நிசப்தம் (SILENCE)- 2020 – சினிமா விமர்சனம் | சி.பி. செந்தில்குமார்
(கோஸ்ட் த்ரில்லர் / க்ரைம் த்ரில்லர்)
சம்பவம் 1 – 1972 ல ஒரு சம்பவம், ஒரு பங்களா. அதுல ஏதோ பார்ட்டி. ஒரு ஆளு, ஒரு லேடி டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க, அந்த லேடி டிரஸ் மாத்திட்டு வர்றப்போ அந்த ஆள் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டு இருக்கான். அதைப்பார்த்து அதிர்ச்சி ஆகி திரும்பும் லேடியும் ஆள் அவுட். அதுக்குப்பின் அடிக்கடி அந்த மாதிரி சம்பவங்கள் நடந்து அது ஒரு பேய் பங்களா, மர்ம மரணங்கள் நடக்கும் இடம்னு பேர் எடுத்து யாருமே அதை வாங்கலை. பல வருடங்கள் கழிச்சு 2019 ல ஒரு ஃபாரீன்காரர் அந்த பங்களாவை வாங்கி புதுப்பிக்கிறார்.
சம்பவம் 2 – இங்கே கட் பன்றோம், நாயகி ஒரு ஓவியர், இவருக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது, மாற்றுத்திறனாளி. அனாதை, அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த இவர் ஒரு வாய்ப்பு வந்து ஃபாரீன் போறார். அங்கே நடக்கும் ஒரு ஓவியக்கண்காட்சியில் ஒரு கோடீஸ்வரர் கம் இசைக்கலைஞர் அந்த ஓவியங்களைப்பார்த்து பிரமிச்சு டொனேஷன் எல்லாம் தர்றார். அந்த கோடீஸ்வரர் நாயகியை ப்ரப்போஸ் பண்ண அவளும் ஓக்கே சொல்றா.
சம்பவம் 3 – நாயகிக்கு ஒரு தோழி. இருவரும் சின்ன வயசுல இருந்தே அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவங்க. இருவரும் செம க்ளோஸ். நாயகி கூட யார் க்ளோசா பழகுனாலும் அவளுக்குப்பிடிக்காது. செம பொசசிவ். அவளுக்கு கோடீஸ்வரரை பிடிக்கலை, அவரும் சராசரி ஆம்பளை தான் நிரூபிக்கிறேன் பாரு என சவால் விடறா
சம்பவம் 4 – வில்லன் மேரேஜ் ஆனவன். ஒரு கட்டத்துல அவன் மனைவி அவளுக்கு துரோகம் பண்ணிடறா. அதை நேரில் பார்த்த வில்லன் பார்த்த இடத்துலயே மனைவி, கள்ளக்காதலன் இருவரையும் டுமீல். மன்மதன் பட ஹீரோ மாதிரி அதுக்குப்பின் வில்லன் கணவனுக்கு துரோகம் பண்ற மனைவிகளை கண்டறீந்து போட்டுத்தள்றான்
நாயகியோட தோழி திடீர்னு காணாம போய்டறா. அந்த பேய் பங்களாவில் நாயகியை விரும்பிய கோடீஸ்வரர் கொலை செய்யப்பட்டு கிடக்கார்
மேலே சொன்ன 4 சம்பவங்களும் ராஜேஷ் குமார் நாவல் பாணில் ஒண்ணுக்கொண்ணு எப்படி கனெக்ட் ஆகுது? என்பதை அமேசான் பிரைமில் காண்க
நாயகியா அனுஷ்கா ஷெட்டி. மாற்றுத்திறனாளி கேரக்டர் நல்லா பண்ணி இருக்கார். அப்பாவித்தனமான முகம் ஒரு பிளஸ்
கோடீஸ்வரரா மாதவன். ஓப்பனிங் ஷாங் முதல் கடைசி வரை அவர் நடிப்பு கச்சிதம்
நாயகியின் தோழியா ஷாலினி பாண்டே. பொசசிவ்னெசை ரொம்ப ஓவரா காட்றார். நல்ல வேளை ஜோதிகா இந்த கேர்க்டருக்கு போடலை
இந்த கேசை துப்பறியும் போலீஸ் ஆஃபீசரா அங்காடித்தெரு அஞ்சலி. கலகலப்பு படத்துல மதமதப்பா இருந்தவர் பேலியோ டயட் மூலம் இளைச்சு பரிதாபமா சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டாவில் ஃபோட்டோ அப்டேட்டி இருந்தார். நல்ல வேளை அவ்ளோ மோசம் இல்லை.
