வரலாற்றில் இன்று – 14.08.2020 வேதாத்திரி மகரிஷி

 வரலாற்றில் இன்று – 14.08.2020 வேதாத்திரி மகரிஷி

‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என்ற தாரக மந்திரத்துடன் உடற்பயிற்சிகளை வகுத்தளித்த மகான் வேதாத்திரி மகரிஷி 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பிறந்தார்.

இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது தியானம், யோகா, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ முறைகளை கற்றுத் தேர்ந்தார். 2-ம் உலகப் போரின்போது, முதலுதவிப் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார்.

மனிதகுலம் அமைதியுடன் வாழும் முறைகளை எடுத்துரைக்க 1958ஆம் ஆண்டு உலக சமுதாய சேவா சங்கத்தை தொடங்கினார். இது இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளிலும் இயங்கி வருகிறது. இவர் வகுத்த தியான முறைகள், கோட்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன.

உலக மக்களுக்காக இவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும். மேலும், இவர் ஏறக்குறைய தமிழிலும் ஆங்கிலத்திலும் சேர்த்து எண்பது நூல்களை எழுதியுள்ளார்.

பல லட்சம் மக்களுக்கு அருளுரைகளை வழங்கிய மகான் வேதாத்திரி மகரிஷி 2006ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தன்னு துவா(Tannu-Tuva) என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது.

1979ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி புதுச்சேரியின் முன்னாள் மேயரும், முதல் முதலமைச்சருமான எட்வர்ட் குபேர்(Edouard Goubert)மறைந்தார்.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இஸ்ரேல்-லெபனான் போர் முடிவுக்கு வந்தது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...