மகாபலியை ஆட் கொண்ட மகாவிஷ்ணு
மகாபலிச் சக்ரவர்த்தியை ஆட் கொண்ட மகாவிஷ்ணு அவனுக்கு விஸ்வரூப தரிசனம் தந்தார். இதைத் தரிசிக்க விரும்பிய மிருகண்டுமுனி பூலோகம் வந்து தென்பெண்ணை ஆற்றங்கரையில் தவமிருந்தார். முனிவரின் மனைவி மித்ராதேவி உடனிருந்து அன்னதானம் செய்து வந்தாள்.
முனிவரை சோதிக்க விரும்பிய மகாவிஷ்ணு, வயோதிகர் உருவில் வந்து மிருகண்டுவிடம் உணவு கேட்டார். முனிவரும் தன் மனைவியை அழைத்து முதியவருக்கு உணவிட கூறினார். ஒரு நெல்மணி கூட இல்லாத அப்போதைய நிலையை எண்ணிக் கலங்கிய மித்ராவதி மகாவிஷ்ணுவை தியானித்து,
“நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மை எனில் இப் பாத்திரம் நிரம்பட்டும்” என்றாள்.வயோதிகராக வந்த மகாவிஷ்ணு விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து உலகளந்த பெருமாள் ஆகக் காட்சி அளித்து, அந்தப் பாத்திரத்தை நிரப்பினார். இத்தலமே தற்போது திருக்கோவிலூர் எனப் போற்றப் படுகிறது. பெரும்பாலும் மகாவிஷ்ணு
வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் ஏந்தி இருப்பார். ஆனால் இத்தலத்தில் முனி தம்பதியரின் உபசரிப்பால் தன்னை மறந்து வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் தாங்கி நிற்கிறார். உற்சவர் கோபாலன் தாயார் பூங்கோவல் நாச்சியார் இத்தல கோபுரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுராமாக திகழ்கிறது. திருக்கோவிலூர் என்னும் இத்தலம் விழுப்புரத்திலிருந்து 40கிமீல் உள்ளது.