மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பிரச்சாரம்

 மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பிரச்சாரம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும், சில கட்சி தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இரண்டாம் கட்ட பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் ஏப்ரல் 4- ஆம் தேதி மாலையுடன் நிறைவடையும் நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் இரண்டாம் கட்ட பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். கோடம்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இடைவெளியின்றி தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கமல்ஹாசன் மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் கூறியதாவது, “நான் பா.ஜ.க.வின் B டீம் இல்லை; காந்தியின் A டீம். வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை. மக்கள் நீதி மய்யம் வன்முறையைக் கையில் எடுக்காது; சட்டத்தை மட்டுமே கையில் எடுக்கும். ஊழல் கட்சிக்கு மாற்று மற்றொரு ஊழல் கட்சி இல்லை. புதிய வாக்காளர்கள் அரசியலைப் புரட்டிப் போட உள்ளனர். எங்கள் வேட்பாளர்களை உங்களுக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்கள் உங்களில் ஒருவர்தான். இவர்கள் உங்கள் சேவகர்கள். அவர்கள் உங்களுக்குச் சேவை செய்வதற்காக நீங்கள் மநீம வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...