சகுந்தலா தேவி – ஹிந்தி திரைப்படம் ஓர் பார்வை
கணக்கு
இந்த பாடத்தை கசப்பாய் தெரியும் பலருக்கு… கணக்கு நம் வாழ்வியலில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அத்தியாவசியமான தேவை என்று கூட சொல்லலாம்.
ஆம் நாம் சாப்பிடுகின்ற உணவில் இருந்து படுக்கப் போகும் படுக்கை வரைக்கும் அந்த கணக்கு மிக அத்தியாவசியமாக பயன்படுத்தப் படுகிறது. கணக்கு பலருக்கு கசப்பாய் இருக்கலாம்.
அதை கணக்கு பண்ணுவது என்பது மிக கடினமாக இருக்கலாம். அதை எல்லாம் தாண்டி ஒரு முக்கியமான இடத்தில் இருக்கிறது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் எல்லாம் இன்று முக்கியமான இடத்தை தொட்டு வெற்றியையும் பெற்று அதன் பரிமாணத்தை உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்படி நம் நாட்டில் பலர் கணித மேதைகள் இருந்தார்கள். இன்னும் சொல்லப் போனால் பூஜியமே நம் முன்னோர்களான இந்தியர்களால் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழி வந்தவர் தான்…
சகுந்தலா தேவி
தென்னிந்தியாவின் கணக்கியல் மேதை, மனித கம்ப்யூட்டர் என்று உலகமே பாராட்டிய ஒரு மாமேதை, கர்நாடக மாநிலத்தின் பெங்களுரில் பிறந்தவர். இவருடைய கணக்கு போடும் வேகத்தைப் பார்த்து உலகமே வியந்து போனது என்பது மறுக்க முடியாத வரலாற்று சம்பவம்.
இவர் நிறைய கணித பாடங்களை நமக்கு இலகுவாக உபயோக படுத்துவது எப்படி என்று அவருடைய சுவடுகளாக விட்டுச் சென்றிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
அப்படிப்பட்ட அந்த மாமேதையை மையமாக வைத்து ஒரு திரைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும். ஆம் அதுதான் இந்த சகுந்தலாதேவி என்ற ஹிந்தி திரைப்படத்தின் முக்கிய சாராம்சம்.
அவர் எப்படி கணக்கு செய்கிறார் என்பதை விட அவர் சொல்லும் அந்த எண்கள் மட்டுமே நம் நினைவில் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
தெற்கு மெத்தடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் அவர் ஒரு 201 இலக்க எண்ணின் 23வது மூலத்தை 50 நொடிகளில் 546,372,891 கணக்கிட்டார். ஆனால் அதனை சரிபார்க்க யுனிவாக் 1101 என்ற கணினியில் சிறப்பு மென்பொருள் ஒன்றை நிறுவியது குறிபிடத்தக்க விஷயமாகும். அந்த அளவிற்கு அவருடைய கணக்கு மிகவும் வேகமாக போடும் அளவிற்கு மூளை திறன் கொண்டவர்.
யூனிவாக் 1101 கம்ப்யூட்டரின் வேகம் இவரிடம் தோற்றுப் போகும் அளவிற்கு இவர் அதி புத்திசாலியான திறனை உடையவராக இருந்தார். பரிடோஸ் பேனர்ஜி என்ற ஐஏஎஸ் அதிகாரியை திருமணம் செய்து கொண்டு, இவருக்கு அனுபமா என்ற மகளை பெற்றார்.
இவர் உலகத்தில் செல்லாத இடமே கிடையாது என்ற அளவிற்கு உலகத்தை சுற்றி ஒரு கலக்கு கலக்கிய மேதை என்ற அதீதமான சக்தியோடு வலம் வந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
இவர் சில புத்தகங்கள் எழுதியிருக்கிறார். நிறைய கல்லூரிகளில் சொற்பொழிவாற்றி இருக்கிறார். கணிதத்தை பற்றி ஆனால் இவர் அதிகம் படிக்கவில்லை என்பது தான் ஒரு முக்கியமான செய்தி.
இவரைப் பற்றிய திரைப்படம் தற்போது உள்ள காலகட்டத்தில் தேவை என்பது உண்மை.
சகுந்தலா தேவி என்ற இந்த படத்தை வித்யாபாலன் மிக முக்கியமான அங்கம் வகித்து இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
அந்த படத்தில் சகுந்தலா தேவியாக அவர் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு நடிப்பு இல்லை நடிப்பல்ல வாழ்ந்திருக்கிறார் சகுந்தலாதேவியாக, அந்த 2 மணி நேரம் 7 நிமிடங்கள் அப்படி வாழ்ந்து இருக்கிறார்.
