வரலாற்றில் இன்று – 15.08.2020 இந்திய சுதந்திர தினம்

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்…!

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. இந்நாளில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், பூரண சுயராஜ்ஜியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவு செய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான வழிகள் குறித்து அவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். அதன் முதல் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் ஜனவரி 26. இது 1950ஆம் ஆண்டுமுதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ அரவிந்தர் கோஷ்

விடுதலை இயக்க வீரரும், ஆன்மிக ஞானியுமான ஸ்ரீ அரவிந்தர் 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் அரவிந்தகோஷ்.

பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு தேசிய விழிப்புணர்வு, சுதேசி இயக்கம், ஒத்துழையாமை, தேசியக் கல்வி இயக்கங்களுக்கு ஆதரவு திரட்டினார். திலகர், சகோதரி நிவேதிதா உடன் ஆழமான நட்பு கொண்டிருந்தார்.

இவர் சீடர்களுக்கு எழுதிய ஆயிரக்கணக்கான குறிப்புகள் திரட்டப்பட்டு லெட்டர்ஸ் ஆன் யோகா (Letters on Yoga) என்ற நூலாக வெளியிடப்பட்டது.

சிறந்த கவிஞர், சரித்திரப் பேராசிரியர், அரசியல்ஞானி, எழுத்தாளர் என பன்முகத்திறன் கொண்ட அரவிந்தர் தனது 78வது வயதில் (1950) மறைந்தார்.

நெப்போலியன் போனபார்ட்

பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் 1769ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரான்ஸின் கோர்சிகா தீவில் உள்ள அஜாஸியோ நகரில் பிறந்தார்.

இவர் போர் வீரருக்கான பயிற்சியை முடித்து, 2-ம் நிலை லெப்டினன்டாக (Second lieutenant) 1785ஆம் ஆண்டு பதவி ஏற்றார். 1796ஆம் ஆண்டு படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். இத்தாலியில் ஆஸ்திரிய படைகளை முறியடித்து புகழ்பெற்றார். பிரெஞ்சு மக்களின் பேராதரவுடன் 1804ஆம் ஆண்டு பிரான்ஸ் மன்னராக முடிசூட்டிக்கொண்டார்.

பல போர்களில் வெற்றியை குவித்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 51வது வயதில் (1821) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.

1931ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வேதியலுக்கான நோபல் பரிசு பெற்ற ரிச்சர்டு கெக் பிறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!