இன்னொரு போலீஸ் ஆஃபீசரா மைக்கேல். இந்த கேரக்டருக்கு தமிழ் ஆள் யாரையாவது போட்டிருக்கலாம்
இசை, ஒளிப்பதிவு கச்சிதம், படம் பூரா ஃபாரீன்ல நடப்பதால் ஒரு பிரம்மாண்டம் கிடைச்சிடுது. லொக்கேஷன் ஸ் , ஒளிப்பதிவு க்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க
சபாஷ் டைரக்டர்
1 படத்தில் என்னைக்கவர்ந்த முதல் அம்சமே அஞ்சலியோட காஸ்ட்யூம் டிசைன் தான். பில்லா படத்துல நயன் தாரா வுக்கு செட் ஆன மாதிரி காஸ்ட்யூம் சமீபத்தில் தமிழ் சினிமாவில் யாருக்கும் செட் ஆன மாதிரி தெரியல. அதுக்கு அடுத்ததா இதை சொல்லலாம்
2 கதையும், திரைக்கதையும் துரோகம், பெண் சம்பந்தப்பட்டது என்றாலும், கதை நடப்பது ஃபாரீனில் என்றாலும் இதை ஒரு யூ படமாக கண்ணியமாக காட்சிகளை வடிவமைத்தமைக்கு ஒரு ஷொட்டு
நச் வசனங்கள்
1 இந்த உலகத்துல ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு கதை உண்டு, அதுல க்ரைமும் உண்டு
2 சில க்ரைம்கள் வெளில தெரிஞ்சுடுது, பல க்ரைம்கள் அப்டியே அமுங்கிடுது, காலம் தான் அதை வெளிக்கொணரும்
3 க்ரைம் செயல்களில் ஈடுபடும் எல்லாருமே கிரிமினல்னு சொல்லிட முடியாது
4 புகழ் பெற்றவங்க பின்னால பணம் மட்டும் இல்ல, எதிரிகளும் இருப்பாங்க
5 இதுக்கு முன்னால நீங்க பேயைப்பார்த்திருக்கீங்களா?
யா, அது என் முன்னாள் மனைவி
5 இவ்ளோ பணம் டொனேஷனா ஏன் கொடுத்தீங்க?
இவ்ளோ அழகான ஓவியங்களை நீங்க ஏன் வரைஞ்சீங்கன்னு நான் கேட்டேனா? உங்களுக்கு வரைவது எப்படி மகிழ்ச்சியோ அப்படி தருவது எனக்கு மகிழ்ச்சி
6 பொசசிவ் நேச்சர்னு இதை சொல்வாங்க, மனுசனா இருக்கலாம், பொம்மையா இருக்கலாம், தனக்குப்பிடிச்ச ஒரு அம்சத்தை யார் கூடவும் ஷேர் பண்ணிக்க விரும்ப மாட்டாங்க
7 தான் விரும்புனவங்க வேற யார்க்கும் கிடைக்கக்கூடாதுனு விரும்புனவங்களையே கொலை பண்ணீன ஆட்கள் உண்டு
8 சில குற்றங்களுக்கு தீர்வு இன்னொரு குற்றமா இருக்கலாம்
9 ஒவ்வொரு கதைக்கும் ஒரு முடிவு இருக்கற மாதிரி ஒரு ஆரம்பமும் இருக்கும், அதைத்தான் தேடனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் டார்கெட் துரோகம் செய்யும் மனைவி தான். ஆனா மணமான பெண்களை கொலை பண்றது ஓக்கே, ஆனா மணம் ஆகாத ஒரு பெண்ணைக்கொல்வது ஏன்? அதுக்கு விளக்கம் இல்லை
2 ஃபார்ம் ஹவுஸ் சாவியை போலீஸ் கண்டுபிடிச்சதுக்கு வில்லனின் நண்பன் அந்த போலீசை போட்டுத்தள்ளுவது எதுக்கு ? அந்த சாவியை வெச்சு என்னத்தை பண்ண முடியும்,? ஆனானப்பட்ட 2000 ரூபா புது நோட்டு கேசே ஒண்ணும் இல்லாம பொறப்போஒ அந்த ஒரு சாவிக்காக ஒரு கொலை ஓவர்
3 வில்லன் பக்கம் நியாயம் இருக்கு. அவர் வீழ்த்தப்படுவது ஏற்கமுடியாமல் போவது திரைக்கதையின் பலவீனம், இதே பிரச்சனை எந்திரன் 2 படத்துக்கும் வந்தது. எப்பவும் வில்லனின் கேரக்டர் ஸ்கெட்ச் அனுதாபம் ஏற்படுத்தும் விதமா அமைச்சா ஹீரோ ஜெயிக்கும்போது நமக்கு உறசாக்ம வராது
சி.பி ஃபைனல் கமெண்ட் – க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம்., அமேசான் பிரைம்ல கிடைக்குது. ரேட்டிங் 2.75 / 5 , ஆனந்த விகடன் எதிர்ப்பார்ப்பு மார்க் – 40
#NISHABDHAM #SILENCE #நிசப்தம்