இந்த எழுத்துக்கள் என்பது ஒரு குழப்பம். ஆனால் எண்கள் என்னை கைவிடாது என்பது போன்ற வசனங்கள் படத்தை தூக்கி நிறுத்துகிறது. வித்யா கசம் என்ற கடவுள் மீது சத்தியம் என்ற வசனமும் அழுத்தம் பதிக்கிறது.
அனு மேனன் படத்தை இயக்கியிருக்கிறார். சோனி பிக்சர்ஸ் சார்பில் விக்ரம் மல்ஹோத்ரா படத்தை தயாரித்திருக்கிறார். எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் அனு மேனன். ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் வித்யாபாலன் இவருக்கு பத்மஸ்ரீ விருது மிக பொருத்தம்தான்.
ஒவ்வொரு பரிமாணங்களிலும் இவர் அந்த கதாபாத்திரமாக மாறி அந்த கற்பனை கதாபாத்திரமும் நிஜ கதாபாத்திரமும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
நிச்சயமாக இப்படி ஒரு படத்தை தந்ததற்காக சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தாருக்கும் அதை மிக அழகாக படம்பிடித்து அனுமன் அவர்களுக்கும் இது எழுதியவர்களுக்கும் கேமராவில் பதிவு செய்த கெய்கோ நகஹாரா அவர்களுக்கும் இதில் பணிபுரிந்த அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் என்று சொல்லவேண்டும்.
ஒரு பிறவி கலைஞரை இந்த உலகமே வியந்து பார்த்த அளவிற்கு நாம் பார்க்கவில்லை என்ற குறை இந்த படத்தின் மூலம் நிறைவேறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழில் இந்த படம் இல்லை என்று ஒரு குறையை தவிர தமிழில் இல்லையே தவிர ஆனால் அந்த பாத்திரம் நம்மை மிக அழகாக வசியப்படுத்துவது என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த சகுந்தலா தேவிக்கு வித்யாபாலனை தவிர வேறு யாரும் பொருத்தமாக அமைய மாட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய மகளாக நடிகை சந்தியா மல்ஹோத்ரா அப்படியே அனுமாவை கண் முன் காட்டியிருக்கிறார்.
ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தேர்வு இயக்குனரின் மிக தரமான படத்தை அளித்திருக்கிறது. அத்தனை கதாபாத்திரங்களும் நிஜமான சகுந்தலா தேவியின் முகத்தை ஒத்துப் போவது என்பதுதான் ஒரு ஆச்சர்யமான விஷயம்.
எல்லா கதாபாத்திரங்களும் தங்களுடைய பாத்திரத்தை உணர்ந்து அதை நன்றாக உள்வாங்கி இயக்குனர் சொன்னதையும் தாண்டி நடித்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த வெற்றிக்கான வழிமுறை சொல்ல வேண்டும்.
கடவுள் மீது சத்தியமாக என்று சொல்கிற அந்த வார்த்தைகள் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வசனங்கள் மிக நேர்த்தியாக பின்னப்பட்டிருக்கிறது. இது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டால் கடை கோடி தமிழனையும் சென்றடையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. காத்திருப்போம்.
நல்ல படம் என்று வரவில்லை என்பதை தாண்டி இப்படி படம் வராதா என்று ஏங்கிய காலங்களும் எல்லாம் தாண்டி இதோ வந்துவிட்டது. நல்ல ஒரு திரைப்படம்.
நாம் பெற்றோர் ஆகும் வரை நமது பெற்றோரின் அருமை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த படம்
ஒரு சின்ன கருத்து. இதை சகுந்தலா தேவியின் நவம்பர் 4 ஆம் தேதி பிறந்த நாளன்று வெளியிட்டு இருந்தால், இந்த கொரானா பிரச்சனையிலிருந்து நாம் தாண்டி இருப்போம். திரையரங்குகளில் சென்று பார்த்திருக்கலாம் சகுந்தலா தேவி அவர்களுக்கும் இன்னும் பெருமை சேர்க்கும், இன்னொரு விஷயமாக இருந்திருக்கலாம்.
ஆனால் சில காலத்தின் மாற்றங்களை நாம் தவிர்க்க முடியாது. என்ற ஆத்மார்த்தமான உண்மையை நாம் முன் வைத்து இந்த படத்தை நிச்சயமாக மனிதனாக பிறந்த அத்தனை பேரும் பார்க்க வேண்டுமென்ற ஒரு கருத்தை இங்கு பதிவு செய்வதில் மின் கைத்தடி பெருமைப்படுகிறது.
இந்த படத்தில் பணிபுரிந்த அத்தனை கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.