வரலாற்றில் இன்று – 03.08.2020 மைதிலி சரண் குப்த்

 வரலாற்றில் இன்று – 03.08.2020 மைதிலி சரண் குப்த்

விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கவிஞருமான மைதிலி சரண் குப்த் 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அருகே சிர்கான் என்ற ஊரில் பிறந்தார்.

இவரது முதல் முக்கிய படைப்பு “ரங் மைன் பாங்”(Rang mein Bhang) ஆகும். அதை தொடர்ந்து சாகேத், பாரத் பாரதி, ஜெயத்ரத்வத், கிஸான், விகட் பட் போன்ற பல நூல்களை படைத்துள்ளார்.

மகாத்மா காந்தி, வினோபா பாவே போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்டு இவர் பல விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.

மகாத்மா காந்தி இவரை ‘ராஷ்டிர கவி’ என்று புகழாரம் சூட்டினார். மேலும், இவருக்கு 1954ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூஷண் விருது அளிக்கப்பட்டது.

இவர் சில ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். தன் வாழ்நாள் கடைசி வரை எழுதிக்கொண்டே இருந்த இவர் தனது 78வது வயதில் (1964) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி சுவாமி சின்மயானந்தா மறைந்தார்.

1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1984ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்தியக் கால்பந்து வீரர் சுனில் சேத்ரி பிறந்தார்.

1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தேசிய கூடைப்பந்து சங்கம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...