சிவகார்த்திகேயன் தயாரிப்பில்.. ‘அருவி’ இயக்குநரின் ‘வாழ்’ படம் .. ஓடிடி ரிலீஸ்

 சிவகார்த்திகேயன் தயாரிப்பில்.. ‘அருவி’ இயக்குநரின் ‘வாழ்’ படம் .. ஓடிடி ரிலீஸ்

‘அருவி’ இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ள சமீபத்திய திரைப்படம் வாழ்.

டி.ஜே.பானு, அஹ்ரவ், திவா தவான் மற்றும் நித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே முடிந்தது. இந்த படம் சென்சார் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்த படத்தின் ஒளிப்பதிவை ஷெல்லி காலிஸ்ட் மேற்கொள்ள, எடிட்டிங் பணியை ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா கைகொண்டுள்ளார். ஒரு மியூசிக்கல் டிராவல் டிராமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப் குமார் இசையமைத்துள்ளதுடன், இந்த படத்திற்காக அவர், 10 பாடல்களை பாடியதாகவும் கூறப்படுகிறது.

அருணின் மதுரம் பிக்சர்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கலை அரசு இணைத் தயாரிப்பு செய்துள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் ஆடியோ நாளை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இப்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம், வரும் ஜூன் 16 ஆம் தேதி அன்று பிரபல OTT தளமான Sony Liv-ல் திரையிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...