வார ராசிபலன்கள் (12.10.2020 – 18.10.2020)

 வார ராசிபலன்கள் (12.10.2020 – 18.10.2020)

மேஷம் :

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சுயதொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். அரசின் மூலம் ஆதாயம் உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். உறவினர்களிடம் இருந்துவந்த உறவு நிலை மேம்படும். பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் எண்ணங்கள் ஈடுபடும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் எல்லை சுவாமிகளை வழிபாடு செய்து வர எண்ணத்தெளிவும், உத்வேகமும் கிடைக்கப்பெறுவீர்கள்.

ரிஷபம் :

தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடக்கவும். தொழில் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வர பணி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும்.

மிதுனம் :

தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் சாதகமான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். போட்டி, பந்தயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். கையாளும் பொருட்களில் கவனத்துடன் செல்படவும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். உயர் கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் குருமார்களை வழிபாடு செய்து வர தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

கடகம் :

கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். கலைஞர்களுக்கு திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும். வாரிசுகளின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். வேள்விகளில் கலந்துக்கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். இளைய சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

வழிபாடு :

குலதெய்வ வழிபாடு செய்து வர வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும்.

சிம்மம் :

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். வாகனப் பயணங்களில் கவனத்துடன் செல்லவும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய முயற்சிகள் ஈடேறும். தந்தை மற்றும் வாரிசுகளுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமைதோறும் அம்பிகையை வழிபாடு செய்து வர மனதில் தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.

கன்னி :

நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.

வழிபாடு :

திங்கட்கிழமைதோறும் சிவபெருமானை வழிபாடு செய்து வர ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

துலாம் :

தொழிலில் புதுவிதமான திட்டங்களை தீட்டுவீர்கள். இளைய உடன்பிறப்புகளால் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகளின் வழியில் பெருமை உண்டாகும். மனதைரியத்துடனும், பொறுமையுடனும் செயல்பட்டு எடுத்த காரியங்களை முடிப்பீர்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். வாகன அபிவிருத்தி உண்டாகும். பணியில் ஏற்ற பொறுப்புகளை தாங்களே செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும்.

வழிபாடு :

சனிக்கிழமைதோறும் சொர்ண பைரவரை வழிபாடு செய்து வர எண்ணத்தெளிவு உண்டாகும்.

விருச்சிகம் :

பயணங்களால் இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மறைந்து இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வாரிசுகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தனவரவுகளால் சேமிப்புகள் உயரும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். தாயிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

வழிபாடு :

சஷ்டி தினத்தன்று முருகரை வழிபட்டு வர உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் தெளிவுகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

தனுசு :

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் நட்பு அறிமுகம் உண்டாகும். எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். தாய்வழி உறவுகளிடம் சற்று கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுவது உத்தமம்.

வழிபாடு :

செவ்வாய்க்கிழமைதோறும் நாக தேவதைகளை வழிபட்டு வர வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும்.

மகரம் :

கடன்களை அடைக்க முயல்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் நட்பு உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த சங்கடங்கள் குறைந்து தெளிவு உண்டாகும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். சந்தேக எண்ணங்களால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.

வழிபாடு :

செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபட்டு வர உறவுகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

கும்பம் :

பதவி உயர்வால் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலம் சீராகும். தலைமை பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். கால்நடைகளுக்கு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடலாம். தொழிலில் புதிய நபர்களை கூட்டாளியாக சேர்ப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க முயல்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை சமாளித்து இலாபம் அடைவீர்கள். தந்தையிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட்டு வர ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

மீனம் :

மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானமாக நடந்து கொள்வீர்கள். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கூட்டாளிகளால் விரயச் செலவுகள் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகள் முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்கள் உண்டாகலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் உள்ள சில நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள்.

வழிபாடு :

ஞாயிற்றுக்கிழமைதோறும் விநாயகரை வழிபட்டு வர உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...