வரலாற்றில் இன்று – 06.07.2021 உலக ஜூனோசிஸ் தினம் (World Zoonoses Day)

 வரலாற்றில் இன்று – 06.07.2021 உலக ஜூனோசிஸ் தினம் (World Zoonoses Day)

ஜூனோசிஸ் என்பது விலங்குகளுக்கு ஏற்படும் வியாதி. இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. காட்டு விலங்குகள், வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், எலி மூலமும் மனிதர்களுக்குப் பரவுகின்றன. சில ஆட்கொல்லி நோய்களும் விலங்குகள் மூலம் பரவுகின்றன. விலங்குகள் மூலம் பரவும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஜூலை 6ஆம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பரிதிமாற் கலைஞர்

தமிழுக்கு தொண்டாற்றிய பரிதிமாற் கலைஞர் 1870ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி.

இவர் தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஆவார். இளம்வயது முதலே தமிழ் மொழியின் மீதும்,

இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

தமிழ் அறிவும், ஆர்வமும் கொண்ட மாணவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாஸ்திர நூல்களைக் கற்பித்தார். சென்னை செந்தமிழுரைச் சங்கத்தை நிறுவினார்.

இவர் சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழில் மாற்றிக்கொண்டார். இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்ட பரிதிமாற் கலைஞர் 1903ஆம் ஆண்டு வயதில் மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

  • 1946ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ் (George Walker Bush) பிறந்தார்.
  • 2002ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி இந்திய தொழிலதிபர் திருபாய் அம்பானி மறைந்தார்.
  • சர்வதேச கூட்டுறவு தினம் : ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமை (ஜூலை 6) 1923 முதல் பன்னாட்டு கூட்டுறவு ஒன்றியத்தினால் சர்வதேச கூட்டுறவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • 1986ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி முன்னாள் இந்தியத் துணைப் பிரதமர் ஜெகசீவன்ராம் மறைந்தார்.
  • 1854ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி ஓமின் விதியை உருவாக்கிய ஜார்ஜ் ஓம் மறைந்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...