அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் 5 பேர் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கம்

 அதிமுகவிலிருந்து  நிர்வாகிகள் 5 பேர் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கம்

அதிமுகவிலிருந்து ஈரோடு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 5 பேர் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும், முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில், நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, கழக வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், ஈரோடு புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கந்தசாமி, ஈரோடு புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வரதராஜ், கோபிசெட்டிபாளையம் நகர கழக செயலாளர் காளியப்பன் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா தொலைபேசியில் உரையாடி வரும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கிட்டத்தட்ட சசிகலாவின் ஆடியோக்கள் 100ஐ நெருங்க உள்ள நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அக்கட்சியின் இரட்டை தலைமையான ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் தெரிவித்தனர்.

அதன்படி தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருவது வாடிக்கையாக மாறியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...