ஆஸ்துமா தீர

 ஆஸ்துமா தீர

தேவையான பொருட்கள்…

  1. துளசிச் சாறு – 200 மில்லி
  2. ஆடாதொடைச் சாறு – 100 மில்லி
  3. கண்டங்கத்தரி சாறு – 100 மில்லி
  4. கற்பூரவல்லிச் சாறு – 100 மில்லி
  5. புதினாச்சாறு – 50 மில்லி
  6. சுக்கு – 5 கிராம்
  7. ஓமம் – 5 கிராம்
  8. அதிமதுரம் – 20 கிராம்
  9. சித்தரத்தை – 20 கிராம்
  10. மிளகு – 5 கிராம்
  11. திப்பிலி – 5 கிராம்
  12. பச்சை கற்பூரம் – 5 கிராம்
  13. தேன் – 2 கிலோ

இதில் 6 முதல் 11 வரை உள்ள சரக்குகளை தூள் செய்து, 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்காய் சுண்டக்காய்ச்சவும். பின்னர் அதை வடிகட்டிவிடவும்.

1 முதல் 5 வரை உள்ள சாறுகளை ஒன்றாகக் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பாதியாக சுண்டிய பின் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கசாயத்துடன் கலந்து வைக்கவும். பின்னர் தேனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறு தீயாய் எரித்து கொதிக்க விடவும். தேனில் நுரை நீக்கி, ஏற்கனவே தயாரித்துள்ள கசாயத்தை தேனுடன் கலந்து சிறு தீயாய் எரிக்கவும். நல்ல பதத்தில் இறக்கிவிடவும்.

சூடு ஆறிய பின்பு, பச்சைக் கற்பூரத்தை தூள் செய்து மருந்துடன் கலந்துவிடவும். 5 மி மூன்று வேலையும் உணவுக்கு பின்பு எடுக்கவும். இம் மருந்து ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...