இன்றைய தினப்பலன்கள் (15.08.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (15.08.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

புதியவற்றை கற்பதில் ஆர்வம் உண்டாகும். குடும்ப பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதுவிதமான முயற்சிகளும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். எதையும் செயல்படுத்துவதற்கான வல்லமை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : ஆர்வம் உண்டாகும்.
பரணி : பிரச்சனைகள் குறையும்.
கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.

ரிஷபம் :

எந்தவொரு செயல்பாடுகளிலும் கர்வமின்றி செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சொந்தமாக மனை வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
ரோகிணி : எண்ணங்கள் மேம்படும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

மிதுனம் :

மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். தோற்றப்பொலிவு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் ஏற்படும். கண்பார்வையில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : எண்ணங்கள் தோன்றும்.
திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.
புனர்பூசம் : மேன்மையான நாள்.

கடகம் :

வாக்கு சாதுர்யத்தால் மேன்மை உண்டாகும். செய்யும் செயல்களில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது நன்மை அளிக்கும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் தேடல் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
பூசம் : தேடல் அதிகரிக்கும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

சிம்மம் :

சகோதரர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். தனவரவில் இருந்துவந்த ஏற்றத்தாழ்வுகள் குறையும். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : ஒற்றுமை மேம்படும்.
பூரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திரம் : தீர்வு கிடைக்கும்.

கன்னி :

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் புதிய தொழில் தொடங்குவதற்கான எண்ணங்களும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : தடைகள் அகலும்.

துலாம் :

குடும்ப உறுப்பினர்களின் மூலம் பொருளாதாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். சம வயதினரின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : பிரச்சனைகள் நீங்கும்.
சுவாதி : ஆதரவான நாள்.
விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிகம் :

வெளியிடங்களுக்கு செல்லும்போது உடைமைகளில் கவனம் வேண்டும். புதிய மனை தொடர்பான செயல்பாடுகளில் இழுபறியான சூழல் உண்டாகும். மனதில் எழும் கோபங்களையும், உணர்ச்சிகளையும் மற்றவர்களின் மீது செலுத்தாமல் இருப்பது நன்மையளிக்கும். கால்களில் அவ்வப்போது வலிகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : இழுபறியான நாள்.
கேட்டை : கோபங்களை தவிர்க்கவும்.

தனுசு :

வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பணிகளில் பொறுப்புகளும், அதிகாரமும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : முன்னேற்றமான நாள்.
பூராடம் : ஒற்றுமை மேம்படும்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மகரம் :

தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். எந்தவொரு செயலிலும் நிதானமாக செயல்பட வேண்டும். ஆடம்பரம் தொடர்பான பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : அனுபவம் ஏற்படும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.

கும்பம் :

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். கலகலப்பான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் இருப்பவர்களுக்கு இலாபம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : சிந்தனைகள் மேலோங்கும்.
சதயம் : இலாபம் உண்டாகும்.
பூரட்டாதி : மேன்மையான நாள்.

மீனம் :

இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். கணிதம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கான அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்யும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் மனதிருப்தி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : தனவரவுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : மனத்திருப்தி ஏற்படும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...