக்கோம். உங்களுக்கு எப்படி உதவ முடியும்?”
“நான் உங்களுக்கு உதவி செய்றேன்.”
“எப்படி… எப்படி?” என்று பரபரத்தான் அரவிந்த்.
“கொல்லிமலையில ‘ஏலக்காய் சித்தர்’ன்னு ஒருத்தர் இருக்காராம். அவருக்கிட்ட ‘நாக சாத்திரம்’ன்னு ஒரு பழமையான ஓலைச் சுவடிக்கட்டி இருக்காம். அதுலதான் பாம்புகள் பற்றிய பல ரகசியங்கள் இருக்காம். அதுமட்டுமில்லாமல், பாம்புகள் நம் கனவில் வந்தால் அதற்கான பலன் மற்றும் பரிகாரம் என்னன்னு அதுல தெளிவாக இருக்குமாம். ஒருவேளை உங்க கனவுக்காண பரிகாரம் அதுல இருக்கலாமில்லையா?”
“நீங்க சொல்றது உண்மைதான்” என்றான் அரவிந்தன்.
அதுவரை பேசாத நந்தன் பேச தொடங்கினான்.
“அரவிந்தா! எனக்கு ஒரு யோசனை தோணுது. தாத்தாவோட ஆசைப்படி நாம் அவரோட அஸ்தியை ஆகாய கங்கையில கரைச்சிடுவோம். இந்த டிவி காரர்களுக்கும் யூ-டியூப் காரங்களும் நாம சும்மா விட மாட்டாங்க. அதனால நாம நாளைக்கு கொல்லிமலை கிளம்புவோம். அங்க கொஞ்ச நாள் இருந்துட்டு வருவோம்” என்று தீர்க்கமாக கூறினான்.
அரவிந்தனும் ‘பூம்- பூம்’ மாடு கணக்காக தலை அசைத்தான்.
யோகினி இடையிட்டு பேசினாள்.
“நந்தன் நானும் உங்க கூடவே வரேன். என் கதைக்கு தேவையான சுவாரசியமான விஷயங்கள் கிடைக்கும் ப்ளீஸ்… ப்ளீஸ்” என்றாள்.
நந்தன் சரி என்றான்.
அடுத்து கொல்லிமலையில் நடக்கவுள்ள அமானுஷ்ய அதிசயமென்ன? காத்திருங்கள்.
13 Comments
waiting for kollimalai trip sir
I am also waiting mam.Thank you.
அருமை தோழமையே 💐
கதை விறுவிறுப்பாக அடைந்து கொண்டே செல்கிறது. சுவாரஸ்யம் கூடுகிறது ஒவ்வொரு தொடருக்கும் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே வருகிறது..
கதையின் ஊடே உங்கள் சொந்த பயணத்தை எழுதி உள்ளீர்கள் என்று நினைக்கிறேன் தோழமையே 💐
அடுத்து கொல்லிமலைக்கு எப்போது செல்வார்கள்.. என்ற ஆவலை உண்டு பண்ணுகிறது!!!
Interesting one sir
Welcome forever.
திடீர் திடீர் திருப்பங்களும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடருங்கள்நண்பரே.
நண்பர் திரு.நடராஜன் அவர்களின் தொடர் வாசிப்பு மற்றும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
Very interesting. Third character joins in 5th week. Waiting to see Many more to come..
Congratulations thozhar Pratap
Thank you very much my dear brother.All credits goes to siddhas and nagas.happy to see your feedback.
யோகினி நந்தன் அரவிந்த் மூன்று பேரும் கொல்லி மலைக்கு சென்று ஆகாய கங்கையில தாத்தாவின் அஸ்தியை கரைப்பார்களா. கொல்லிமலையில் நடக்க இருப்பது என்ன ஆவலாக காத்திருக்கிறேன் நண்பரே
மிக்க நன்றி இனிய நண்பரே… தங்கள் விமர்சனம் கண்டு மனம் மகிழ்கிறேன்.
Interesting..
Thank you sister.writer.