வரலாற்றில் இன்று – 12.10.2020 உலக மூட்டு நோய் தினம்

 வரலாற்றில் இன்று – 12.10.2020 உலக மூட்டு நோய் தினம்

1996ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 12ஆம் தேதியை சர்வதேச மூட்டு அழற்சி நோய் தினம் (அ) உலக ஆர்த்ரிடிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இத்தினம் கீல்வாதம் மற்றும் தசை நோய்கள் (RMDs) பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.

நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சமூக வலைதளங்களின் மூலம் பாரமரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிப்பது இத்தினத்தின் நோக்கமாகும்.

எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி

கப்பல்களில் பயன்படும் சுழிதிசைகாட்டியை (Gyrocompass) கண்டறிந்த எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1860ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி பிறந்தார்.
இவர் ஜப்பானீஸ் நிறுவனங்கள் மற்றும் ஜப்பானீஸ் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.

அமெரிக்க கண்டுபிடிப்பாளரான எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1930ஆம் ஆண்டு நியூயார்க்கில் மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1918ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி இந்திய தொழிலதிபர் கிருஷ்ண குமார் பிர்லா (கே.கே.பிர்லா) பிறந்தார்.

1964ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. அதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்கு கொண்டு சென்ற முதலாவது விண்கலம் ஆகம்.

1999ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி உலகின் மக்கள் தொகை 6 பில்லியனை எட்டியது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...