“ஆதாரில் திருத்தம்” அனைத்தும் 5 நிமிடத்தில் மொபைல் ஆப்-ல் மாற்றலாம்..!
குடிமக்கள் அனைவரும் ஒரே மாதிரியான ஆதார் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் UIDAI புதிய மேம்படுத்தப்பட்ட செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்பதை பார்க்கலாம்.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் தற்போது வேகமாக அனைத்து இடங்களிலும் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது இதன் மூலம் நமக்கு பல்வேறு சிரமங்கள் குறைகிறது. அந்த வகையில் அரசு வழங்கிய ஆதார் அட்டையில் நீங்கள் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் அதனை வீட்டில் இருந்தே செய்து கொள்ளலாம்.
அதற்கான புதிய வசதியை தற்பொழுது UIDAI அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஆன்லைன் சேவையை அணுகக்கூடிய பயனர்களுக்கு எளிதாக்கும் முயற்சியாக இந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் நீங்கள் 35 ஆன்லைன் ஆதார் சேவைகளை பெறமுடியும்.
மொபைல் செயலியில் ஆதார் அப்ளிகேஷனை பயன்படுத்தும் நபர்களுக்கு UIDAI இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளது. அதில் தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் முந்தைய பதிப்புகளை நீங்கள் பதிவிறக்கம் செய்து இருந்தால் அதை நீக்கி, தங்கள் மொபைலில் 35 ஆதார் சேவைகளைப் பெற சமீபத்திய mAadhaar ஐ பதிவிறக்கம் செய்யுமாறு UIDAI பயனர்களைக் கேட்டுக்கொண்டது. இந்த சேவைகளில் பெரும்பாலானவை ஏற்கனவே UIDAI இணையதளத்தில் கிடைத்தன ஆனால் பயனர்களுக்கு மொபைல் செயலி மூலம் கிடைக்கிறது.
ஆதார் அட்டையை பதிவிறகக்ம் செய்வது. உங்களுடைய ஆதார் நிலையை சரிபார்க்கவும் UID மற்றும் EID மீட்டெடுப்பதற்கான திறன், ஆதார் சரிபார்ப்பு சேவைகள், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் / மின்னஞ்சல் முகவரியின் புதுப்பிப்பு என அனைத்தும் மாற்றி கொள்ளலாம்.
மெய்நிகர் ஐடியின் உருவாக்கம்(Generation of virtual ID), பேப்பர்லெஸ் ஆஃப்லைன் இ-வெரிஃபிகேஷன், உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு கண்டறியும் வசதி என பல்வேறு அம்சங்களுடன் இந்த செயலில் ஒதுக்கப்பட்டுள்ளது இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்யலி மொழி பன்முகத்தன்மை வாய்ந்தது மக்களுக்கு இதன் வசதிகளை எளிதில் அணுக மொழி ஒரு தடையாக இருக்க கூடாது என்பதை உறுதிப்படுத்த, இந்த செயலியில் மொத்தம் 13 வெவ்வேறு மொழிகளில் வருகிறது, அவற்றில் ஒன்று ஆங்கிலம். மற்ற இந்திய மொழிகளான இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகியவை அடங்கும்.